சொத்துக்களை இழந்த நடிகர் பாண்டியன்.. ஏழை மாணவர்களுக்கு உதவிய குணம்.. பாண்டியனை காதலித்தது இவங்களா?
சென்னை: திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் மறைந்த நடிகர் பாண்டியன்.. அந்தந்த கட்சியில் இருந்தபோது, பாண்டியனுக்கு தலைவர்கள் செய்த உதவிகள் குறித்து அவரது மகன் ரகு, உருக்கமாகவும், நெகிழ்ச்சியாகவும் பேசியிருக்கிறார்..
Behindwoods TV யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் பாண்டியனின் மகன் ரகு... அந்த பேட்டியில், "எங்கள் சொந்தக்காரர்கள் எப்போதுமே பொறாமைப்படுவார்கள்.. என் அப்பாவுக்கு தன்னுடைய மாமா பெண்ணையே திருமணம் செய்து வைத்தார்கள்.. ஆனால் இந்த கல்யாணத்தில் என் அப்பாவுக்கு கொஞ்சம்கூட இஷ்டமில்லை.. விருப்பமில்லாமல்தான் திருமணம் செய்தார்..

ரியல் எஸ்டேட் தொழில்
என் அப்பா எப்போதுமே பிஸியாக இருந்தார்.. சினிமா அல்லது அரசியல் என சுழன்று கொண்டேயிருந்தார்.. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்தார்.. ஃப்ளைட் ஏஜென்சியாக இருந்தார்.. இலவசமாக எத்தனையோ ஏழை மாணவர்களை படிக்க வைத்தார்.. எல்லாருக்குமே என் அப்பாவை ரொம்ப பிடிக்கும்.. ஜிம்னாஸ்டிக் நல்லா செய்வார்.. அடுத்த புருஸ்லீ என்றுகூட சொல்லலாம்.. கராத்தே நன்றாக செய்வார்.
வீட்டில் நிறைய பேசுவது பாரதிராஜா சார் பத்திதான்.. பாரதிராஜா சார் என்றால் அப்பாவுக்கு உயிர்.. தன்னுடைய அப்பா மாதிரியே அவரை பார்த்தார்.. அதேபோல, பாரதிராஜாவும், அப்பாவை தன்னுடைய மகன் போலவே பாவித்தார்.. அப்பா எப்போதாவது மனம் நொந்துபோயிருந்தால், உடனே "பாண்டியனை கூட்டிட்டு வாங்க, ஏதாச்சும் பண உதவி தேவையா?" என்று கேட்பார். இதெல்லாம்தான், பாரதிராஜா சாரை அப்பாவுக்கு அதிகமாக பிடிக்க காரணம்.
விஜயகாந்த் பெரியப்பா
யாரிடமும் வாய்ப்பு கேட்டு அப்பா போனதில்லை.. தன்னை தேடி வந்த வாய்ப்பில் மட்டுமே நடித்தார்.. என் அப்பாவை நிறைய பேர் அப்போது காதலித்தார்கள்.. ஆனால், அப்பா, எந்த காதலிலும் சிக்காமல் விலகி போயிட்டார். அப்பாவின் கல்யாணத்துக்கு பாரதிராஜா சார், ராமராஜன் சார், ரஜினி சார் மனைவி, விஜயகாந்த் பெரியப்பா, ராதாரவி பெரியப்பா என எல்லாருமே வந்திருந்தார்கள்.
சென்னையில் எங்களுக்கு எந்த வீடும் இல்லை.. அங்கே இருந்த வீட்டையும் விற்றுவிட்டு, மதுரைக்கே வந்துவிட்டோம். ஆனால், சம்பாதித்த சொத்துக்களை எல்லாம் என் அப்பா இழந்துட்டார்.
5 வருட கல்லீரல் பாதிப்பு
காங்கிரஸ் கட்சியில் அப்பா இருந்தபோது, எம்ஜிஆர் சார் நிறைய தந்து உதவியிருக்கிறார்.. அப்பாவுக்கு பக்கபலமாகவும் இருந்திருக்கிறார்.. திமுகவில் இருந்தபோது, கலைஞர் ஐயா நிறைய உதவிகளை செய்து, தன்னுடனே வைத்து கவனித்துகொண்டார்.. அதேபோல அதிமுகவில் இருந்தபோது, அம்மா நிறைய உதவிகளை செய்தார்.. கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஜெயலலிதாம்மா ஏராளமான உதவி செய்தார்.
5 வருஷம் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். ஆனால், அவருக்கு சின்ன வயசிலேயே கல்லீரல் பிரச்சனையும் இருந்திருக்கிறது.. தண்ணி அடிக்காமல் இருந்து, தன்னுடைய உடம்பையும் கொஞ்சம் கவனித்து கொண்டிருந்திருக்கலாம்" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications