பிரபுவின் குழந்தை மனம்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நெகிழ்ச்சி.. சிவாஜியின் வாரிசு ஒரு எம்ஜிஆர்: பிரபலம்
சென்னை: அந்த காலத்தில் கை கடிகாரம், சுவர் கடிகாரம் என்றால் பெரிய விஷயம்.. படத்தில் வேலை பார்க்கும் டெக்னீஷியன்களுக்கு இந்த கடிகாரங்களை பரிசளிப்பார் பிரபு.. அவர்களுக்கு சன்மானம், மருத்துவ உதவி, கல்வி கட்டணம் இதையெல்லாம் பிரபுவே செய்வார்"என்று நடிகர் பிரபுவின் தயாள குணம் பற்றி பேட்டி ஒன்றில் சிலாகித்து கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.
Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, நடிகர் பிரபுவின் குணநலன்களை பற்றி புகழ்ந்தும், நெகிழ்ந்தும் பேசியிருந்தார்..

அதில், "சிவாஜி வீட்டில் ஒரு எம்ஜிஆர்" என்று பிரபுவை சொல்வார்கள்.. இதற்கு காரணம், வெள்ளந்தியாக அனைவரிடம் பழகுவார் பிரபு.. சிறியவர் , பெரியவர்களுக்கு மதிப்பு தருவது, அன்பாக பழகுவது என அத்தனை நல்ல குணங்களும் பிரபுவிடம் இருக்கும்.. நடிகர் திலகத்தின் மகன் என்ற கர்வம் சிறிதும் கிடையாது..
சிவாஜி வீட்டில் ஒரு எம்ஜிஆர்
பெங்களூரிலேயே படித்து வளர்ந்தவர் பிரபு.. ஆங்கில மொழி கற்ற பிரபுவிக்கு தமிழ் சரியாக வராதாம். சிவாஜியை வைத்து அதிக படம் எடுத்த, சிவி ராஜேந்தரன், பிரபுவை வைத்து முதல்முதலாக படம் எடுக்க முயன்றார். "அவனுக்கு தமிழே சரியா வராதே?" என்று சிவாஜி சொல்ல, அதையும் மீறி சிவி ராஜேந்தரன் பிரபுவை வைத்து படம் எடுத்தார்.. முதல் படத்திலேயே பிரபுவின் தமிழ் உச்சரிப்பை பார்த்து அனைவருமே அசந்துபோய்விட்டார்களாம்.
அன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரே நேரத்தில் 10 படங்களின் ஷூட்டிங் நடிக்கும். அதில் பிரபுவின் ஒரு படமும் நிச்சயம் நடந்து கொண்டிருக்கும். ஷாட் இல்லாவிட்டாலும், வெளியே சேர் போட்டு உட்கார்ந்திருப்பார். பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் கூப்பிட்டு பேசுவார்.
மணக்க மணக்க சாப்பாடு
பத்திரிகையாளர்கள், நடிகர், நடிகைகளை பேட்டி எடுக்கவே ஸ்டுடியோவுக்கு வந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு, எந்தெந்த செட்டில் யார் யார் நடிகர், நடிகைகள்இருக்கிறார்கள்? என்பதை பிரபுவே எங்களிடம சொல்வார்.. இதுவே மற்றவர்களாக இருந்தால் ஈகோ காரணமாக, மற்ற நடிகர்களை பேட்டி எடுப்பதற்கு உதவ மாட்டார்கள்.
அதேபோல, பத்திரிகையாளர்களுக்கும் சேர்த்து சாப்பாடு போடுவார்.. நாம் வேறு வேலைக்கு ஸ்டுடியோவுக்கு சென்றிருந்தாலும், சாப்பாடு போட்டு அழகு பார்ப்பார்.. அதனால்தான் சிவாஜி வீட்டில் ஒரு எம்ஜிஆர் என்று பிரபுவை சொல்வார்கள்..
எப்போதுமே அவர் செட்டில் இருந்தாலே, அந்த இடம் கலகலவென்று மாறிவிடும்.. செட்டில் பணிபுரியும் டெக்னீஷியன்கள் பெரும்பாலும், அவருடைய அப்பா காலத்தில் இருந்தே பணிபுரிபவர்கள் என்பதால், அனைவரையுமே "அண்ணே" என்று மரியாதையுடன்தான் அழைத்துதான் பேசுவார்..
சுவர் கடிகாரம் கிஃப்ட்
அந்த காலத்தில் கை கடிகாரம், சுவர் கடிகாரம் என்றால் பெரிய விஷயம்.. படத்தில் வேலை பார்க்கும் டெக்னீஷியன்களுக்கு இந்த கடிகாரங்களை பரிசளிப்பார் பிரபு.. அதேபோல, அவர்களுக்கு சன்மானம், மருத்துவ உதவி, கல்வி கட்டணம் இதையெல்லாம் பிரபுவே செய்வார். தங்கமான குணம்.. பிரபு குழந்தை மாதிரி..
பிரபுவின் சித்தப்பா சண்முகம் என்பவர்தான் பணவிவகாரத்தை கவனித்து கொண்டிருந்தார்.. யார் பண உதவி என்று கேட்டாலும், நீங்க போய் சித்தப்பாவை பாருங்க, நான் சொல்கிறேன்" என்று அனுப்பி வைப்பார். சண்முகம் சார் ஆபீஸ் அப்போது ராயப்பேட்டையில் இருந்தது.. பிரபு சார் அனுப்பி வைத்தார் என்று சொன்னாலே, மறுப்பேதுமின்றி வந்தவர்களுக்கு நிச்சயம் பணம் தந்து அனுப்புவார் சண்முகம் சார். இப்படி விளம்பரமே இல்லாமல் பண உதவிகளை செய்தவர் பிரபு.
நடிகர் கார்த்திக் - ஆதர்ச நாயகன்
நடிகையுடன் கிசுகிசு வந்தது உண்மைதான்.. இந்த காதல், கிசுகிசுக்களுக்கு அவர்கள் இருவருமே அப்போது மறுப்பு தெரிவிக்கவில்லை.. ஆனால், சிவாஜி தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்ததாக சொல்வார்கள்.. ஒருகட்டத்தில், பிரபுவும், அந்த நடிகையும் ஒன்றுசேர்ந்து நடிப்பது குறைந்துவிடவும், அந்த கிசுகிசுவும் அடங்கிவிட்டது. ஆனால், நடிகர் கார்த்திக்கையும் தன்னுடைய ஆதர்ச நாயகன் என்று அந்த நடிகை வெளிப்படையாகவே சொன்னார்
சிவாஜி சாருக்கு, கமலா அம்மாள் எப்படி உற்ற துணையோ, அதுபோலவே, பிரபு சாருக்கு அவரது மனைவி அமைந்துள்ளதாக சொல்வார்கள்.. நெருக்கமான உறவுக்கார பெண் என்றாலும், பிரபு சாரின் மைன்செட்டை நன்றாக தெரிந்தவர் அவரது மனைவி.. கணவரின் ஈகை குணம், எத்தனையோ ரசிகர்கள், தன் கணவனை உச்சிமுகர்ந்து கொண்டாடுவது, இதெல்லாம் பார்த்து மகிழ்ந்தவர்" என்று கூறியிருக்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications