Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பாவை பற்றி தப்பாக பேசாதீங்க! நடந்தது இதுதான்.. நடிகர் மயில்சாமியின் மகன்கள் விளக்கம்

நடிகர் மயில்சாமியின் இறப்பு பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு உண்மையான விளக்கத்தை அவருடைய மகன்கள் கொடுத்திருக்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மயில்சாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார்.

நடிகர் மயில்சாமிக்கு ஏற்கனவே இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்திருந்தது என்றும் அவர் தொடர்ந்து மது அருந்தினார் என்றும் சிலர் கூறியிருந்தனர்.

நடிகர் மயில்சாமி இறப்பிற்கு உண்மையான காரணம் என்ன என்பது பற்றி முதல்முறையாக வெளிப்படையாக பேசியிருக்கின்றனர்.

நண்பர்கள் கூறிய தகவல்கள்

நண்பர்கள் கூறிய தகவல்கள்

நடிகர் மயில்சாமி திடீரென கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார். அவருடைய இறப்பிற்கு பிறகு அதிகமான ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தள பக்கத்தில் அவர் இறப்பு பற்றி தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வந்தனர். அதே நிலையில் அவரோடு நடித்த, பழகிய நண்பர்களான பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வருத்தங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் மயில்சாமி இறப்பிற்கு இரண்டு முறை ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்ததாகவும் இது மூன்றாவது முறை வந்ததாகவும்,அவருடைய உணவு முறையை அவர் சரியாக கவனித்துக் கொள்ளாததும் ஒரு காரணம் என்று அவருடைய நெருங்கிய நண்பர்களில் சிலர் தங்களுடைய வருத்தங்களாக தெரிவித்து வந்தனர். அது குறித்து தற்போது அவருடைய மகன்கள் விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.

ஏன் இப்படி செய்யணும்

ஏன் இப்படி செய்யணும்

அதில் அப்பாவின் மறைவு பற்றி எங்களிடமே கேட்டிருக்கலாம். அதனை விடுத்து பலர் மிகவும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். நேற்று கூட youtube இல் பார்த்தேன் மயில்சாமிக்கும் அவர்களுடைய மகன்களுக்கும் சண்டை என்றெல்லாம் போட்டிருக்கிறார்கள். இதனை ஏன் பதிவிடுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்பா பற்றி பலருக்கும் தெரிந்தும் கூட இப்படி அவர்கள் வீடியோ போடுவது மனதிற்கு வருத்தமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

மது அருந்துதல் பற்றி விளக்கம்

மது அருந்துதல் பற்றி விளக்கம்

மேலும் குடிப்பழக்கத்தினால் தான் இறப்பு ஏற்பட்டது என்று சிலர் சொல்லி வருவதற்கு விளக்கம் கூறி இருக்கிறார்கள். அதில் அவர்கள் அப்படி சொல்வதில் எந்த பிரயோஜனமும் கிடையாது. அப்பா சில நிகழ்ச்சிகளில் நான் குடிப்பேன் என்று பேசி இருக்கிறார். அது அந்த நிகழ்ச்சியில் இருப்பவர் அவருடைய நண்பராக இருப்பார்கள். அதனால் அவர் ஜாலிக்காக அப்படி சொல்லி இருப்பார் ஆனால் எந்த இடத்திலாவது அவர் குடித்து யாராவது பார்த்து இருக்கிறார்களா? ஆரம்பத்தில் அப்பா குடித்திருந்தார். அதுவும் இரண்டு பேக் நான் தூங்குவதற்கு முன்பு போடுவேன் என்று கூறி இருக்கிறார். ஆனால் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்த பிறகு அவர் சுத்தமாக குடிக்கிறதையே விட்டுவிட்டார் என்று அவருடைய மகன் தெரிவித்திருக்கிறார்.

உண்மையான காரணம் இதுதான்

உண்மையான காரணம் இதுதான்

அதுமட்டுமல்லாமல் அவருக்கு இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறது. இது மூன்றாவது முறை என்றெல்லாம் கூறி வருகிறார்கள் ஏற்கனவே ஒரு 12 வருடங்களுக்கு முன்பு அப்பாவுக்கு பைபாஸ் சர்ஜரி செய்திருந்தது. அதற்கு பிறகு சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை தீப நாளில் தான் தான் அவருக்கு முதல் முறையாக ஹார்ட் அட்டாக் வந்தது. பிறகு இப்போது வந்திருக்கிறது. மத்தபடி அவர் அவருடைய சாப்பாடு விஷயத்தில் உடல் நலத்தை கவனிப்பதில் கவனமாகத்தான் இருந்தார். அவர் அதிகமாக கவலைப்பட்டது எல்லாம் கோவில், கடவுள் என்று அதிகமாக யோசித்து அலைந்திருக்கிறார். பிறகு அவரிடம் யாராவது உதவி என்று வந்துவிட்டால் அவர்களுக்கு எதையாவது செய்து விட வேண்டும். இல்லை என்றால் யாரிடமாவது உதவி பெற்று அவர்களுக்கு செய்ய வேண்டும். அதற்காகத்தான் அவர் அதிகமாக யோசித்துக் கொண்டு இருப்பார். டாக்டர் அவரிடம் முதல் முறை ஹார்ட் அட்டாக் வந்த பிறகு கூட அதிகமாக யோசிக்க கூடாது என்று சொன்ன பிறகும் அந்த ஒரு விஷயத்தை தான் மாற்றாமல் இருந்து வந்தார் என்று கூறி இருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+