காதல் தோல்வின்னா சரக்கு அடிக்கணுமா.. நான் வீட்டில் எப்படி தெரியுமா.. எதிர்நீச்சல் மாரிமுத்து பேட்டி
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில்தான் நான் அப்படி, மற்றபடி வீட்டில் எப்படி இருப்பேன் தெரியுமா என நடிகர் மாரிமுத்து பேட்டி அளித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில்ஆதிகுணசேகரனாக நடித்து வருபவர் நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து. இவர் இயக்குநராகவும் சினிமா நடிகராகவும் சோபிக்கவில்லை.
திரைப்படங்களில் கூட சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு ஜாக்பாட் அடித்தது போல் வந்தது எதிர்நீச்சல் சீரியல். அதில் தனது மனைவியையும் தனது தம்பி மனைவியையும் ஆணாதிக்கம் கொண்டு நடத்தும் காட்சிகள் கோபத்தை வரவழைத்தாலும் அவர் நடிப்பு அபாரம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஏய் இந்தாம்மா, ஏய் என்னம்மா ஏய் போன்ற வார்த்தைகள் பயன்படுத்தியே அவர் வீட்டு பெண்களை அழைப்பார். ஜனனி ஏதாவது எதிர்த்து பேசினால் அவரது முகத்தில் அத்தனை ரசமும் தெரியும். பாடி லேங்குவேஜும் சூப்பர். இயக்குநராக இருந்திருக்கிறார், இது கூட நடிக்காவிட்டால் எப்படி என்கிறீர்களா அதுவும் வாஸ்தவம்தான்.
எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்துதான் டாப். அவருக்கு என தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் ரசிகர்களுடன் ஒரு நிகழ்ச்சியில் உரையாடினார். அப்போது அவர் அளித்த பதில்களை பார்க்கலாம். லியோ படத்தில் நடிக்க என்னை லோகேஷ் கனகராஜ் அழைத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். நல்ல ஊதியமும் பெற்றிருப்பேன்.
அவர் அழைப்பார் என எதிர்பார்த்தேன், ஆனால் அது நடக்கலை. விக்ரம் படத்தில் நடித்திருக்கிறேன். அது போல் லியோ படத்திலும் வாய்ப்பு கொடுங்கள் என கேட்காமல் கேட்க நினைத்தேன். காதலில் தோற்று போனால் அதுவே வாழ்க்கையின் இறுதி காலம் இல்லை. அதன் பிறகும் வாழ்க்கை இருக்கு. இது ஆணுக்கும் பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும்.
எனக்கு மிகவும் பிடித்த வாசகம்- தடைக்கல்லை படிக்கலாக்கு. காதல் தோல்வி என்பதெல்லாம் எண்டே கிடையாது. வாழ்க்கையில் அனுபவிக்க நிறைய இருக்கு. தோல்வி அடைந்தால் சரக்கு அடித்துக் கொண்டு வீட்டுக்குள் முடங்கிகிடப்பது தவறு. உன் முன்பு வாழ்ந்து காட்டுகிறேன் என்ற வைராக்கியம் வேண்டும். எதிர்நீச்சல் சீரியலில்தான் நான் அப்படி.. ஆனால் வீடடில் லல்வியான ஆள்.
யாரையும் அதட்டி பேச மாட்டேன். இளம்பெண்களுக்கு தமிழ் புத்தகங்கள் வாங்கித் தரலாம் என நினைக்கிறேன். ஏன்னு கேட்டீங்கன்னா, அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. தமிழ் மொழியை நன்கு உச்சரித்தாலே நன்றாக இருக்கும். தமிழ் மாதங்களை சொன்னால் கூட கல்லூரி மாணவர்களுக்கு புரிவதில்லை, ஆங்கில மாதத்தில் சொல்லுங்கள் என்கிறார்கள்.
எதிர்நீச்சல் சீரியலில் எல்லாரும் என்னை திட்டுகிறார்கள். அப்படி என்றால் அந்த கதாபாத்திரம் சரியாக இருக்கிறது என்றுதானே அர்த்தம். அந்த சீரியல் ஆரம்பித்து 200 எபிசோட் வரைதான் என்னை திட்டினார்கள். இப்போது என்னை ஹீரோவாக்கிவிட்டார்கள். அதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. இவ்வாறு மாரிமுத்து தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications