நடிகர் பாண்டியராஜனை ஞாபகம் இருக்கா? வெளியான குடும்ப புகைப்படம்.. அஜித்துக்கே டஃப் கொடுக்குறாங்க
சென்னை: நடிகர் பாண்டியராஜன் தன்னுடைய மகன்கள் மற்றும் மனைவி பேரக்குழந்தை என ஒட்டுமொத்த குடும்பத்தோடும் எடுத்த புகைப்படம் இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.
நடிகர் பாண்டியராஜனின் இரண்டாவது மகனான பிரித்வி ராஜன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தில் ப்ரித்வியின் டான்ஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீங்க அஜித்க்கே டஃப் கொடுப்பீங்க போல என்று கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக பாண்டியராஜனும் இருக்கிறார். இவருக்கு புதுமை கலை மன்னன் என்று ஒரு செல்ல பெயர் இருக்கிறதாம். ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் தோற்றம் பெரிய அளவில் பார்க்கப்பட்ட போது நடிப்பிற்கு அழகு, உயரம் முக்கியமில்லை என்று தன்னைப் போல சாதிக்க துடித்தவர்கள் பலருக்கும் முன் மாதிரியாக பாண்டியராஜன் சினிமாவில் கலக்கியிருக்கிறார். இவருடைய காமெடியான நடிப்புக்கு பல ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர்.
அந்த காலத்தில் தொடங்கி இப்ப வரைக்கும் இவருடைய காமெடி பலருக்கும் ஃபேவரைட்டாக தான் இருக்கிறது. இந்த நிலையில் தான் பாண்டியராஜன் 1986 ஆம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அந்த வாசுகி யார் என்றால் அந்த காலத்தில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும் இருந்த அவிநாசி மணியின் மகள்தான்.

வாசுகிக்கும் பாண்டியராஜனுக்கும் திருமணம் முடிந்த பிறகு இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் பிறந்து இருக்கிறார்கள். அதில் பல்லவர ராஜன், பிருத்வி ராஜன், பிரேம் ராஜன் என மூன்று மகன்கள் இருந்த நிலையில் இதில் இரண்டாவது மகன் பிரித்வி ராஜன் தான் சினிமாவில் நடித்திருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னுடைய அப்பா பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான கைவந்த கலை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார்.
அதற்குப் பிறகு பெரிய அளவில் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில் கிடைத்த ஒரு சில வாய்ப்புகளில் பிரித்வி நடித்துக் கொண்டிருந்தார். அதோடு செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக்கில் விளையாடியும் வருகிறார். இந்த நிலையில் தான் இவருக்கு ப்ளூ ஸ்டார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் நடிப்பின் மூலமாக பலருடைய பார்வையை இவர் பக்கம் திருப்பி இருக்கிறார்.

இந்த நிலையில் ப்ரித்வி தன்னுடைய அண்ணன்கள் மற்றும் அப்பா, அம்மா, அண்ணன் குழந்தை என ஒட்டுமொத்த குடும்பத்தோடும் பங்க்ஷன் ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து இருக்கிறார். அதில் "ஆலுமா டோலுமா" பாடலுக்கு குழந்தையோடு பிரித்வி போட்ட டான்ஸ் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications