ஒரு லட்சத்திற்காக டெஸ்ட் வைத்த சிரஞ்சீவி.. மிரள வைத்த பொன்னம்பலம்..அந்த நேரத்தில் கூட இப்படியா?
சென்னை: ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மேனாக அறிமுகமான பொன்னம்பலம் பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார்.
அந்த வகையில் தற்போது பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பல தகவல்களையும் ரகசியங்களையும் கூறி இருக்கிறார்.
அதில் தான் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டதால் தனக்கு சிரஞ்சீவி வைத்த டெஸ்ட் பற்றியும், இறுதியில் அவர் சொன்ன வார்த்தை பற்றியும் பொன்னம்பலம் பெருமையாக பேசி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் பொன்னம்பலம். அவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஸ்டண்ட் மேனாக அறிமுகம் ஆகி இருந்தார் அது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் ஆரம்பத்திலேயே அவர் ஸ்போர்ட்ஸிலும் அதிக ஆர்வத்தோடு இருந்திருக்கிறார்.
அதனாலேயே அவருடைய உடல் அமைப்பு எந்த ஃபைட் சீன் ஆக இருந்தாலும் அதில் வளைந்து நெளிந்து பார்ப்பவர்களை பிரமிக்க வைத்திருக்கும். அதனாலேயே அவருக்கு ஸ்டாண்ட் மேனாக இருப்பது அவ்வளவு கடினமாக இருக்கவில்லையாம்.
இதுபோல அவர் ஸ்டண்ட் மேனாக இருந்த காலகட்டத்தில் அவருக்கு ஈக்குவலாக இன்னொரு ஸ்டாண்ட்மேன் இல்லாத அளவிற்கு இவர் பிரமாதமாக சண்டைக் காட்சிகளில் நடித்து வந்திருக்கிறார். இந்த நிலையில்தான் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் அவருக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வு குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில், தனக்கு திருமணமாக இருந்த சமயத்தில் அவருடைய திருமணத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் தேவைப்பட்டதாம். அப்போது அவரிடம் இருந்தது இரண்டு லட்சம் ரூபாய் தானாம். அந்த நேரத்தில் சிரஞ்சீவி படத்தில் சண்டைக் காட்சிக்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஆனால் பொன்னம்பலம் எனக்கு அதற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தால்தான் அந்தப் படத்தில் நடிப்பேன் என்று கூறினாராம். அப்போது ஸ்டாண்ட் மாஸ்டருக்கு கூட அவ்வளவு சம்பளம் எல்லாம் கொடுக்க மாட்டாங்களாம். அதனால இவர் மட்டும் இவ்வளவு சம்பளம் கேட்கிறாரே என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இந்த செய்தி சிரஞ்சீவிக்கும் போயிருக்கிறது.

அப்போ சிரஞ்சீவி ஒரு லட்ச ரூபாய் கேட்கிறார் என்றால் அந்த அளவிற்கு அவரிடம் என்ன திறமை இருக்குன்னு பாக்கலாம் என்று அவரை நேரில் வர சொல்லுங்கள் என்று கூறினாராம். அதனால் இவரிடம் பேசியவர்கள் உனது சண்டைக்காட்சி முதலில் நன்றாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.
அதற்கு பொன்னம்பலம் என்னுடைய சண்டை காட்சி நல்லா இருந்தா மட்டும் எனக்கு சம்பளம் தந்தால் போதும் என்று கூறியிருக்கிறார். பிறகு இவருடைய சண்டை காட்சிகளை பார்த்த சிரஞ்சீவி மிரண்டு போய் இருக்கிறார். மிகவும் திறமையான ஆள் தான் இவர் கேட்ட சம்பளத்தை கொடுங்கள் என்று சொல்லி ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தையும் வாங்கி கொடுத்ததாக அந்த பேட்டியில் சிரஞ்சீவி பற்றி பொன்னம்பலம் பேசி இருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் பொன்னம்பலத்தின் சண்டைக் காட்சிகள் பல திரைப்படங்களில் இடம்பெறும். இவருடைய சண்டைக்காட்சிகள் மட்டுமல்லாமல் மாஸான வசனங்களும் இவருக்கு தனித்துவமான அடையாளத்தை கொடுத்தது. அதுவும் நாட்டாமை திரைப்படத்தில் இவர் நடித்த நடிப்பை யாராலும் மறந்திருக்க முடியாது. அதுவும் மனோரமாவை இவர் தாய்க்கிழவி என்று கூப்பிட்டு மிரட்டுவதாக இருந்தாலும் சரி, தன்னுடைய உடல் மொழியால் தத்ரூபமாக நடித்து மிரள வைத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
-
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications