3 வருஷமா நடந்தது இதுதான்! சொந்தக்காரங்க செய்த அவமானம்.. நெப்போலியன் சம்மந்தி எமோஷனல்
சென்னை: நடிகர் நெப்போலியன் மகனுக்கு திருநெல்வேலியை சார்ந்த பெண்ணோடு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அந்தப் பெண்ணின் குடும்பத்தார் தங்கள் பற்றியும் நெப்போலியன் குடும்பத்தை பற்றியும் பேட்டி ஒன்றில் பேசி இருக்கின்றனர். அப்போது மூன்று வருட காலமாக தங்களுடைய குடும்பத்தில் என்ன நடந்தது? எதற்காக இந்த கல்யாணம் நடந்தது என்பது பற்றியும் பேசி இருக்கிறார்கள்.
சில தினங்களாகவே சமூக வலைதளத்தில் நெப்போலியன் மகன் திருமணம் பற்றிய செய்திகள் தான் அதிகமாக பேசப்படுகிறது. நெப்போலியனின் மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைத்தது குறித்து பலரும் நெப்போலியனை பாராட்டுகிறார்கள்.

ஆனால் ஒரு சிலர் நெப்போலியன் மகனை திருமணம் செய்த பெண் பணத்திற்காக திருமணம் செய்து இருக்கிறார், நெப்போலியன் மகனால் இல்லற சுகத்தை கொடுக்க முடியாது, ஒரு பெண்ணின் வாழ்க்கையை நெப்போலியன் அழித்து விட்டார் என்று அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து நெப்போலியனின் சம்மந்தி அதாவது நெப்போலியன் மகன் திருமணம் செய்திருக்கும் அக்ஷயாவின் பெற்றோர் பிகைன் வுட்ஸ் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கின்றனர். இந்த வீடியோவை நெப்போலியன் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அதில் அக்ஷயாவின் அம்மா பேசுகையில், எங்களுடைய மகளுக்கு மூன்று வருடங்களாகவே வரன் வந்து கொண்டிருந்தது.
நாங்களும் விசாரித்து கொண்டிருந்தபோதுதான் நெப்போலியனின் மகன் வரன் வந்தது. உடனே என்னுடைய மகள் எனக்கு இந்த கல்யாணம் ஓகே என்று சொல்லிவிட்டார். நாங்கள் இந்த கல்யாணத்தில் இருக்கும் பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு முன்பே என்னுடைய மகள் எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிவிட்டாள்.
எங்களுடைய குடும்பம் பல வருடங்களாக திருச்சியில் தான் வசித்து வந்தோம். அங்கு சின்னதாக கடை நடத்திக் கொண்டிருந்தோம். அந்த பகுதியில் தான் நெப்போலியனின் மாமனார் குடும்பமும் இருந்தது. நெப்போலியனின் மாமனார் எங்களுக்கு நல்ல பழக்கம் உள்ளவர். அதனால் அவர் எங்கள் வீட்டில் சம்மந்தம் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.
நாங்கள் கொரோனா காலகட்டத்தில் சொந்த ஊரான மூலைக்கரைப்பட்டிக்கு வந்து விட்டோம். அதற்கு பிறகு தான் நெப்போலியனின் மாமனார் வீட்டிற்கு வந்து எங்களிடம் பேசினார். என்னுடைய மகள் எனக்கு இந்த கல்யாணம் ஓகே என்று சொல்லிவிட்டார். எங்கேஜ்மென்ட்க்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் பேசி முடித்தோம்.
எங்கேஜ்மென்ட் நடந்த பிறகு அதிகமான நெகட்டிவ் கமெண்ட் வந்தது. சமூக வலைத்தளங்களில் வரும் நெகட்டிவ் கமாண்டுகளை நாங்கள் கண்டு கொள்வது கிடையாது. காரணம் நாங்கள் யாரும் அதிகமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது இல்லை என்பதால் அது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஆனால் சொந்தக்காரங்களும், வீட்டை சுற்றி இருப்பவர்களும் எங்களை கேள்விகளால் துளைத்து எடுத்து விட்டார்கள். அதனாலேயே நாங்கள் வீட்டை விட்டு வராமல் ஒரு மாதத்திற்கு வீட்டிற்குள் தான் இருந்தோம். பிறகுதான் நாம் இப்படியே எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும்? நாம் எந்த தப்பும் பண்ணவில்லை நாம் கடவுளுக்கு மட்டும்தான் பயப்பட வேண்டும். வேறு யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு செய்து நாங்கள் வெளியே வந்தோம்.
இந்த திருமணத்திற்கு அக்ஷயாவை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. தனுஷை அவளுக்கு ரொம்பவும் பிடித்த காரணத்தால்தான் அவள் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்னாள் என்று அந்த பேட்டியில் அக்ஷயாவின் அம்மா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications