மோகனின் காதல் மனைவி.. அந்த பிரபல கட்சி அழைத்தும் மைக் மோகன் போகல.. யாருக்கு வரும் இந்த மனசு: பிரபலம்
சென்னை: நடிகர் மோகன் பழகுவதற்கு இனியவர்.. பந்தா, கெத்து எதுவும் இல்லாதவர் மோகன்.. பெங்களூரில் பிறந்தாலும், இன்றுவரை சென்னையில்தான் வாழ்ந்து வருகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.. அத்துடன், மெல்ல திறந்தது கதவு படத்தின் வெற்றி குறித்தும் ஒரு பேட்டியில் விரிவாக பேசியிருக்கிறார்.
Recent Voice என்ற யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த பயில்வான் ரங்கநாதன், "பெரும்பாலான படங்களில் மைக்கை பிடித்து பாடியதால்தான், இவருக்கு மைக் மோகன் என்று பெயர் வந்தது.. மைக் மோகனின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தவர் இசைஞானி இளையராஜா.. கோவை தம்பி எடுத்த பெரும்பாலான படங்களுக்கு மோகனே நாயகன்..

பெண் ரசிகைகள் அதிகம்
காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மோகனின் படங்கள், இளைஞர்களை கவர்ந்தது.. கமலுக்கு அடுத்து, காதல் படங்களில் அதிகமாக நடித்தவர் மோகன். வித்தியாசமான ஸ்டைலை காட்டி நடித்ததால், இளைஞர்களை மட்டுமல்ல, இளம்பெண்களை அதிகமாக ஈர்த்தவர் மோகன்.. அதிக பெண் ரசிகைகள் மோகனுக்கு அதிகம்..
மெல்ல திறந்தது கதவு
மோகன் நடித்த மெல்ல திறந்தது கதவு வெற்றிப்படமாக அமைந்தது.. எம்எஸ் விஸ்வநாதன் அப்போது பொருளாதாரத்தில் நலிந்திருந்ததால், அவருக்காகவே அந்த படத்தை தயாரிக்க ஏவிஎம் நிறுவனம் முன்வந்தது. அந்த படத்தில் மோகனை சிபாரிசு செய்தவர் டைரக்டர் ஆர் சுந்தரராஜன்.
இத்தனைக்கும் ஆர்.சுந்தர்ராஜனுக்கும், மோகனுக்கும் நிறைய கருத்து வேறுபாடு வரும்.. காரணம், எந்த சீன் எப்போது? எதற்காக எடுக்க போகிறார்? என்பதை மோகனுக்கு சொல்ல மாட்டாராம் ஆர்.சுந்தராஜன். மோகன் துருவி துருவி கேட்டாலும் சொல்ல மாட்டாராம். இத்தனை கருத்து வேறுபாடு இருந்தாலும், அந்த படத்தில் மோகனையே சுந்தர்ராஜன் சிபாரிசு செய்து, படத்தையும் வெற்றிப்படமாக்கினார்.
கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்
மோகனை பொறுத்தவரை தானுண்டு, தன் வேலையுண்டு. என்றிருப்பவர். அரசியல் கட்சிகள் பல அழைப்பு விடுத்தும் எந்த கட்சியிலும் மோகன் இணையவில்லை.. ஒரு பிரபல கட்சி, தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திற்காக மோகனை அணுகியது.. பல லட்சங்கள் பேரம் பேசியது.. அப்போதும்கூட, மோகன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
மோகன் அனைத்து நடிகைகளுடனும் சேர்ந்து நடித்தார்.. ஆனால், கமல், ஸ்ரீதேவி காம்பினேஷன் என்றாலே படங்கள் ஹிட்டாகிவிடும், காரணம் இருவரின் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகிவிட்டதால்தான். அதுபோல, மோகனுக்கும் ஒரு நடிகையுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது... பொதுவிழாக்கள் எல்லாவற்றிலுமே கலந்து கொள்ளமாட்டார்.. தவிர்க்க முடியாத விழா என்றால் பங்கேற்பார்..
ஹோம் டிசைனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. வாழ்க்கை வேறு, சினிமா என்று என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார்.. தன்னுடைய மனைவியின் போட்டோவை பத்திரிகைகளில் வெளியிட்டதில்லை.
இனிமையானவர் மோகன்
சர்ச்சைகளில் அதிகம் சிக்க மாட்டார்.. யாரிடமும் அதிகம் பேசவும் மாட்டார்.. ஆனால், கிசு கிசுக்களில் மட்டும் நிறைய சிக்கி உள்ளார். திடீரென மோகன் சினிமாவில் காணாமல் போனதால், அவருக்கு ஏதோ நோய் வந்துவிட்டதாக வதந்திகள் பரவின. முதலில் மறுக்காமல் இருந்த மோகன், பிறகு பத்திரிகையாளர்களிடம் வதந்தியை மறுத்து, தான் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக கூறினார்.
பழகுவதற்கு இனியவர்.. பந்தா, கெத்து எதுவு இல்லாதவர் மோகன்.. பெங்களூரில் பிறந்தாலும், இன்றுவரை சென்னையில்தான் வாழ்ந்து வருகிறார். ஆனால், ராமராஜனை போல, நடித்தால் ஹீரோவாக நடிப்பேன் என்கிறாராம். ஒருமுறை விஜய்க்கு அண்ணன் வேடத்தில் நடிக்க அழைத்தும் மறுத்துவிட்டாராம். பிறகு அந்த கேரக்டரில் சரத்குமார் நடித்தார். அந்தவகையில் மோகன் கெத்தான நபர்" என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
பூ நடிகை கோபம்
சமீபத்தில், Reflect LifeStyle என்ற யூடியூப் சேனலில் சமீபத்தில் பேசியிருந்த மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "மைக் மோகன் என்பது அவரது பட்டம் கிடையாது. "வெள்ளி விழா நாயகன்" என்பதே அவரது பட்டம்.. அவரது சொந்த பெயர் மோகன் ராவ்..
மோகனை பூ நடிகை விரும்பினார், ஆனால் மோகன் அவரை விரும்பவில்லை.. இந்த கோபம் பூ நடிகைக்கு இருந்தது.. அந்த கோபத்தில்தான், ஏதோ ஒரு நோய் மோகனுக்கு இருப்பதாக பரப்பிவிடப்பட்டது.. நடிகையின் கோபத்துக்கு மோகன் பழிவாங்கப்பட்டார்.
ஆனால், இப்படியொரு குற்றச்சாட்டை அந்த நடிகை நேரடியாக வைக்கவில்லை. அப்படி வைத்திருந்தால், மோகன் நிச்சயம் எதிர்வினையாற்றியிருப்பார். அப்படியே இருந்தாலும், இந்த புரளியை கிளப்பிவிட்டது பூ நடிகைதான் என்பதை உறுதிப்படுத்தவும் முடியாது. எனவே, மோகனும் அதை பெரிதாக எடுத்துக்கல" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications