10 வருடம்..அந்த "புண்ணியம்".. நடிகர் ராம் சரண் "குழந்தை" குறித்து பொன்னம்பலம் நெகிழ்ச்சி.. காரணம்?
சென்னை: வில்லனாக பலரையும் மிரட்டிய நடிகர் பொன்னம்பலம் தற்போது நடிகர் ராம்சரண் குறித்து பல உண்மைகளை உடைத்திருக்கிறார்.
உடல்நிலை சரியில்லாமல் இருந்த பொன்னம்பலம் சமீபத்தில் தான் சில நடிகர்களின் உதவியால் மீண்டும் தன்னுடைய பழைய நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கிறார்.
இந்த இலையில் சமீபத்தில் பல வருடங்களுக்குப் பிறகு நடிகர் ராம்சரணுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அது குறித்து சில தகவல்களை பொன்னம்பலம் கூறி இருக்கிறார்.

பொதுவாகவே தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு போன்று வில்லன்களுக்கும் அதிகமான வரவேற்பு இருக்கிறது. எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் நம்பியார் அசோகன், எம்.ஆர் ராதா போன்றவர்கள் பிரபலமாக இருந்தனர்.
அதற்குப் பிறகு பல நடிகர்கள் அந்த இடத்தை பிடித்திருந்தனர். அந்த வகையில் நடிகர் பொன்னம்பலமும் ஒரு முக்கியமான வில்லன் நடிகர் தான். இவர் மற்ற நடிகர்களைப் போல வில்லத்தனமாக மட்டும் நடிக்காமல் ஸ்டாண்ட்மேன் ஆக தான் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
விஜயகாந்த், சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களோடு திரைப்படங்களில் சண்டை இட்டு வில்லனாக நடித்திருந்தாலும் இவர் சண்டை காட்சிகளில் பல அடிகளை வாங்கி கஷ்டப்பட்டு தான் நடிப்பதற்கான வாய்ப்பை கடைசியாக பெற்றிருக்கிறார். இந்த நிலையில் கடந்த வருடம் இவர் கடுமையான உடல்நல பிரச்சனைக்கு உள்ளானார். அவரிடம் இருந்த பணம் எல்லாம் செலவு செய்த பிறகும் கூட அவருடைய உடல்நிலை சரி செய்ய முடியவில்லை.
கடைசியில் டயாலிசிஸ் செய்வதற்கு பணம் இல்லாமல் இருந்த நேரத்தில் யாரிடம் பணம் கேட்பது என்று தெரியாமல் இவர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று உள்ளாராம். அப்போது சிரஞ்சீவி இடம் காசு கேட்கலாம் என்று அவருக்கு தோன்றியிருக்கிறது. ரொம்பவே யோசித்து பிறகு சிரஞ்சீவிக்கு ஒரு மெசேஜ் மட்டும் செய்தாராம்.
காரணம் அவர் சிரஞ்சீவியுடன் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இருவருக்கும் நட்பு இருந்த நிலையில் சிரஞ்சீவியை நம்பி பொன்னம்பலம் மெசேஜ் செய்திருக்கிறார். உடனே இவருடைய மெசேஜை பார்த்த சிரஞ்சீவி அவருக்கு போன் செய்து விஷயத்தை அறிந்து அப்பல்லோ மருத்துவமனையில் பேசி அங்கு பொன்னம்பலம் சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.
அதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஆறு மாசம் அங்கு பொன்னம்பலம் சிகிச்சை பெற்று இருக்கிறார். அதற்கான மொத்த செலவையும் சிரஞ்சீவி ஏற்றுக்கொண்டாராம். தற்போது உடல்நிலை சரியாகி வந்திருக்கும் பொன்னம்பலம் இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறும் போது," கடவுள் என்று ஒருவரை நான் பார்த்ததில்லை. நான் நேரில் கண்ட கடவுள் என்றால் அது சிரஞ்சீவியாக தான் இருக்க முடியும்" என்று கூறியிருக்கிறார்.
அதுபோல சிரஞ்சீவிக்காக நான் மனமார நன்றி கூறினேன். அதன் பிரதி பலனாகத்தான் சிரஞ்சீவியின் மருமகள் தற்சமயம் கர்ப்பமாக இருந்து குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். 10 வருடங்கள் ஆக அவர்கள் பிள்ளை இல்லாமல் இருந்தார்கள். தற்போது அழகான குழந்தையை பெற்றெடுத்திருக்கின்றனர். அது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் பொன்னம்பலம் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications