சைட் அடிக்கக் கூட எனக்கு தகுதி இல்லை! இன்னைக்கு வரை வாடகை வீட்டில்தான்! பார்த்திபன் உருக்கம்
சென்னை: வறுமை காரணமாக எனக்கு வந்த பல காதலை நான் மிஸ் செய்திருக்கிறேன். அவ்வளவு ஏன் சைட் அடிச்சது கூட கிடையாது என நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் சிறந்த நடிகர், இயக்குநர், வசன கர்த்தா, எல்லாவற்றையும் விட டைமிங்கில் காமெடி செய்வார். அவர் தான் சிறு வயதில் பட்ட கஷ்டத்தை ஒரு யூடியூப் சேனலுக்கு பார்த்திபன் மனம் திறந்து பேட்டியாக கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: "சிறு வயதிலேயே எனக்கும் என் தம்பிக்கும் பல விஷயத்தை என் அப்பா கற்றுக் கொடுத்திருக்கிறார். சம்பளம் வாங்கியதும் முதல் 5 தேதிக்குள் அனைத்தையும் செலவு செய்துவிடுவார். அதன் பிறகு மின்சார கட்டணம் கூட கட்டுவதற்கு பணம் இருக்காது. இதனால் எங்கள் வீட்டில் மின் துண்டிப்பு நடந்து பல முறை இருட்டாகவே இருக்கும்.
தாலியை விற்று
அம்மா அணிந்திருக்கும் தாலியை விற்று, வீட்டில் இருக்கும் பாத்திரம் பண்டங்களை எல்லாம் விற்று கரன்ட் பில் கட்டுவார். அப்பா ஒரு நாளைக்கு 10 பாக்கெட் சிகரெட் பிடிப்பார். இதனாலேயே நான் இதுவரை சிகரெட் பிடித்ததே இல்லை. அப்பாவிடம் இருந்து முதலில் நான் கற்றுக் கொண்டது , இது போல் இருக்கக் கூடாது என்பதுதான்.
குடும்பத்தில் வறுமை
என் குடும்பத்தில் வறுமை இருந்ததால் எனக்குள் தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது. இதனால் நான் மற்ற குழந்தைகளை போல எப்போதும் விளையாடியதில்லை, அவ்வளவு ஏன் சைட் கூட நான் அடித்தது கிடையாது. சைட் அடிக்க எனக்கு தகுதி இல்லை என்று நினைத்து பெண்களை பார்த்தாலே தலையை குனிந்து கொண்டுதான் செல்வேன்.
காதல் வயப்படவில்லை
ஆனால் அந்த நேரத்திலும் ஒரு சில காதல் என்னை கடந்து சென்றது. என் இளமை காலத்தில் வந்த ல காதலை நான் மிஸ் செய்ததற்கு என் குடும்பத்தில் இருந்த வறுமைதான் காரணம். நல்ல வேளை இந்த காதலை நான் மிஸ் செய்தேன். இல்லாவிட்டால் நான் எங்காவது கூஜா தூக்கிக் கொண்டு இருந்திருப்பேன். என் குடும்பத்தில் இருந்த வறுமைதான் என்னை செழுமைப்படுத்தியது.
வாடகை வீடு
நான் இன்று கூட வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறேன். நான் படம் எடுக்கும் போதெல்லாம் அடுத்த படத்தில் சொந்தமாக வீடு வாங்கலாம் என நினைப்பேன். ஆனால் முடியாது. புதிய பாதை படம் வெளியான போது நான் எந்த மாதிரியான விளம்பரத்தை பயன்படுத்தினேனோ அதையே இப்போதும் பயன்படுத்தி வருகிறேன். சினிமாவில் நிலைத்திருப்பது என்பது உண்மையில் பெரிய கஷ்டமான விஷயம் என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
மறுமணம் செய்யாதது ஏன்
சீதாவை பிரிந்த பிறகு ஏன் மறுமணம் செய்யவில்லை என்ற கேள்விக்கு பார்த்திபன் கூறுகையில், சீதாவிற்கு பிறகு யாரையும் என் மனைவியாக ஏற்க முடியவில்லை. இதனால் நான் மறுமணம் செய்து கொள்ளவில்லை என தெரிவித்தார்.
சீதாவுடன் விவாகரத்து
புதிய பாதை படத்தில் நடித்த போது பார்த்திபனுக்கும் சீதாவுக்கும் காதல் ஏற்பட்டு 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 11 ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்த நிலையில் கீர்த்தனா, ராக்கி, அபிநயா என 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2001 ஆம் ஆண்டு பார்த்திபனும் சீதாவும் பிரிந்து விட்டனர். அண்மையில் கூட சீதாவின் மகள் திருமணத்திற்கு பார்த்திபன் வந்திருந்து தந்தை செய்ய வேண்டிய கடமையை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications