நெப்போலியன் கிட்ட போன இர்பான்.. திமுக அவரை கைது செய்யாதது ஏன்? நம்பிக்கை போயிடுச்சு.. பிரபலம் சுருக்
சென்னை: யூடியூபர் இர்பான் மீது திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
தன் குழந்தையின் தொப்புள் கொடி அறுத்த இர்பானின் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளார். AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி தந்துள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது:

தண்டனைக்குரிய தவறு: நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, கர்ப்பத்தில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள அனுமதி இல்லை. அது தண்டனைக்குரிய தவறு என்று தெரிந்துதான், இர்பான் துபாய் சென்றுள்ளார்.. அங்கு மனைவிக்கு ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்.. எனவே, ஒரு தவறை தெரிந்தே செய்கிறார்.. திட்டமிட்டே செய்கிறார்.. அடுத்தவரையும் செய்ய தூண்டுகிறார்..
வசதி இருப்பவர்கள், பணம் படைத்தவர்கள்தான் இப்படி ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்கிறார்கள்.. அந்தவகையில், இந்திய தண்டனை சட்டத்தை மீறியிருக்கிறார் இர்பான்.
வயதான பெண்மணி: ஒரு வருடத்துக்கு முன்பு, திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார் இர்பான். அப்போது வீடியோ எடுத்துக் கொண்டே வண்டியை ஓட்டி வந்துள்ளார்.. மறைமலைநகர் காவல் நிலைய சரக எல்லைக்குள், ஒரு பல்கலைக்கழகத்தில் துப்புரவு வேலைபார்க்கும் வயதான பெண்மணி மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்தினார். அந்த பெண் உயிரிழந்துவிட்டார்.. ஆனால், காரை டிரைவர்தான் ஓட்டியதாக சொல்கிறார் இர்பான்.. ஆனால், காரில் வீடியோவை எடுத்துவந்தது இவர்தான்.
இவருக்கு அரசியல் கட்சி பின்னணியில் உள்ளதால், அந்த விபத்து நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி புட்டேஜ்ஜை, அந்த ஏரியா காவல்துறை அதிகாரி அழிக்கிறார்.. இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் அவர்மீது எடுக்கவில்லை.. அப்படியானால் சிசிடிவி என்னாச்சு? வரும்வழியிலிருந்த அத்தனை சுங்கச்சாவடியிலிருந்த ஆதாரங்கள் எங்கே?
பெரும் குற்றம்: இவர் மீது தவறே இல்லையென்றாலும்கூட, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு கருணைத்தொகை கூட தரவில்லை. அதிகாரத்தில் அனைத்தையும் எல்லைமீறிவிடலாம் என்று இர்பான் நினைக்கிறார்.. அதனால்தான், இப்போது 3வது முறையாக இன்னொரு பெருங்குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
ரெயின்போ மருத்துவமனையில் பேரம் பேசி, அறுவை சிகிச்சை அறைக்குள் குழந்தையின் தொப்புள் கொடியை தான்தான் வெட்டுவேன் என்று ஒப்பந்தம் போடுகிறார்.. நயன்தாரா நகைக்கடை ரிப்பன் வெட்டுவதுபோல, குழந்தையின் தொப்புள் கொடியையும் வெட்டுகிறார்.
அறுவை சிகிச்சை: இந்த வீடியோவை 14 லட்சம் பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.. தொப்புள் கொடி வீடியோவுக்கு பிறகு, அறுவை சிகிச்சை செய்வதை வீடியோ போடநினைத்துள்ளார்.. அதற்குள் இது சர்ச்சையாகிவிட்டது. அறுவை சிகிச்சை அறைக்குள் கேமரா வெளிச்சம் பாயலாமா? கேமரா உள்ளே கொண்டு போகலாமா?
திமுக மீது மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். ஜக்கி வாசுதேவ் விஷயத்தில் திமுக அரசு மீது சந்தேகம் வந்துவிட்டது. இர்பான் விஷயத்தில் மக்களுக்கு திமுக அரசு மீது சந்தேகம் வந்துவிட்டது.. இர்பான் மீது நடவடிக்க எடுக்க இவ்வளவு காலதாமதமா? அந்த மருத்துவமனைக்கு சீல் வெச்சிருக்கணும் இல்லையா? மருத்துவமனையை காவல்துறை உடனடியாக தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கணும் இல்லையா? இர்பானை இந்நேரம் கைது செய்திருக்கணும் இல்லையா?
நெப்போலியன்: இங்கே இவ்வளவு நடந்துட்டு இருக்கு, ஆனால், நெப்போலியன் வீட்டு கல்யாணத்துக்கு போயிட்டாரு இர்பான்.. ரிசப்ஷனுக்கு போயிருக்காரு? மொத்தத்தில், திமுக மீது மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள்" என்றார்
"பயில்வான் ரங்கநாதனும் இதே கோரிக்கையைதான் விடுத்திருக்கிறார். இன்னொரு யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் பயில்வான் ரங்கநாதன், இர்பானை சும்மா விடக்கூடாது, உடனடியாக கைது செய்ய வேண்டும், திமிர்பிடித்த வண்ணமாக தொடர்ந்து இப்படி சொல்லிவரும் இர்பானின் பின்புலமாக இருப்பது யார்? ஆனால், இவருக்கு பின்னால் யாரும் இல்லை என்று அமைச்சர் சுப்பிரமணியன் வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். அதனால், இர்பானின் பண்பாட்டு சீரழிவு கண்டிக்கத்தக்கது. பின்புலத்தில் இருப்பவர்களையும் விசாரிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications