நெப்போலியன் வீட்டில் கல்யாணமா? திருவிழாவா? 5 நாள் நடக்கும் கொண்டாட்டம்.. ஆனால் சாப்பாடு இது தானா?
சென்னை: நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் நாளை நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்திற்கு பல பிரபலங்கள் ஜப்பானுக்கு சென்று இருக்கிறார்கள். திருமணம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் வில்லனாகத்தான் அறிமுகமானார். அதற்கு பிறகு சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். அதிலும் இவர் வில்லனாக நடித்த எஜமான், ஊர் மரியாதை போன்ற படங்களை யாராலும் மறந்து இருக்க முடியாது.

24 வயதில் சினிமாவில் அறிமுகமான நெப்போலியன் அந்த காலகட்டத்தில் 50 வயதுக்கு மதிக்கத்தக்க வில்லனாக தான் நடித்து வந்தார். குறைந்த வயதில் அதிகமான வயது வில்லனாக அதிக படங்களில் நடித்தது நெப்போலியன் ஆகத்தான் இருக்கும். நடிப்பு என்று வந்துவிட்டால் எந்த கேரக்டர் என்றாலும் நடிக்க வேண்டும் என்று இவர் தன்னுடைய தனித்துவத்தை காட்டி வந்தார்.
தமிழில் மட்டுமல்லாமல் இவருக்கு மலையாளத்திலும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே போல இவர் சினிமா நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் பிரபலமானவர். சினிமாவிற்கு வருவதற்கு முன்பே தன்னுடைய மாமா கே என் நேருவிற்கு உதவியாளராக இருந்த நெப்போலியன் அரசியலில் காலடி எடுத்து வைத்து எம்எல்ஏவாக தேர்வாகி அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.
ஆனால் தன்னுடைய மூத்த மகன் தனுஷுக்காக சினிமா, அரசியல் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். ஏதாவது விசேஷம் மற்றும் முக்கிய நிகழ்வுகள் என்றால் தான் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அமெரிக்காவில் இருந்தாலும் அங்கு தமிழர்கள் பண்டிகையை கொண்டாடி அடிக்கடி வீடியோக்களையும் வெளியிட்டு கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில்தான் தன்னுடைய மூத்த மகன் தனுஷ்க்கு திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியை சார்ந்த ஒரு பெண்ணோடு எங்கேஜ்மென்ட் செய்திருந்தார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணைந்து வைரலாகி வந்தது. அதைத்தொடர்ந்து தன்னுடைய மகனின் திருமணத்திற்காக முதலமைச்சருக்கு நேரடியாக சென்று பத்திரிக்கையை வைத்து அழைத்து இருந்தார்.
தன்னுடைய மகனின் திருமணத்தை ஜப்பானில் நடக்க திட்டமிட்டு இருந்த நெப்போலியன் தன்னுடைய நண்பர்கள் எல்லோரும் ஜப்பானில் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பல ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறார். கடந்த மாதத்திலேயே அமெரிக்காவிலிருந்து கப்பல் மூலமாகவும் டிரெயின் மூலமாகவும் பயணத்தை தொடங்கிய நெப்போலியன் குடும்பத்தினர் சில வாரங்களுக்கு முன்பே ஜப்பான் வந்து சேர்ந்து விட்டனர்.
நெப்போலியன் தன்னுடைய ஒவ்வொரு நாள் பயணத்தையும் வீடியோவாக வெளியிட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நாளை அவருடைய மகனுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. ஆனால் அந்த திருமணம் பெரிய அளவில் பிரமாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பாண்டியராஜன், குஷ்பூ, சரத்குமார், ராதிகா, மீனா, கலா மாஸ்டர் போன்ற பிரபலங்கள் ஜப்பானுக்கு ஏற்கனவே வந்துவிட்டனர். அதுபோல இன்னும் அதிகமான பிரபலங்கள் வருவார்கள் என்றும் கூறப்படுகிறது. திருமணத்தையொட்டிய நிகழ்வுகள் இரண்டு நாட்கள் முன்பே தொடங்கி விட்டது.
திருமணம் முடிந்து மூன்று நாட்களுக்கு அங்கு ஃபங்ஷன் நடைபெறுகிறதாம். அதற்கு பிறகு மொத்த குடும்பத்தினரும் சிங்கப்பூர் உட்பட சில நாடுகளை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் ஜப்பானுக்கு வந்து அங்கிருந்துதான் அமெரிக்காவிற்கு மீண்டும் கப்பல் வழியாக செல்ல இருக்கிறார்களாம்.
நெப்போலியன் மகன் மற்றும் மருமகள் எடுத்த போட்டோ ஷூட் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் நெப்போலியன் ஜப்பானில் தன்னுடைய மகன் திருமணத்தை நடத்தினாலும் அங்கு வரும் எல்லோருக்கும் உணவு இந்திய முறையில்தான் அரேஞ்ச் செய்திருக்கிறாராம்.
அதாவது இட்லி, உப்புமா, தோசை, பொங்கல், சட்னி, சாம்பார் என்று எல்லாமே இந்திய உணவுகள் தான் அங்கு அரேஞ்ச் செய்யப்பட்டு இருக்கிறதாம். வழக்கமாக ஹோட்டலில் தங்கும் போது அங்கு கொடுக்கப்படும் உணவுகள் இருந்தாலும் தனியாக ஆட்கள் வைத்து இந்திய உணவுகள் சமைத்து கொடுக்கப்படுகிறதாம்.












Click it and Unblock the Notifications