பணம் இருந்தால் போதாது.. இப்படி ஒரு மனசு வேண்டும்.. சாதித்த நெப்போலியன்.. வீடியோ காலில் டுவிஸ்ட்
சென்னை: பிரபல நடிகர் நெப்போலியனின் மகனின் பிறந்த நாளுக்கு நெல்லை மருத்துவமனையில் இருந்து வீடியோ காலில் வாழ்த்து செய்தி பறந்திருக்கிறது.
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் பிறந்த நாளுக்கு நெப்போலியன் கட்டிய மருத்துவமனையில் இருந்து பலர் வாழ்த்துக்களை கூறியிருக்கின்றனர்.
இந்த நிலையில் இதற்கு பின்னாடி இருக்கும் சுவாரஸ்யமான கதையை பற்றி விரிவாக பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் 80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகராக இருந்திருக்கிறார். இவருடைய நடிப்பு மட்டுமல்லாமல் இவர் பாடிய ஒரு சில பாடல்களும் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் அந்த "எட்டு பட்டி ராசாவே" இப்போதும் பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.
ஒல்லியான தேகத்தோடு பெரிய முறுக்கு மீசை வைத்து மிரட்டும் பார்வையால் இவருடைய நடிப்பை பார்த்து வியந்து போனவர்கள் ஏறலாம். சின்னத்தாயி, ஊர் மரியாதை, எஜமான், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, தென்காசி பட்டணம், விருமாண்டி என பல திரைப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம் அவருடைய நடிப்பிற்கு மைல் கல்லாக அமைந்தது.
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் மகள்களை பார்த்திருக்கிறீர்களா...? அதுவும் இந்த "பிரபலங்கள்" தான்..!
அந்த காலகட்டத்தில் சரத்குமார், ரஜினிகாந்த்,கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை அமைத்துக் கொண்டவர் தான். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய நடிப்புக்கு முழுக்கு போட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த தொடங்கிய நெப்போலியன் திமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் தான்.

ஆனால் அந்த நேரத்தில் தன்னுடைய மகனுக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக அரசியலை விட்டு விலகிய நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். அங்கு சொந்தமாக கம்பெனி ஒன்றை நடத்தி வரும் அவர் விவசாயத்தையும் செய்து வருகிறார். அதுபோல நெப்போலியன் க்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் நெப்போலியனின் இளைய மகன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்கிறார்.
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் உடல் நல குறைவால் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அவர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு நான்கு வயது இருக்கும்போது இந்த நோயை கண்டுபிடித்து விட்டவர்களாம். அவர் 10 வயதுக்கு மேல் நடக்க மாட்டார் என்று அப்போது மருத்துவர்கள் சொன்னார்களாம்.அவர்கள் சொன்னபடியே பத்து வயதுக்கு மேல் தனுஷால் நடக்க முடியாமல் போய்விட்டதாம்.

அந்த நேரத்தில் உலகம் முழுவதும் தேடியும் இந்த நோயை குணப்படுத்த மருந்து கிடைக்கவில்லையாம். அப்போது திருநெல்வேலி பக்கத்தில் ஒரு ஊரில் பாரம்பரிய வைத்தியம் மூலம் இதனை படிப்படியாக குணப்படுத்த முடியும் என்று தெரிந்து கொண்டாராம். உடனே தன்னுடைய மகனை அங்கே கூப்பிட்டுக் கொண்டு போன நெப்போலியன் அங்கு தான் சிகிச்சை எடுத்து வந்து இருக்கிறார். அந்த இடத்தில் தன் குழந்தையைப் போல பாதிக்கப்பட்டவர்கள் வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பொருட்டு ஒரு மருத்துவமனையை நெப்போலியன் கட்டி இருக்கிறாராம்.
தற்போது இந்த மருத்துவமனையில் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதுபோல நெப்போலியனின் மகனும் வளர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் நெப்போலியன் மகன் தனுஷின் பிறந்த நாளுக்கு அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலர் வீடியோ கால் மூலமாக ஆசீர்வாதங்களை வழங்கி இருக்கின்றனர். அதை வெளிநாட்டில் இருந்து சந்தோஷமாக நெப்போலியன் குடும்பத்தினர் வாங்கி மகிழ்திருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
-
Vadivelu: இதனால் தான் விவேக் இறப்புக்கு கூட போகல.. கண்கலங்க பேசிய நடிகர் வடிவேலு -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications