விஜயகாந்த் இறப்பிற்கு அஜித் வராதது ஏன்? 10 லட்சம் தூக்கி கொடுத்தாரு.. மீசை ராஜேந்திரன் விளக்கம்
சென்னை: நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிக் கொண்டிருக்கும் போது, விஜயகாந்த் இறுதி சடங்கில் நடிகர் அஜித்குமார் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறார். அதோடு விஜயகாந்த் மற்றும் அஜித்குமார் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை இருந்தது என்பது குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
கடந்த வருடத்தில் பெரிய அளவில் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் பல பிரபலங்களின் இறப்பு அடுத்தடுத்து வந்தது. அதிலும் நடிகர் விஜயகாந்த் இறப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருந்தது. விஜயகாந்த் மறைவு அவருடைய குடும்பத்தை மட்டுமல்லாமல் மக்களை அதிகமாக பாதித்திருக்கிறது. இப்ப வரைக்கும் அவருடைய இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்கள் அவர் குறித்து நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

விஜயகாந்த் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதுபோல விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க விஜயகாந்தின் மறைவுக்கு பிரபலங்கள் சிலர் நேரில் வராதது குறித்து பல்வேறு சர்ச்சைகளும் எழும்பி வருகிறது.
குறிப்பாக வடிவேலு, அஜித் வராதது குறித்தெல்லாம் பலர் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். அதோடு விஜயகாந்த்க்கும், அஜித்திற்கும் இடையே பிரச்சனை இருக்கிறது. அதனால் தான் அஜித், விஜயகாந்தின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை என்றெல்லாம் சிலர் கருத்து தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான மீசை ராஜேந்திரன் அஜித்திற்கும் விஜயகாந்த்க்கும் என்ன பிரச்சனை என்பது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் மீசை ராஜேந்திரன் பேசுவதில், அஜித்திற்கும் விஜயகாந்துக்கும் பிரச்சனை என்றெல்லாம் பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே நடந்தது என்னவென்றால் கலை நிகழ்ச்சியில் அஜித்தை கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் கூப்பிட்டது உண்மைதான். ஆனால் அந்த நேரத்தில் அஜித் பைக் ஆக்சிடெண்டில் அடிபட்டு ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருந்தார்.
இது எங்களுக்கு வேறு ஒருவர் மூலமாக தான் தெரிய வந்தது. அதோடு அந்த நிகழ்ச்சிக்கு நான் வரவில்லை என்றாலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுப்பதாக அஜித் சொன்னதாகவும் அந்த நபர் எங்களிடம் சொல்லி இருந்தார். அதற்கு விஜயகாந்த் சரி என்று விட்டுவிட்டார். பிறகு அஜித் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததற்கு நீங்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லை வேண்டாம் என்று அஜித்திடம் விஜயகாந்த் சொன்னார்.
அதற்கு பிறகு விஜயகாந்த்தும், அஜித்தும் நன்றாகத்தான் இருந்தார்கள். மற்றபடி சோசியல் மீடியாவில் வருவது போல அவர்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. கேப்டன் தங்கமான மனிதர் அவர் எல்லோருக்கும் உதவக் கூடியவர். அது பற்றி அஜித்துக்கு நன்றாகவே தெரியும் என்று அந்த பேட்டியில் மீசை ராஜேந்திரன் பேசி இருக்கிறார்.
-
முகம் முழுக்க சோகம்.. தாயார் மறைவால் துபாயில் இருந்து சென்னை வந்த அஜித்குமார் -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications