"இந்த விஷயத்தை வெளியே சொன்னே..!" நடிகை மீனாவை மிரட்டிய நடிகர் பிரபு.. ஏன் என்னாச்சு?
சென்னை: தன்னுடன் ஹீரோயினாக நடித்த நடிகை மீனாவை நடிகர் பிரபு மிரட்டியதாக தனது பேட்டி ஒன்றில் கண்ணழகியே தகவல்களை பகிர்ந்துள்ள சம்பவம் "அதிர்ச்சியை" ஏற்படுத்தியுள்ளது. நடிகை மீனா திரையுலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன.
நடிகை மீனா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இன்று 40 ஆண்டுகளை கடந்த நிலையிலும் அவர் பல படங்களில் நடித்துத்தான் வருகிறார். அது போல் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்கிறார்.

இவரது முழு பெயர் மீனாட்சி சுந்தரேஸ்வரி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை நன்கு பேசுவார். இவர் சிறுவயதிலேயே திரைப்படங்களில் நடித்து வந்ததால் தனது கல்வியை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
எனினும் படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் 10ஆம் வகுப்பை தனியார் பயிற்சியுடன் தேர்ச்சி பெற்றார். 2006 ஆம் ஆண்டு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலம் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பட்டம் பெற்றார். மீனா பரதநாட்டியம் பயிற்சி பெற்றவர். இவர் பெங்களூரை சேர்ந்த மென்பொருள் என்ஜீனியரான வித்யாசாகர் என்பவரை 2009ஆம் ஆண்டு மணந்தார்.
இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் தெறி படத்தில் விஜய்யுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக 2022 ஆம் ஆண்டு காலமானார். பெங்களூரில் புறாக்களின் எச்சத்தால் நுரையீரல் பாதித்ததாக சொல்லப்பட்டது. இந்த பெரிய இழப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தற்போதுதான் அவர் வெளியே வந்திருக்கிறார்.
சில படங்களிலும நடித்துள்ளார். மீனா எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்கக் கூடியவர். அது போல் நடனம் ஆடுவதிலும் வல்லவர், 90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தார். எத்தனையோ முன்னணி நடிகைகள் தமிழ் சினிமாவில் இருந்த போதிலும் மீனா தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார்.
மீனாவுக்கு நெருங்கிய தோழிகள் என்றால் கலா மாஸ்டர், சங்கவி, மகேஸ்வரி, சினேகா, ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்டோர் என ஒரு பட்டாளமே இருக்கிறது. நடிகை மீனாவை கலா மாஸ்டர் மறுமணம் செய்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியும் அதற்கு மீனா மறுத்துவிட்டாராம்.
இந்த நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் மீனாவிடம் கலா மாஸ்டர் சில கேள்விகளை கேட்டதும் அதற்கு மீனா பதிலளிப்பதுமாக இருந்தது. அதில் குழந்தை நைனிகாவை நடிகையாவாரா என கேட்டதற்கு மீனாவோ , நைனிகாவுக்கு இப்போது கீபோர்ட் வாசிப்பதில் ஆர்வம் உள்ளது. வளர்ந்ததும் அவர் எந்த துறையை விரும்புகிறாரோ அந்த துறையில் முன்னேற அவருக்கு நான் உதவியாக இருப்பேன்.
ஆனால் சினிமாவுக்காக படிப்பு பாதிக்கப்படாதபடி நடிக்க வேண்டும். நான் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு காரணமே என் அம்மாதான். இன்று வரை அம்மா அம்மா என்றுதான் இருக்கிறேன். நான் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில்தான் அறிமுகமானதாக பலர் சொல்கிறார்கள்.
ஆனால் நான் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்துள்ளேன். கமல்ஹாசனுக்கு மகளாக யாத்கார் என்ற இந்தி படத்தில் மீனா நடித்துள்ளார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, மம்முட்டி ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு அவர்களுடன் ஹீரோயினாக நடித்தேன்.
நடிகை மீனா நெஞ்சங்கள் என்ற படத்தில் சிவாஜியின் மகளாக தனது திரைப்பயணத்தை தொடங்கினேன். தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் டிஸ்கோ டான்சர் என்ற படத்திலும் நடித்துள்ளேன். மேற்கண்ட நடிகர்களுடன் குழந்தையாகவும் நடித்துவிட்டு பின்னாளில் ஹீரோயினாகவும் நடித்துள்ளேன். ஆனால் எஜமான் படத்தில் நான் ரஜினியுடன் ஜோடியாக சேர்ந்ததைதான் பலரும் பேசுகிறார்கள்.
ஒரு முறை பிரபுவுடன் ராஜகுமாரி படத்தில் ஹீரோயினாக நடித்த போது அவரிடம் குழந்தை நட்சத்திரமாக அவருடன் நடித்ததையே கூறினேன். அதற்கு அவர் ஆச்சரியப்பட்டு, இந்த விஷயத்தை வெளியே சொன்ன அவ்வளவு தான் என மிரட்டியதாகவும் மீனா கலகலப்பாக பேட்டி அளித்தார். குழந்தை நட்சத்திரமாக இருந்து தன்னுடன் ஹீரோயினாக மீனா நடித்ததால் பிரபுவின் வயது தெரிந்து விடும் என்பதால் பிரபு அப்படி விளையாட்டுக்காக மிரட்டியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications