நெப்போலியன் உருவத்தில் மட்டுமல்ல மனதிலும் உயர்ந்தவர் .. உருகிய பெண்.. வியக்க வைத்த மருமகள்
சென்னை: நடிகர் நெப்போலியன் குடும்பத்தினர் தன்னுடைய மகனைப் போலவே தசை சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒருவரை நேரில் சந்தித்து இருக்கிறார்கள். அப்போது தன்னுடைய மகனோடு அந்த சிறுவனையும் அமர வைத்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து இருக்கிறார்கள். அந்த தருணத்தில் அந்த சிறுவனின் பெற்றோர் உள்ளம் மகிழ்ந்திருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பொதுவாக ஒரு சிலர் எந்த குறையும் இல்லாமல் இருந்தாலும் வாழ்க்கையில் ஏன் வாழ்கிறோம் என்ற வெறுப்போடு வாழ்கிறார்கள். ஆனால் பெரிய குறைபாடுகள் இருந்தாலும் சிலர் இந்த வாழ்க்கையை அழகாக ரசித்து ஒவ்வொரு நாள் போராட்டத்திலும் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுபோலத்தான் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு எழுந்து நடக்க முடியாமல் இருக்கும் ஒரு சிறுவனை நெப்போலியனின் குடும்பத்தினர் நேரில் சந்தித்து இருக்கிறார்கள்.

நடிகர் நெப்போலியன் 80ஸ் காலகட்டத்தில் இறுதியிலும் 90ஸ் காலகட்டத்திலும் பல திரைப்படங்களில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடித்திருக்கிறார். தமிழில் அவர் எந்த அளவிற்கு பிரபலமானவரோ அது போல மலையாளத்திலும் பலருக்கும் பரிச்சயமான நபர் தான்.
சினிமாவில் மட்டுமல்லாமல், அரசியல் பிரமுகராகவும் பல வருடங்கள் பணியாற்றி இருக்கிறார். ஆனால் தன்னுடைய மகன் மற்றும் குடும்பத்திற்காக தன்னுடைய வாழ்க்கையை மாற்றி அமைத்து அமெரிக்காவில் குடி பெயர்ந்திருக்கிறார். நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
அதில் மூத்த மகன் தனுஷிற்கு நான்கு வயது இருக்கும்போது தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருந்தது. அதற்குப் பிறகு 10 வயதில் அவரால் எழுந்து நடக்க முடியாத நிலை வந்திருக்கிறது. நெப்போலியனுக்கு திருமணம் முடிந்து 5 வருடங்கள் கழித்து, இரண்டு முறை கரு கலைந்து மூன்றாவதாக தான் மூத்த மகன் பிறந்தார்.
அதனால் மிகவும் எதிர்பார்ப்போடு இருந்த மகனின் உடல்நிலை இப்படி ஆகிவிட்டதே என்று ஆரம்பத்தில் வருத்தப்பட்டாலும் பிறகு தன்னுடைய மகனின் திறமையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று அவரை அனிமேஷன் படிக்க வைத்திருக்கிறார். அதோடு தன்னுடைய மகனைப் போல தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை கொடுப்பதற்காக திருநெல்வேலியில் மயோபதி மருத்துவமனையும் கட்டி பராமரித்து வருகிறார்.
அந்த மருத்துவமனையில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல நாடுகளில் இருந்தும் வந்து குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதுபோல சினிமாவில் தான் புகழின் உச்சத்தில் இருக்கும்போது தன்னுடைய மகனுக்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து பல இடங்களில் நெப்போலியன் பேசியிருக்கிறார்.
அதுபோல இந்த நோய் பாதிக்கப்பட்டால் ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்தும் பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தன்னுடைய மகனுக்கு அக்ஷயா என்ற பெண்ணோடு திருமணம் செய்து வைத்திருந்தார்.
தான் ஆசைப்பட்ட மாதிரி தமிழ் பெண்ணையே தன்னுடைய வீட்டு மருமகளாக வேண்டும் என்று அதற்காக வரன் பார்த்தபோதுதான் அக்ஷயாவின் குடும்பத்தினர் அறிமுகம் கிடைத்தது என்றும் தன்னுடைய மகனால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்பதால் ஜப்பானில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் நெப்போலியன் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு நெப்போலியன் குடும்பத்தினர் மூன்று மாதங்களாக ஜப்பானிலேயே தங்கியிருந்தனர். இப்போது அமெரிக்காவிற்கு மீண்டும் தங்களுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். அப்போது நெப்போலியன் மகனைப் போலவே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை அவருடைய பெற்றோர் நெப்போலியன் குடும்பத்தினரை சந்திக்க கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றனர்.
அந்த குழந்தையை பார்த்ததும் நெப்போலியனின் மனைவி தன்னுடைய மகனை கொஞ்சுவது போன்று கொஞ்சுகிறார். அந்த சிறுவனின் உடைகளை சரி செய்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதோடு அந்த வீடியோவில் நெப்போலியனின் மருமகளான அக்ஷயாவும் தசை சிதைவால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையை நன்றாக கவனித்துக் கொள்கிறார். அவரோடு சில புகைப்படங்களையும் எடுத்து இருக்கிறார்.
அக்ஷயா நெப்போலியன் மகன் தனுஷை திருமணம் செய்யும்போது அதிகமான விமர்சனங்கள் வந்தது. அவர் கட்டாயத்தினால் தான் திருமணம் செய்து கொள்கிறார் என்று பலர் பேசி வந்தனர். ஆனால் தன்னுடைய முழு விருப்பத்தின் பேரில் தான் திருமணம் நடக்கிறது என்று அக்ஷயா கூறியிருந்தார். அதுபோல இப்பொழுது தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை அவர் கவனித்துக் கொள்வதை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications