இரவு 2 மணிக்கு வந்த போன் கால்.. இரவு போனை சுவிட்ச் ஆஃப் செய்யும் மயில்சாமி.. அப்போவே சொன்ன காரணம்
ஒரு நபர் என்னிடம் சில கேள்விகளை இரவு போன் செய்து கேட்ட காரணத்தினால் நான் இரவு போனை சுவிட்ச் ஆப் செய்து விடுவேன் என்று மயில்சாமி பேசிய பழைய வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
சென்னை: நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று காலமானார். இன்று அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவர் இதற்கு முன்பு பேசிய பல வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இரவு தான் செல்போனை சுவிட்ச் ஆப் செய்வதற்கு என்ன காரணம் என்பது பற்றி ஒரு வீடியோவில் மயில்சாமி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நண்பர் ஒருவர் அடுத்தவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி இரவு 2 மணிக்கு போன் செய்ததால் அதற்குப் பிறகு நான் இரவு ஃபோனை சுவிட்ச் ஆப் செய்து விடுவேன் என்று அந்த வீடியோவில் மயில்சாமி பேசியிருக்கிறார்.

நடிகர் மயில்சாமி மறைவு
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை ரசிகர்களுக்கு வழங்கி பலருடைய கவலைகளை மறக்க வைத்து சிரிக்க வைத்த ஒரு உன்னதமான கலைஞர் நேற்று திடீரென மரணம் அடைந்தார் இவருடைய திடீர் இறப்பு திரைத்துறை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் மத்தியில் அதிர்ச்சியை மட்டுமல்லாமல் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது தொடர்ந்து அவருடைய இறப்பிற்கு ரசிகர்களும் பிரபலங்களும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் அவருடைய பழைய வீடியோக்கள் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இரவு வந்த ஃபோன் கால்
இந்த நிலையில் ஒரு பேட்டியில் இரவு நேரத்தில் தான் போனை ஆப் செய்து வைத்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்று என்பது பற்றி அவரே கூறி இருக்கிறார். அதில் சிலர் விலை உயர்ந்த செல்போன் வைத்திருந்தாலும் நான் போன் செய்தால் எடுப்பது இல்லை. ஆனால் யார் எந்த நேரத்தில் போன் செய்தாலும் நான் எடுத்துப் பேசுவேன். ஒரு நாள் இரவு 2 மணிக்கு ஒருவர் எனக்கு போன் செய்து எந்த நடிகையை எந்த நடிகர் வச்சிருக்காருன்னு கேட்டார்.

சுவிட்ச் ஆப் பண்ண காரணம்
அதுமட்டுமல்லாமல் யார் யாரை வைத்திருந்தால் எனக்கு என்ன? அது சரி, அந்த ஆளு எதற்காக எனக்கு போன் செய்து அப்படி ஒரு கேள்வியை என்கிட்ட கேட்டார் என்று யோசித்து யோசித்து எனக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு நான் இரவு நேரத்தில் போனை ஆப் செய்து வைத்து விடுகிறேன் என்று கூறியிருக்கிறார். மயில்சாமி சொன்ன அந்த கதையை கேட்டு பலரும் சிரித்திருந்தனர். ஆனால் இப்போது அந்த கதையை நினைவு கூறும் ரசிகர்களுக்கு கண்ணீரோடு சிரிப்பு வருகிறது.

போனை எடுக்காத நண்பர்கள்
தான் சம்பாதித்த பணத்தை எவர் கஷ்டம் என்று வந்தாலும் அவர்களுக்கு கொடுத்துவிட்டு, பிறகு தன்னிடம் பணம் இல்லை என்றாலும் இவர் சக நண்பர்களை தொந்தரவு செய்து பணம் வாங்கி அவர்களுக்கு கொடுத்து வந்திருக்கிறார். இதை தற்போது பல நடிகர்களும் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர் அந்த வீடியோவில் நான் போன் செய்தால் பலர் போனை எடுக்கவில்லை என்று கூறி இருக்கிறார். அதை இப்போதும் ரசிகர்கள் நினைவு கூர்ந்து நல்லவர்களுக்கு காலம் ஏது? இவர் உதவிக்காக தான் போன் செய்கிறார் என்று பலர் எடுக்காமல் இருந்திருக்கிறார்கள். அதனால் தான் அந்த வேதனையை தன்னுடைய காமெடி மூலமாகவே இவர் வெளிக்காட்டி இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். நிலையில்லா வாழ்க்கை என்பது மயில்சாமியை பார்க்கும்போது புரிகிறது. அவர் செய்த உதவியால் அவர் இறந்தாலும் அதிகமாக பலரால் தேடப்படும் நபராக இருக்கிறார்.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications