நெகட்டிவ் கமெண்ட்களுக்கு எமோஷனலாக பதில் அளித்த நெப்போலியன்.. கடைசியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை
சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் திருமணம் முடிவடைந்திருக்கும் நிலையில் அதிகமான நெகட்டிவ் கமெண்ட்கள் பரவி வருகிறது. அது குறித்து முதல் முறையாக நெப்போலியன் பதில் அளித்து இருக்கிறார்.
நடிகர் நெப்போலியனின் மகனுக்கு நான்கு வயதில் இருக்கும் போது தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் 10 வயதில் மருத்துவர்கள் சொன்னது போலவே நடக்க முடியாமல் வீழ்சேரில் வாழ்க்கை தொடங்கிவிட்டது. நெப்போலியன் திருமணத்திற்கு பிறகு அவருடைய மனைவி மூன்று முறை கருத்தரித்தும் அபார்ஷன் ஆகி விட்ட நிலையில் அதற்கு பிறகு பல சிகிச்சைகள் செய்து அவருடைய மூத்த மகன் பிறந்து இருந்தார்.

5 வருடம் கழித்து பிறந்த மகன் தன்னுடைய வாழ்க்கையை மாற்ற வந்தான் என்று ரொம்பவும் சந்தோஷமாக இருந்த நெப்போலியனுக்கு அவருடைய நான்காவது வயதில் தான் பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. பிறகு சிகிச்சைகள் எடுத்தும் பலன் இல்லாமல் பத்து வயதிற்கு மேலே நடக்க முடியாமல் போய்விட்டது. அப்போது மருத்துவர்கள் இவர் 15 வயதுக்கு மேலே உயிரோடு இருக்க மாட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அது நெப்போலியனுக்கு மேலும் வேதனையை கொடுத்திருக்கிறது. ஆனாலும் அவருடைய மனம் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கிறார் . தற்போது தன்னுடைய மூத்த மகனுக்கு திருமணமும் நடத்தி வைத்திருக்கிறார். இதுதான் எப்போது அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
எழுந்து நடக்க முடியாமல் தனுஷ் படுத்த படுக்கையாக இருக்கிறார். இவருக்கு திருமணம் செய்து வைத்தால் அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியுமா? என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். ஒரு சிலர் பேட்டிகளில் கூட நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துவிட்டார் என்று சிலர் அவதூறு பரப்பி வருகிறார்கள்.
இப்படியான நிலையில் இதுகுறித்து நெப்போலியன் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்
அதில் அவர் பேசுகையில், எங்கேயோ எத்தனை மையிலுக்கு அப்பால் இருக்கும் ஒரு சிலர் என்னுடைய மகன் பற்றி தெரியாமல் அவரால் ஒன்றும் செய்ய முடியாது எதற்காக அவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் என்று கேட்கிறார்கள்.
எனக்கு என்னுடைய மகன் தெரியும் பற்றி தெரியும். அவர் எவ்வளவு மன தைரியம் உள்ளவர் என்று எங்களுக்கு தெரியும். மற்றவர்களுக்கு இதுபோல நோய் ஏற்பட்டு இருந்தால் எப்படி இருப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் தனக்கு என்ன நடந்தாலும் என்னுடைய மகன் ரொம்பவும் தைரியமாக எடுத்துக் கொள்கிறார்.
எங்களுக்கு கூட அவர்தான் பலமாக இருக்கிறார். அவருக்கு ஒரு வாழ்க்கைத் துணை வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் மட்டுமல்ல என்னை போல அப்பாக்கள் எல்லாருமே இதுதான் நினைப்பார்கள். நான் என்னுடைய மகன் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.
சிலர் சம்பந்தமே இல்லாமல் தப்பு தப்பாக பேசி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதோ நேரம் போக வேண்டும் என்று எதையாவது கமெண்டில் போட்டு விடுகிறார்கள். அது இன்னொருத்தர்களின் குடும்பத்தையும் அவர்களுடைய மனதையும் பாதிக்கும் என்று புரிந்து கொள்ளாமல் செய்கிறார்கள்.
இதை எல்லாம் நானும் என்னுடைய குடும்பத்தினரும் கண்டு கொள்வது கிடையாது. என்னுடைய மகன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்னுடைய மருமகள் என்னுடைய மகனை சின்ன வயதில் இருந்தே பார்த்து தான் திருமணம் செய்து இருக்கிறார். என்னுடைய மருமகள் குடும்பத்தில் திருமணத்திற்கு சம்மதம் என்று சொன்னதும் நாங்கள் நேரடியாக அவரிடம் கேட்டோம்.
அப்போது என் மருமகள் நான் பல வருடங்களாக தனுஷை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய வீடியோக்கள் நான் பார்ப்பேன் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தான் கல்யாணத்திற்கு சம்மதம் என்று சொன்னேன் என்று சொன்னார். இது தெரியாமல் சிலர் தவறுகளாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்த பேட்டியில் நெப்போலியன் பேசியிருக்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications