எதிர்நீச்சல் சீரியலால் சந்தித்த பிரச்சனைகள்..குடும்பத்தினர் கேட்ட கேள்வி..குணசேகரனின் உருக்கமான பதில்
எதிர்நீச்சல் சீரியலால் என்னுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது என நடிகர் மாரிமுத்து கூறி இருக்கிறார்.
சென்னை: நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வருகிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் தான் நடித்து பேசிய சில வார்த்தைகளால் நிஜ வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்து அவர் பேசியிருக்கிறார்.
காட்சிக்காக தான் பேசியதை எல்லாம் நிஜம் என்று நம்பி தன்னுடைய குடும்பத்தினரும் தன்னிடம் கேள்வி கேட்டது குறித்து நடிகர் மாரிமுத்து பல தகவல்களை கூறி இருக்கிறார்.

ரசிக்கப்படும் கேரக்டர்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டர் தான் பலராலும் பாராட்டப்பட்டும், திட்டப்பட்டும் வருகிறது. இந்த சீரியலில் இந்த கேரக்டருக்கு மட்டும் தான் அதிகமான முக்கியத்துவமும் இருந்து வருகிறது. வில்லனாக இருந்தாலும் இவரை பலர் ரசிக்கின்றனர். குணசேகரனின் கேரக்டரில் இன்றும் பலர் இருக்கிறார்கள் என்று சொல்லும் வகையில் தான் இருக்கிறது. ஆனாலும் குணசேகரன் தன்னுடைய தனி பாடி லாங்குவேஜ் மற்றும் பேச்சு திறமையின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் தனி இடத்தை பிடித்து விட்டார்.

வாழ்க்கையிலும் பிரச்சனை
இந்த நிலையில் குணசேகரன் ஆக நடிக்கும் மாரிமுத்துவிற்க்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் சமீபகாலமாகவே வந்த வண்ணமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக சில வாரங்களுக்கு முன்பு இவர் ஒரு பெண்ணுக்கு தன்னுடைய மொபைல் நம்பரை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அதற்கான விளக்கத்தையும் தைரியமாக மாரிமுத்து கொடுத்து இருந்தார். அதற்கு பிறகு தற்போது அந்த செய்தி கொஞ்சம் அடங்கி இருக்கும் நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் மாரிமுத்து இந்த எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதால் தன்னுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

குணசேகரன் திட்டியது
அதற்கு காரணம் எதிர்நீச்சல் சீரியலில் சக்தி மற்றும் ஜனனியின் திருமணத்தின்போது ஜனனி திருமண மேடைக்கு டான்ஸ் ஆடிய படியே வசுவோடு வரும்போது, இது எல்லாம் நம்ம பாரம்பரியம் கிடையாது. எப்படி கல்யாண மேடைக்கு ஒரு கல்யாண பொண்ணு டான்ஸ் ஆடிட்டு வரலாம் என்று அதிகமாக திட்டி இருப்பார். அப்போது பறக்கும் ட்ரோன் கேமராக்களையும் அவர் திட்டி இருப்பார். இந்த நிலையில் அந்த நேரத்தில் மாரிமுத்துவின் மீது பல்வேறு புகார்கள் எழுந்து வந்தது. ஒரு இயக்குனராக இருந்து கொண்டு இப்படி எல்லாம் பேசலாமா என்று பலர் அவரைப் பற்றி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த நிலையில் தற்போது அதற்கு விளக்கமும் கொடுத்து இருக்கிறார்.

பிரச்சனைக்கு விளக்கம்
ட்ரோன் கேமரா வைத்து படம் எடுக்கும் நபர்கள் எல்லாம் ஒரு சங்கம் வைத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எனக்கு போன் செய்து என்னிடம் கேட்டார்கள். அப்போது நான் அதற்கு விளக்கம் கொடுத்தேன். நாங்கள் அதை தவறு என்று சொல்லவில்லை. அந்த சீரியலில் கதை எப்படி இருக்கிறது அதற்கு தகுந்தால நான் நடித்தேன் அது என்னுடைய கருத்து அல்ல என்று விளக்கம் கொடுத்தேன். அது மட்டுமல்லாமல் இந்த ட்ரோன் கேமராவுக்கு நான் எதிரி எல்லாம் கிடையாது. அந்த சூட் எடுத்தது கூட ட்ரோன் கேமரா வைத்து தான் எடுத்தோம் என்று விளக்கம் கொடுத்து அந்த பிரச்சினையை முடித்து வைத்தேன்.

உறவினர்களின் கேள்வி
ஆனாலும் எதிர்நீச்சல் சீரியலில் நான் நடித்திருந்ததை பார்த்து என்னுடைய அக்கா மற்றும் சில உறவினர்கள் எனக்கு போன் செய்து எதற்காக இப்படி கல்யாண வீட்டுல பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்டாங்க. நான் அதற்குப் பிறகு இது நான் நடிக்கும் சீரியல் அந்த கதைப்படி நான் அப்படி நடித்தேன். அங்கு ஒரு சண்டையும் கிடையாது பிரச்சனையும் கிடையாது என்று விளக்கம் கொடுத்தேன். அதற்கு பிறகு தான் அவர்களுக்கே புரிந்தது. நான் யார் கூடவோ சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தான் அவர்களும் பயந்துவிட்டார்கள் என்று தற்போது கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் சீரியலில் நான் முதலில் அறிமுகமாகும் போது பலரும் சீரியலில் நடிக்க வேண்டுமா என்று கேட்டார்கள் ஆனால் இப்போதுதான் தெரிகிறது எனக்கு கிடைக்கும் வரவேற்பு எந்த திரைப்படங்களிலும் இந்த அளவிற்கு கிடைக்கவில்லை என்பது என்று கூறி இருக்கிறார் .அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications