என் மனைவி சான்ரா நடித்த திரைப்படம்.. வடிவுக்கரசி என்கிட்ட நேரடியாவே கேட்டாங்க! நடிகர் பிரஜின் ஓபன்
சென்னை: நடிகர் பிரஜின் மற்றும் நடிகை சான்ரா எமி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் பிறந்ததும் சான்ரா எந்த திரைப்படங்களிலும் சினிமாவிலும் நடிக்கவில்லை. இது குறித்து நடிகர் பிரஜின் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
பொதுவாக சின்னத்திரையில் ஒன்றாக நடிக்கும் பலர் காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் பலருக்கும் பரீட்சயமான ஜோடி தான் பிரஜின் மற்றும் சான்ரா எமி தம்பதி. சான்ரா டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதற்கு பிறகு தலையணை பூக்கள் உட்பட ஒரு சில சீரியல்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

சின்னத்திரை தம்பதி
அது போலவே நடிகர் பிரஜினும் ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்தார். பிறகு சில சீரியல்களில் நடித்திருந்தார். அதிலும் காதலிக்க நேரமில்லை என்ற 90ஸ்களின் பேவரைட் சீரியலில் இவர்தான் கதாநாயகனாக நடித்திருந்தார். 'என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு' என்ற பாடலில் இவருடைய அசத்தலான பெர்பாமென்ஸ் பல இளம் பெண்களை கவர்ந்தது. அதேபோல சின்னத்தம்பி, அன்புடன் குஷி உட்பட பல சீரியல்களிலும் நடித்திருந்தார்.
மகிழ்ச்சியான திருமணம்
சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் வந்தது திரைப்படங்களிலும் நடித்திருந்தார். ஆனால் திரைப்படங்களில் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் தான் சான்ரா மற்றும் இந்த பிரஜின் இருவரும் திருமணம் செய்தனர். திருமணத்திற்கு பிறகு பல கஷ்டங்கள் பட்டனர். ஆனாலும் தங்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

வடிவுகரசி கேட்ட கேள்வி
இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய திருமண வாழ்க்கை, மனைவி குறித்து பிரஜின் பேசி இருக்கிறார். அதில் என்னுடைய மனைவி திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை என்பதால் அதற்கு நான் தான் காரணம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு முறை ஒரு சீரியலில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது இடைவேளை நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது நடிகை வடிவுக்கரசியும் என்னோடு சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
சான்ராவிற்கு விருப்பமில்லை
அவர் என்னை திட்ட தொடங்கி விட்டார். உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்குதா? நல்ல நடிக்கிற திறமை இருக்கிற ஒரு பொண்ணை வீட்டில் அடைச்சி வச்சிருக்கியே என்று கேட்டார்கள். எனக்கும் சான்ரா மீண்டும் நடிப்பதில் ஆசைதான். நான் அது பற்றி அவரிடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் அவர்தான் குழந்தைகள் இன்னும் கொஞ்சம் வளரட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மனைவி நடித்த படம்
நான் அவரை எப்போதும் நடிக்க வேண்டாம் என்று சொன்னது கிடையாது அதனால் நீங்கள் சாப்பிடுங்க மேடம். அவங்க கிட்ட இதைத்தான் நானும் கேட்டுகிட்டே இருக்கிறேன் என்று சொன்னேன் அதற்குப் பிறகு அவங்க புரிஞ்சுகிட்டாங்க. அதுபோல என்னுடைய மனைவி நடிச்ச "சிவப்பு எனக்கு பிடிக்கும்" என்ற திரைப்படம் வெளியான போது பல விமர்சனங்கள் வந்தது.
சர்ச்சை திரைப்படம்
அந்த படத்தின் போஸ்டரில் காட்டப்பட்டபோது 18+ திரைப்படம் மாதிரி இருந்தது. ஆனால் படத்தில் அப்படி ஒரு காட்சி கூட இல்லை. அந்த திரைப்படத்தில் பாலியல் தொழிலாளி கேரக்டரில் தான் சான்ரா நடித்திருந்தாங்க படத்தின் கதையை சொல்லும்போது டைரக்டர் என்கிட்டயும் கதையை சொல்லி இருந்தாரு. என்னுடைய முழு சப்போர்ட் உடன் தான் சான்ரா அந்த கேரக்டரில் நடித்திருந்தாங்க. அவர்களுடைய நடிப்ப அந்த படத்தில் சரியாக கொடுத்திருந்தாங்க.
மீண்டும் நடிப்பு
ஆனால் அந்த நேரத்தில் நாங்கள் கஷ்டப்பட்டு இருந்ததால் சீரியலில் வாய்ப்பு இல்லை என்பதற்காக சான்ரா இதுபோல திரைப்படத்தில் நடித்து விட்டார் என்று சில விமர்சனங்கள் எழுந்தது. அதைப்பற்றி எல்லாம் நாங்கள் கண்டு கொள்ளவே இல்லை. சான்ராவின் நடிப்புக்கு இன்னும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இப்போதைக்கு அவர் நடிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார் எப்போ வேணாலும் சீரியல் மற்றும் சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்குவார் என்று அந்த பேட்டியில் பிரஜின் பேசியிருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications