நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கு 6 மாதங்களில் மீண்டும் திருமணம்! ஜப்பானில் நடந்தது என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷுக்கு (26) ஜப்பானில் அக்ஷ்யாவுடன் (21)திருமணம் நடந்த நிலையில் இன்னும் 6 மாதங்கள் கழித்து அமெரிக்காவில் மீண்டும் திருமணம் நடைபெறும் என நெப்போலியன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

பிரபல நடிகர் நெப்போலியனுக்கு ஜெயசுதா என்பவருடன் திருமணமாகி அவர்களுக்கு தனுஷ், குணால் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் தனுஷுக்கு சிறு வயதிலேயே தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

napolean television japan

இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார் நெப்போலியன். அங்கு தனுஷுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை கை கொடுத்ததால் விவசாயம், ஐடி தொழில் என அங்கேயே செட்டிலாகிவிட்டார் நெப்போலியன்.

இந்த நிலையில் தனுஷுக்கு மருத்துவர்களின் ஆலோசனையின்படி திருமணம் செய்ய நெப்போலியன் முடிவு செய்தார். இதையடுத்து தனுஷுக்கு ஏற்ற ஜோடியை தேடி வந்தார். அப்போதுதான் ஜெயசுதாவின் வீட்டுக்கு பக்கத்தில் குடியிருந்த அக்ஷயா குடும்பம் குறித்து தெரிந்து கொண்டனர்.

அக்ஷயாவுக்கு தனுஷை திருமணம் செய்து கொள்ள ஆசை இருந்ததாம். அதன்பேரில் அக்ஷயாவின் அப்பா, அம்மாவிடம் தனுஷின் பாட்டி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பாசிட்டிவ்வான விஷயங்கள் நடந்ததை அடுத்து அமெரிக்காவில் இருந்து நெப்போலியன் மனைவி ஜெயசுதா திருநெல்வேலிக்கு வந்து அக்ஷயா குடும்பத்தை சந்தித்து பேசினார்.

அப்போது அக்ஷயாவிடம், "யாராவது கட்டாயப்படுத்தினார்களா" என கேட்டதற்கு அவர், இல்லை, "நானே என் விருப்பத்தின்பேரில்தான் திருமணம் செய்து கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார். இதையடுத்துத்தான் அமெரிக்காவிலிருந்தபடியே நெப்போலியன் மகனுக்கும் அக்ஷயாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து தனுஷால் விமானத்தில் பறக்க கூடாது என்பதால் அவருக்கு மிகவும் பிடித்த இடமான ஜப்பானிலேயே கல்யாணத்தை நடத்த முடிவு செய்தனர். இதனால் செப்டம்பர் மாதம் இறுதியிலேயே தனுஷின் திருமணத்திற்காக ஜப்பானுக்கு கப்பலில் சென்றுவிட்டனர்.

இதையடுத்து கடந்த 7ஆம் தேதி தனுஷுக்கும் அக்ஷயாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ராதிகா , சரத்குமார், குஷ்பு, மீனா, சுஹாசினி, கலா மாஸ்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தனுஷ் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். அமெரிக்காவை பொருத்தமட்டில் இருவருக்கும் உடல்நிலை சரியாக இருந்து குடும்பம் நடத்தும் அளவுக்கு இருந்தால் மட்டுமே திருமணம் நடத்த அனுமதி கிடைக்கும்.

இதனால் ஜப்பானை நெப்போலியன் தேர்வு செய்தார் என்கிறார்கள். ஜப்பானில் அமெரிக்காவை விட 4 மடங்கு செலவு அதிகம் இருந்தாலும் தனது ஆசை மகனுக்காக இந்த திருமணத்தை ஊரே மெச்சும்படி செய்து முடித்தார். தனுஷ்- அக்ஷயா திருமணத்திற்கு வாழ்த்துகளும் விமர்சனங்களும் வந்தன.

இதற்கு நெப்போலியன் ஏற்கெனவே பதில் அளித்துவிட்டார். இந்த திருமணத்திற்கு சுமார் 150 கோடி ரூபாய் செலவிட்டதாக தெரிகிறது. திருமணம் முடிந்தாலும் ஜப்பானிலேயே 6 மாதங்களுக்கு இருவரும் தங்குவார்கள். அதன் பிறகு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார்கள்.

ஜப்பானின் சட்ட திட்டங்கள் அமெரிக்காவுக்கு பொருந்தாது என்பதால் அந்த நாட்டு முறைப்படி தனுஷ் அக்ஷயாவுக்கு 6 மாதங்கள் கழித்து மீண்டும் திருமணம் செய்து வைக்க போவதாக நெப்போலியன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+