என்னை ரூமுக்கு கூப்பிட்டா..! மகளோடு நடிகை லட்சுமிக்கு இதுதான் பிரச்சனை.. நடிகர் மோகன் சர்மா பகீர்
சென்னை: நடிகர் மோகன் சர்மா நடிகை லட்சுமி தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டது பற்றி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் லட்சுமிக்கும் அவருடைய மகள் ஐஸ்வர்யாவுக்கும் எதனால் பிரச்சனை ஏற்பட்டது என்பது பற்றியும் மோகன் சர்மா பேசியிருக்கிறார்.
அதே நேரத்தில் நடிகை லட்சுமி தன்னுடைய 17 வயதில் தன்னுடைய குடும்பத்தினர் பார்த்து வைத்த பாஸ்கரன் என்பவர்களோடு திருமணம் செய்து இருந்தார். ஆனால் அவருக்கு ஐஸ்வர்யா என்ற குழந்தை பிறந்த பிறகு கருத்து வேறுபாடு காரணமாக லட்சுமி பாஸ்கரனை பிரிந்து விட்டார். அதைத்தொடர்ந்து நடிகர் மோகன் சர்மாவை திருமணம் செய்திருந்தார். ஆனால் அந்த திருமணமும் பிரச்சனை ஏற்பட அதையும் பிரிந்துவிட்ட லட்சுமி நடிகர் சிவசந்திரனை காதலித்து அவரோடு திருமணம் செய்து இப்போது வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் மோகன் சர்மா சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் மோகன் சர்மாவை நடிகை குட்டி பத்மினி பேட்டி எடுத்திருக்கிறார். குட்டி பத்மினி லட்சுமியின் நெருங்கிய தோழி என்பது பலமுறை குட்டி பத்மினியே சொல்லி இருக்கிறார். அதுபோல சமீபத்தில் கூட சில மாதங்களுக்கு முன்பு நடிகை லட்சுமியையும் பேட்டி எடுத்திருந்தார்.
இப்படியான நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பயில்வான் ரங்கநாதன் நடிகை லட்சுமி குறித்து சில தகவல்களை கூறியிருந்தார். அதில் லட்சுமிக்கு மூன்று கணவர்கள் என்றும் அவருடைய வாழ்க்கையில் சில ஆண்கள் இருந்தார்கள் என்று அவர் கூறியிருந்தார். அது போலவே இப்போது நடிகர் மோகன் ஷர்மா நடிகை லட்சுமி குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை கூறியிருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில், நானும் லட்சுமியும் சட்டக்காரி என்ற படத்தில் நடித்திருந்தோம். அப்போ நான் மும்பையில் பெற்றோரோடு வசித்து வந்த போது லட்சுமி ஒருமுறை மும்பைக்கு விளம்பர படத்தில் நடிக்க வந்திருந்தார். அப்போது எனக்கு போன் பண்ணி நான் ஷாப்பிங் போக வேண்டும் அதனால என் கூட வர முடியுமா என்று கேட்டார். நானும் ஒரு கால் டாக்ஸியை பிடித்துக் கொண்டு லட்சுமியை கூட்டிக்கொண்டு கடைக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு நாய் வடிவிலான சென்ட் பாட்டிலை பார்த்தேன்.
பிறகு வேண்டாம் என்று வைத்துவிட்டு வந்து விட்டேன். ஆனால் அதை லட்சுமி கவனித்திருக்கிறார். எனக்கே தெரியாமல் அந்த சென்ட் பாட்டிலை வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் அடுத்த நாள் கொடுத்து நான் இந்த நாய் போல உங்களுக்கு கடைசி வரைக்கும் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்று தன்னுடைய காதலை சொன்னாங்க. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய வாழ்க்கையில் அதுவரைக்கும் எந்த பெண்ணும் என்னிடம் ப்ரொபோஸ் பண்ணுனது கிடையாது.
அதனால் அவங்க அப்படி சொன்னதும் எனக்கு என்ன ரியாக் பண்ணனும்னு தெரியல. பிறகு நான் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லி இருந்தேன். இரவெல்லாம் நான் தூங்கவே இல்லை. அதனால் அடுத்த நாள் நான் அவங்களுக்கு போன் பண்ணி உங்க கிட்ட பேசணும் என்று சொன்னேன். உடனே அவங்க சூட்டிங் கேன்சல் பண்ணிட்டு வந்துருக்காங்க. அது எனக்கு தெரியாது. நாங்க ஒரு ரெஸ்டாரண்டில் பேசிக் கொண்டிருந்தோம்.
என்னால் சாப்பிட முடியவில்லை. அதனால ஹோட்டலில் ரிசப்ஷனில் வந்து உட்கார்ந்து இருந்தோம். அப்போ அவங்க என்னிடம் ஓப்பனாகவே கேட்டுட்டாங்க.. நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு டேனிங் பாய்ண்டில் நிற்கிறேன். அதனால உங்களை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன் என்று அவங்க ஓப்பனா சொன்னதும் எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.
அதனால நான் அவங்க கிட்ட இப்போதைக்கு நான் என்னுடைய கேரியரில் தான் என்னுடைய கவனத்தை வச்சிருக்கேன். கல்யாணத்தை பத்தி நான் நெனச்சிக்கவே இல்ல என்று சொல்லிவிட்டேன். அப்புறம் அவங்க சரி என்று சொல்லி ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க. அந்த ரூமுக்குள் போனதும் மேற்கொண்டு அங்க என்ன நடக்கப் போகிறது என்பது எனக்கு தெரிஞ்சு போச்சி.
அதனால் நான் லட்சுமி இடம் நான் ஒரு ஆர்த்டாக்ஸ் குடும்பத்திலிருந்து வந்தவன். அதனால் திருமணத்திற்கு முன்பு உன்னிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன். அதனால உங்க கிட்ட ஏதாவது குங்குமம் இருந்தா கொடுங்கள் என்று சொன்னேன். பிறகு லட்சுமி அந்த அறையில் இருந்த குங்குமத்தை எடுத்து கொடுத்தாங்க. நான் லட்சுமியின் நெற்றியில் வைத்து அன்று கணவன் மனைவியாக நாங்கள் வாழ்ந்தோம்.
பிறகு இந்த சம்பவம் வெளியே தெரிய ஆரம்பித்த பிறகுதான் நாங்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டோம். அப்போ லட்சுமிக்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்து ஐஸ்வர்யா குழந்தையா இருந்தார். அதுபோல நான் அவரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போதே லட்சுமி வேறு ஆணோடு பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.
அது குறித்து ஒருமுறை நான் வீட்டில் இருக்கும்போது ஐஸ்வர்யா என்னிடம் அழுதபடியே அப்பா நீ இல்லாத போது அம்மா வேறு ஒரு ஆணோடு பேசிக்கொண்டே இருக்கிறார் என்று சொன்னார். அதுபோல லட்சுமியின் அம்மா ருக்மணி, லட்சுமி மாதிரி ஒரு பிறவி இனிமேல் பிறக்கவே முடியாது அப்படிப்பட்ட ஜென்மம் என்று சொன்னார் என்று மோகன் கூறி இருக்கிறார். அதோடு ஐஸ்வர்யாவுக்கும் லட்சுமிக்கும் ஆகவே ஆகாது.

இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு இருந்ததால் தான் லட்சுமி இன்னொரு குழந்தையை தத்தெடுத்தார் என்று பல குற்றச்சாட்டுகளை லட்சுமி மீது மோகன் கூறி இருக்கிறார். இந்த நிலையில் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள். என்ன தான் இருந்தாலும் காதலித்து திருமணம் செய்து பிறகு வேண்டாம் என்று பிரிந்து அவர் இன்னொரு வாழ்க்கையில் இருக்கிறார்.
ஆனால் இப்போ எதற்கு நடந்து முடிந்த விஷயங்களை இவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது பலருடைய கேள்விகளாக இருக்கிறது. அது போல லட்சுமியின் தோழி என்று குட்டி பத்மினி சொல்லிக் கொண்டு இப்படி பேட்டி எடுக்கலாமா? என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications