அன்னை இல்லத்தில் நெஞ்சுவலியால் துடித்த சிவாஜி சொன்ன வார்த்தை.. சொத்து உடையுதே? பிரபு கரெக்ட் பேச்சு
சென்னை: ஜப்தி உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி அப்துல் குத்துாஸ் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. நடிகர் பிரபு தரப்பில், "என் சகோதரர் குடும்பம் வாங்கிய கடனுக்கு, என் சொத்தை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அது எவ்வாறு முறையாகும்? சகோதரர் குடும்பம் வாங்கிய கடனுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?' என்று வாதாடப்பட்டது".. இந்நிலையில், பிரவு வாதம் குறித்து, ராஜகம்பீரன் தன்னுடைய கருத்துக்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சினிமா விமர்சகர் ராஜகம்பீரன், 150 கோடி மதிப்பு இருக்கக்கூடிய, தி.நகரில் அரண்மனை போன்ற வீடு இருக்கக்கூடிய, நடிப்பில் ஈடு இணை சொல்ல முடியாத சிவாஜி கணேசனின் புகழை, மரியாதையை அடுத்த தலைமுறையினர் காப்பாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் எல்லாம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

சாந்தி தியேட்டர்
ஆனால், இதற்கு எந்தவகையிலும் பொருத்தமில்லாமல், ராம்குமார் போன்றோர் இந்த 3 கோடி கடன் மட்டுமல்ல, பல இடங்களில் கடன் வாங்கி வைத்திருக்கிறாராம். பாஜகவிலும் ராம்குமார் இணைந்தார்.. குடும்பத்தின் புகழை, கவுரவத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லவிட்டாலும் பரவாயில்லை, கீழ்நிலைமைக்கு கொண்டு போய்விடக்கூடாது..
சாந்தி தியேட்டர் இடித்தபோது, "தியேட்டரை இடித்து காம்ப்ளக்ஸ் கட்டுகிறோமே தவிர, நாங்கள் அப்படியே விட்டுட மாட்டோம், காம்ப்ளக்ஸ்க்குள்ள தியேட்டர் கட்ட போகிறோம், சிவாஜிக்கு சிலை வைக்க போகிறோம்" என்று பிரபு சொன்னார்.. ரசிகர்களிடம் அதிருப்தி வந்துவிடக்கூடாதே என்பதற்காக இப்படி தந்திரமாக அன்று சொன்னார். ஆனால், 10 ஆண்டு காலமாக அப்படி எதுவுமே நடக்கவில்லை..
150 கோடி சொத்து - 3 கோடி கடன்
150 சொத்து, 3 கோடி கடனுக்காக ஜப்தி செய்வது பெரிய அவமானகரமான விஷயம்.. அரசாங்கமோ, நடிகர் சங்கமோ காப்பாற்ற முடியாது.. இது தனிப்பட்ட விவகாரம்... அண்ணன் வாங்கிய கடனுக்கு, தான் பொறுப்பேற்க முடியாது என்று பிரபு தற்போது எடுத்துள்ள முடிவு சரியானது. பொருளாதார விஷயத்தில், ஒரு எல்லைக்கு மேல் யாரும் உதவவே முடியாது..
நடிகர் சிவாஜி கணேசன், அடித்தட்டு இடத்திலிருந்து வந்தவர்.. எல்லா துன்பங்களையும் நிஜ வாழ்க்கையில் பெற்றவர்.. துயரமான வாழ்க்கையை வாழ்ந்துதான், பராசக்தி மூலம் உயர்ந்தவர்.. அப்படிப்பட்டவர் குடும்பத்தில், குறைந்தபட்சம் பொறுப்புணர்ச்சி இல்லாதது, ரசிகர்களுக்கு வருத்தப்படக்கூடிய விஷயமாக உள்ளது..
பிரபு முடிவு சரியானதே
எம்ஜிஆர் உட்பட பல தலைவர்களுக்கு வாரிசு இல்லையே என்ற நிலைமை இருந்தது. ஆனால் சிவாஜிக்கு வாரிசு இருந்தும் 3 தலைமுறைகூட தாண்ட முடியவில்லை. நேற்று பிரபு எடுத்துள்ள முடிவு சரியானதே.
90'களில், ஒருநாள், இரவு நேரத்தில் சிவாஜிக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது. அப்போது அவரது அருகில் யாரும் இல்லை.. அப்போது செல்போனும் இல்லாத காலம்.. சிவாஜியே தட்டுத்தடுமாறி எழுந்து லேன்ட்லைன் போன் செய்து, குடும்ப டாக்டரை வரவழைத்துள்ளார்.. அந்த டாக்டர் உடனடியாக வந்து சிவாஜியின் உயிரை காப்பாற்றியிருக்கிறார். கடைசி காலத்தில் மிகப்பெரிய தனிமையில் சிவாஜி கணேசன் இருந்தபோது, இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார்..
சிவாஜிக்கு நெஞ்சுவலி
"தன்னந்தனியாக பெரிய வீடு கட்டி வாழ கூடாது.. சின்ன வீட்டில் இருந்தால், நெஞ்சு வலி என்றாலும், என்ன ஏதென்று பக்கத்தில் யாராவது கேட்பாங்க.. பெரிய வீடு என்றால், ஏசி ரூமில் பூட்டிக்கொண்டு இருந்தால், அங்கு யாருமே காப்பாற்ற இருக்க மாட்டார்கள். அப்படித்தான் நான் சாகறதுக்கு இருந்தேன்.. இவ்வளவு பெரிய வீட்டை கட்டியிருக்க கூடாது" என்று சிவாஜி கணேசன் அப்பவே வாக்குமூலமாக தந்திருந்தார். இப்போது ஜப்தி வரை கொண்டுவந்துவிட்டார்கள் அவரது வாரிசுகள்" என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications