இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் மகள்களை பார்த்திருக்கிறீர்களா...? அதுவும் இந்த “பிரபலங்கள்” தான்..!
சென்னை: இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். அவர்களோடு கே.எஸ் ரவிக்குமார் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இயக்குனராகவும், நடிகராகவும் பலருக்கும் தெரிந்த கே.எஸ் ரவிக்குமார் 3 பெண் குழந்தைகளின் தந்தையாக தன்னுடைய மகள்களை நல்ல நல்ல நிலமைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

அந்த வகையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாருடைய மகள்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.
கே.எஸ் ரவிக்குமாருடைய திரைப்படங்கள் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கும். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் திரைப்படங்களில் அதிகமானவை கே.எஸ் ரவிக்குமார் உடைய திரைப்படங்களாகவே இருக்கும். இவர் இயக்கும் திரைப்படத்தில் இவரும் கதாபாத்திரமாக நடித்திருப்பார்.

நடிகர் ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் பலரையும் தன்னுடைய திரைப்படத்தால் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடையும் வகையில் செய்து சாதனை படைத்த கே.எஸ் ரவிக்குமார் இப்போது சின்னத்திரையிலும் அடி எடுத்து வைத்திருக்கிறார். வெள்ளி திரையில் தான் செய்யாத சாதனையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஜொலித்த கே.எஸ் ரவிக்குமார் இப்போது விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் "அடுத்த கதாநாயகி யார்" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.
இந்த நிலையில் கே.எஸ் ரவிக்குமார் அவருடைய பேர குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை அவருடைய மகள்கள் பகிர்ந்து இருக்கின்றனர். அது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கே.எஸ் ரவிக்குமார் உடைய மனைவியின் பெயர் கற்பகம் இவருக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.

அதில் அவருடைய ஒரு மகளின் பெயர் மல்லிகா. இவர் பெண்களுக்கான லைஃப் கோச்சிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் ஒருமுறை சூரியன் எஃப் எம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகின்றார். அப்போது லைஃப் கோச்சிங் பயணம் குறித்து அதிகமான விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் எனக்கு லாக் டவுன் சமயத்தில் குழந்தை பிறந்தது.
அந்த சமயத்தில் சரியாக எதுவும் செய்ய முடியவில்லை. டெலிவரி, பிரசவத்திற்கு பிறகு மன அழுத்தம் கோவிட் பயம்... இப்படி பல்வேறு காரணங்களால் நான் உடைந்து போய் இருந்தேன். ஆனாலும் அந்த நேரத்தில் என்ன நம்பி ஒரு குழந்தை இருக்கிறதாலும், இனி யாருடைய ஆறுதலையும் எதிர்பார்த்து நாம வாழக்கூடாது நினைத்தேன்.

அப்போது நான் ஏதாவது செய்யணும்னு முயற்சி எடுத்துக்கிட்டு இருக்கும்போது எனக்கு இந்தியாவிலே சிறந்த லைஃப் கோச்சுகளில் ஒருவரான பூஜா என்பவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை சந்தித்த பிறகு என்னுடைய வாழ்க்கையே மாறியது. மன அழுத்தம், டென்ஷன், பானிக் இருந்ததிலிருந்து மீண்டு பாசிட்டிவாக மாறினேன்.
என்னுடைய நிலைமை பார்த்து தான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. என்னுடைய வாழ்க்கையே மாறி இருக்கிறது. நானும் நன்றாக பேசுகிறேன். அதனால் என்னுடைய அனுபவங்களை எல்லாம் வைத்து நான் ஏன் ஒரு லைஃப் கோச்சாக முடியாது என்று நினைத்து தான் இந்த பாதையில் வந்தேன். இப்போது கிட்டதட்ட 800 மேற்பட்ட தமிழ் பெண்களின் பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதுபோல கே.எஸ் ரவிக்குமாரின் இன்னொரு மகளான ஜனனி ரவிக்குமார் இவர் ஒரு பிட்னஸ் ஆர்வலராகவும் சொந்தமாக தொழில் செய்தும் வருகிறார். இன்னொரு மகள் ஜஸ்வந்தி அவர் ஒரு டாக்டராக இருக்கிறார். சென்னையில் தற்போது தான் அர்மோரா என்ற டெர்மடாலாஜி கிளினிக்கை திறந்து வைத்திருக்கிறார். அவருடைய கணவர் அரவிந்த் கூட மருத்துவர் தானாம்.

இப்படியாக நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் கேஎஸ் ரவிக்குமார் தன்னுடைய மகள்களை நடிகையாக மாற்றாமல் அவர்களுடைய திறமையின் அடிப்படையிலே அவர்களுடைய வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கிறார். இது பல பெண்களுக்கும் முன்னுதாரணம் என்றும் ரசிகர்கள் பலரும் கே.எஸ் ரவிக்குமார் மற்றும் அவருடைய மகள்களை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் கே எஸ் ரவிக்குமார் அவருடைய மகள்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications