நடிகர் பாண்டியராஜின் மகன் இந்த நடிகர் தானா? 18 வருடங்கள் கழித்து சினிமாவில் அங்கீகாரம்.. உருக்கமான பதிவு
சென்னை: நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரித்வி ராஜன் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் தனக்கு 18 வருடங்கள் கழித்து கிடைத்த அங்கீகாரத்தை வைத்து தன்னுடைய தந்தையோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து மக்களுக்கு நன்றி கூறி தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாகி அதிகமான வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் பாண்டியராஜனின் மகன் நடித்திருக்கும் நிலையில் அவர் தன்னுடைய தந்தை பாண்டியராஜன் குறித்து நெகிழ்ச்சியோடு பதிவு வெளியிட்டு இருக்கும் நிலையில் அது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ளூ ஸ்டார் திரைப்பட சூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடைய தந்தையோடு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் இப்போது டிரெண்டிங் ஆகி கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக பாண்டியராஜனும் இருக்கிறார். இவருக்கு புதுமை கலை மன்னன் என்று ஒரு செல்ல பெயர் இருக்கிறதாம்.
ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் தோற்றம் பெரிய அளவில் பார்க்கப்பட்ட போது நடிப்பிற்கு அழகு, உயரம் முக்கியமில்லை என்று தன்னைப் போல சாதிக்க துடித்தவர்கள் பலருக்கும் முன் மாதிரியாக பாண்டியராஜன் சினிமாவில் கலக்கியிருக்கிறார். இவருடைய காமெடியான நடிப்புக்கு பல ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர்.

அந்த காலத்தில் தொடங்கி இப்ப வரைக்கும் இவருடைய காமெடி பலருக்கும் ஃபேவரைட்டாக தான் இருக்கிறது. இந்த நிலையில் தான் பாண்டியராஜன் 1986 ஆம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அந்த வாசுகி யார் என்றால் அந்த காலத்தில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும் இருந்த அவிநாசி மணியின் மகள்தான்.
வாசுகிக்கும் பாண்டியராஜனுக்கும் திருமணம் முடிந்த பிறகு இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் பிறந்து இருக்கிறார்கள். அதில் பல்லவர ராஜன், பிருத்வி ராஜன், பிரேம் ராஜன் என மூன்று மகன்கள் இருந்த நிலையில் இதில் இரண்டாவது மகன் பிரித்வி ராஜன் தான் சினிமாவில் நடித்திருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னுடைய அப்பா பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான கைவந்த கலை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.
அதற்குப் பிறகு பெரிய அளவில் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில் கிடைத்த ஒரு சில வாய்ப்புகளில் பிரித்வி நடித்துக் கொண்டிருந்தார். அதோடு செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக்கில் விளையாடியும் வருகிறார். இந்த நிலையில் தான் இவருக்கு இவருக்கு ப்ளூ ஸ்டார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் நடிப்பின் மூலமாக பலருடைய பார்வையை இவர் பக்கம் திரும்பி இருக்கிறார்.

இந்த திரைப்படத்தை ஜெயக்குமார் இயக்கி சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும் நிலையில் தன்னுடைய அப்பாவோடு சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு,' மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்' என்று பதிவிட்டு இருக்கிறார். இப்போது அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதுபோல பிரித்வி ராஜன் வாய்மை, முப்பரிமாணம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவருடைய தந்தையான பாண்டியராஜன் போல சினிமாவில் பெரிய அளவில் பிரித்விவால் சாதிக்க முடியவில்லை என்ற நிலையில் 18 வருடங்கள் கழித்து தனக்கு கிடைத்த வாய்ப்பை தான் சரியாக பயன்படுத்தி தன்னுடைய தந்தைக்கு பெருமை சேர்த்து இருக்கிறேன் என்று உருக்கமாக அவர் கூறி இருக்கும் நிலையில் இது போல இன்னும் அதிகமாக பிரித்வி ஜெயிக்க வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications