கூப்பிட்டு அவமானம்.. விஜயகாந்த் பற்றி சொன்ன வார்த்தை! வடிவேலுவை எட்டி மிதிக்கணும்னு! மீசை ராஜேந்திரன் ஆதங்கம்
சென்னை: நடிகர் மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது, நடிகர் வடிவேலு தனக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக சொல்லிக் கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்தியது பற்றியும், நடிகர் விஜயகாந்த் பற்றி தன்னிடம் சொன்ன வார்த்தையால் தனக்கு அவரை எட்டி மிதிக்க தோன்றியது என்று பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் சொக்கத்தங்கம் என்று எல்லாராலும் கொண்டாடப்படும் விஜயகாந்த் மரணம் கடந்த வருடத்தில் நிகழ்ந்தாலும் இப்போ வரைக்கும் அவரைப்பற்றி அவருடைய நண்பர்களும், ரசிகர்களும் பீல் பண்ணி வருகிறார்கள். விஜயகாந்தின் தைரியம், அவர் பலருக்கு உதவியது குறித்து அவருடன் பழகியவர்கள் பெருமையாக பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் விஜயகாந்த்திடம் பல வருடங்களாக பணியாற்றிய மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் நடிகர் விஜயகாந்த் மற்றும் வடிவேலு பிரச்சனை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் விஜயகாந்த் எந்த இடத்திலும் யாருக்கு எந்த உதவி செய்தாலும் சொல்லிக்காட்ட மாட்டார். ஆனால் அவரோடு கூட இருந்து பார்த்தவர்களுக்கு தான் அவரைப் பற்றி முழுமையாக தெரியும்.
வடிவேலுக்கு விஜயகாந்த் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் அவர் இன்று இந்த அளவிற்கு வளர்ந்து இருப்பாரா? என்று தெரியவில்லை. சின்ன கவுண்டர் படத்தில் முதலில் காமெடி கேரக்டரில் வேறு ஒரு நடிகர் தான் நடிக்க இருந்தது. ஆனால் வடிவேலு தனக்காக உதவி செய்யும்படி கேட்டதால் அவருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கும்படி விஜயகாந்த் தான் சொல்லியிருந்தார்.
அதற்கு பிறகு பல படங்களில் விஜயகாந்த் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார். அது எல்லோருக்கும் தெரிந்ததுதான். பிறகு இருவரும் ஒரு கட்டத்தில் பிரச்சனையில் பிரிந்திருந்தனர். அந்த நேரத்தில் ஒரு நாள் நான் ஆபீஸில் இருக்கும்போது அந்த பக்கமாக வடிவேலு வந்தார். அவரை பார்த்ததும் சரி நம்முடைய சீனியர் நடிகர் ஆச்சே என்று நான் அவருக்கு வணக்கம் சார் என்று சொன்னேன்.

அப்போது என்னிடம் எப்படி இருக்கீங்க என்று விசாரித்தார். நானும் நல்லா இருக்கிறேன் என்று சொன்னேன். பிறகு ஒரு வாய்ப்பு இருக்கிறது பண்ணுறீங்களா என்று கேட்டார். நான் சரி சார் என்று சொன்னேன். என் முன்பு ஒரு இயக்குனருக்கு போன் போட்டு நாளைக்கு நமக்கு ஒரு படத்திற்கான ஷுட்டிங் இருக்கிறது அது டீக்கடையில் ஈ ஓட்டுற மாதிரி காட்சி இருக்கிறதே அந்த காட்சிக்கு
ராஜேந்திரனை பயன்படுத்திக்கலாம்.
திருநெல்வேலிகாரர் தான்... சாமி படத்துல கூட அருவாளை தூக்கிக்கிட்டு ஓடி வருவாரே.. அவரை அந்த காட்சிக்கு போட்டுரலாம் என்று சொன்னார். பிறகு போனை பேசி முடித்ததும் என்னிடம் நாளைக்கு காலையில் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துடுங்க என்று அட்ரஸையும் சொல்லிவிட்டு போய்விட்டார். நான் அடுத்த நாள் அவர் சொன்ன இடத்திற்கு போய் காத்திருந்தேன்.
அவர் எப்போதும் போல லேட்டாக வந்தார். நான் உட்கார்ந்து இருந்தேன் அவர் சூட்டிங் மேக்கப் எல்லாம் போட்டுவிட்டார். ஆனால் அவர் சொன்ன காட்சியில் இன்னொரு நடிகர் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நடிகர் என்னுடைய நண்பர் தான். ஆனாலும் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது அவரோடு நடித்த வேறு சில நடிகர்கள் என்னிடம் வந்து நீங்க தானே இந்த காட்சியில் நடிப்பதாக சொன்னாங்க.
ஆனா இப்ப வேற நடிகர் நடிக்கிறாரே நீங்க வடிவேலிடம் பேசிப் பாருங்க என்று சொன்னார். நானும் சரி என்று வடிவேலிடம் போய் பேச போனேன். அவர் ஒரு சேரில் உட்கார்ந்து இன்னொரு சேரில் காலை போட்டு ஆட்டிக் கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் பார்க்காதது போலவே இருந்தான் நான் அவர் முன்னாடி போய் நின்று அண்ணே வணக்கம்.. என்று சொன்னேன்.
அவர் பதிலுக்கு வணக்கம் கூட சொல்லல.. என்ன என்பது போல பார்த்தார். நீங்கதானே இன்னைக்கு காலையில் சூட்டிங் இருக்குன்னு வர சொன்னிங்க ஆனா இங்க வேற ஒருத்தங்க நடிச்சிட்டு இருக்காங்க என்று கேட்டேன். அதற்கு அவர் நீ விஜயகாந்த் ஆளு... உனக்கு எல்லாம் என் கூட நடிக்க வாய்ப்பு கிடையாது போ போ என்று சொன்னார். எனக்கு அப்படியே எட்டி மிதிக்கணும் போல இருந்தது.
ஆனாலும் சங்கம் பிரச்சனை எல்லாம் இருக்கிறதே என்று நினைத்தேன். அதனால் அவரிடம் இப்படி எதற்காக என்னை கூப்பிட்டு வச்சி அசிங்கப்படுத்துதீங்க? உங்களுக்கு வாய்ப்பு தர விருப்பம் இல்லன்னா என்னை வர சொல்லி இருக்க வேண்டாமே? நீங்க சொன்னதுனால தானே இதே அட்ரஸுக்கு நான் வந்தேன் என்று கேட்டேன். அதற்கு அவர் எதுவுமே பேசவில்லை.
பிறகு அங்கிருந்து வந்து விட்டேன். இந்த விஷயம் விஜயகாந்துக்கு தெரிந்திருக்கிறது. அவர் என்னை கூப்பிட்டு விசாரித்தார். அப்போதுதான் முதல் முறையாக அவர் செய்த செயலை என்னிடம் சொன்னார். அதாவது சின்ன கவுண்டர் படத்தில் அந்த நடிகர் நடிக்க வரும்போது மாத்து துணி கூட கிடையாது.. நான்தான் 8 செட் டிரஸ் வாங்கி கொடுத்தேன். ஆனா இப்போ இப்படி எல்லாம் பேசிட்டு திரிகிறானோ? என்று கேட்டார்.
உண்மையில் நான் அன்னைக்கு வடிவேலுவை அடிச்சிருந்தா நான் அப்பவே மீசை ராஜேந்திரனா பலருக்கும் தெரிந்திருப்பேன் என்று தோன்றுகிறது. விஜயகாந்த் யாருக்கும் செஞ்ச உதவியை சொல்லி காட்டியது கிடையாது. முதல் முறையாக அவர் அன்னைக்கு வருத்தமா தான் செய்ததை சொன்னது எனக்கு இன்னைக்கும் கண்ணுக்குள்ள நிற்கிறது என்று அந்த பேட்டியில் மீசை ராஜேந்திரன் பேசியிருக்கிறார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications