அப்பா இறந்த பிறகும் கூட நடிச்சவங்க இப்படி பேசுறாங்க.. அதுவும் அந்த நடிகர் கூட.. மயில்சாமியின் மகன் எமோஷனல்
சென்னை: காமெடியாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பெயர் பெற்ற நடிகர் மயில்சாமி மறைவடைந்து இன்றோடு ஒரு வருடம் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி தன்னுடைய தந்தை குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது தன்னுடைய தந்தை மறைவடைந்து இன்றோடு ஒரு வருடம் ஆகி இருக்கும் நிலையில் அவரோடு நடித்த நடிகர்கள் பலரும் இப்போதும் அவர் உயிரோடு இருப்பது போலவே நினைத்து எங்களிடம் பேசுகிறார்கள். அது எங்களுக்கும் மனதுக்கு ஆறுதல் கொடுத்திருக்கிறது என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதிலும் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து நடிகர் தலைவாசல் விஜய் தன்னுடைய அப்பா குறித்து பேசியதை தன்னால் மறக்க முடியாது என்று யுவன் மயில்சாமி கூறியிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் கடந்த வருடம் திரை துறையின் போதாத காலம் என்று தன் சொல்ல வேண்டும். வரிசையாக பல பிரபலங்கள் மரணத்தின் பிடியில் சிக்கி ரசிகர்களின் மனதை சுக்குநூறாக உடைத்து இருந்தனர். இறப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது தான். ஆனால் அது நமக்குத் தெரிந்தவர்கள் அல்லது நமக்கு பிடித்தவர்களின் இறப்பு தான் ரொம்பவே கொடுமையானது. அந்த மாதிரி திரைத்துறையில் பலருடைய மனங்களை கவர்ந்த நடிகர்கள், பாடகர்கள் பலர் இறந்து போயிருந்தனர்.
அதில் ஒருவர் தான் நடிகர் மயில்சாமி இவர் காமெடி நடிகராகவும் குணச்சித்திர வேடங்களிலும் பலருக்கும் பரீட்சையமாகி இருந்தாலும் தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்து ஒரு சமூக நல ஆர்வலராக இருந்திருக்கிறார். அவருடைய இறப்புக்கு ரசிகர்கள் பிரபலங்கள் மட்டுமல்லாமல் அவரிடம் உதவி பெற்றவர்கள் பலரும் கண்ணீரோடு அஞ்சலி செலுத்தியிருந்தனர்
இப்படியான நிலையில் அவர் இந்த மண்ணுலகை விட்டு போய் ஒரு வருடம் முடிந்து விட்டது. இந்த நிலையில் அவரைப் பற்றி அவருடைய மகன் யுவன் மயில்சாமி பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியிருக்கிறார். யுவன் மயில்சாமி ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அது பெரிய அளவில் அவருக்கு பிரபலத்தை கொடுக்கவில்லை. அதனால் அவர் சின்ன திரையில் அடி எடுத்து வைத்திருக்கிறார்.
அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தங்கமகள் என்ற சீரியல் மூலமாக யுவன் மயில்சாமி கதாநாயகனாக சீரியலில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் தன்னோடு நடிகர் தலைவாசல் விஜய் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் தலைவாசல் விஜய்யை எனக்கு பார்க்கும்போதெல்லாம் ஒருவித பரவசம் ஏற்படும். ஏனென்றால் அவருக்கு அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் ஒரு படத்தில் சாய்பாபா வேடம் போட்டு இருப்பார்.
நான் அந்த படத்தை சின்ன வயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். எனக்கு அந்த படமும் ரொம்ப பிடிக்கும் அந்த படத்தில் அவருடைய நடிப்பும் அருமையாக இருக்கும். எத்தனையோ பேர் சாய்பாபா வேஷம் போட்டிருந்தாலும் இவருடைய முகம் அந்த சாய்பாபாவை நேரில் பார்ப்பது போன்று சாந்தமாக இருக்கும்.
அதனால் எனக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. அது போல அவர் என்னோடு தங்கமகள் சீரியலில் நடித்திருந்தார். அந்த சீரியலில் இரண்டு மூன்று எபிசோடுகள் தான் எனக்கும் அவருக்கும் காட்சிகள் இருந்தது. ஆனால் அதிலும் நாங்கள் இருவரும் அதிகமாக பேசிக்கொண்டிருந்தோம். ஒருமுறை என்னிடம் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது டக்கென்று அப்பா இப்ப எங்க இருக்காரு? எப்படி இருக்காரு? என்று விசாரித்தார்.

எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது... அதற்கு பிறகு தான் அவருக்கே நினைவு வந்திருக்கிறது அப்பா இல்லை என்பது... அதற்கு பிறகு ஓ சாரி என்று சொன்னார் . எனக்கு பிறகு மனதிற்கு ஒருவித பீலிங்காக இருந்தது, காரணம் அப்பா இல்லை என்பதை அவரோடு நெருங்கிய நண்பர்கள் இன்னும் உணரவில்லை. அவர் எங்கேயோ இங்கே தான் இருக்கிறார் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஃபீலிங் தான் இப்போது எங்களுக்கும் வந்திருக்கிறது.
அப்பாவுடைய திரைப்படங்களை பார்க்கும்போதோ அல்லது அவருடைய போட்டோவை பார்க்கும் போது எங்களுக்கு அவர் இல்லை என்ற உணர்வு வரவில்லை. நேற்று கூட நாங்கள் உத்தமபுத்திரன் திரைப்படம் பார்த்தோம் அதில் அவருடைய கேரக்டரை பார்த்து விழுந்து விழுந்து என் நண்பர்களோடு சிரித்துக் கொண்டிருந்தேன் என்று அந்த பேட்டியில் மயில்சாமியின் மகன் நடிகர் யுவன் மயில்சாமி பேசியிருக்கிறார்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications