வதந்திக்கு பதிலடி.. மனைவி பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி.. கேக் வெட்டிய பிரேம்ஜி.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் பிரேம்ஜியின் மனைவியான இந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு இணையத்தில் அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது. பிரேம்ஜி மற்றும் இந்து இருவரும் பிரிய போகிறார்கள் என்று பரவி வந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த வீடியோ இருக்கிறது.
கடந்த வருடத்தில் ஒரு சில சினிமா பிரபலங்களின் திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் நடிகர் பிரேம்ஜியின் திருமணமும் ஒன்று. பிரேம்ஜி எல்லா இடங்களிலும் தான் சிங்கிள் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் 45 வயதில் யாரும் எதிர் பார்க்காத வகையில் காதல் திருமணம் செய்து கொண்டார்.

பிரேம்ஜியை விடவும் அவருடைய மனைவி இந்துவிற்கு அதிக வயது வித்தியாசம் என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனாலும் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பது பலருடைய வாழ்த்தாக இருக்கிறது. பிரேம்ஜியும் அவருடைய மனைவியும் இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் அறிமுகமாகி பேசி பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் பிரேம்ஜியின் மனைவி இந்துவின் குடும்பத்தில் ஒரு சிலர் இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்று இந்து பேட்டியில் பேசி இருக்கிறார். அதிலும் தன்னுடைய தம்பி தன் திருமணத்திற்கு பிறகு என்னிடம் பேசவே இல்லை, முதலில் எனக்கு வருத்தமாக இருந்தாலும் பிறகு நம்மை மதிக்காதவர்கள் நம்மை புரிந்து கொள்ளாதவர்கள் நம்மிடம் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்று நான் புரிந்து கொண்டேன் என்று அந்த பேட்டியில் இந்து பேசியிருந்தார்.

இந்த பேட்டி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சில வதந்திகளும் பிரேம்ஜி மற்றும் இந்து பற்றி பரவி வந்தது. அதாவது இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய போகிறார்கள், இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் என்று youtube சேனலில் சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆனால் அந்த வதந்திகள் எல்லாம் பொய் என்று சொல்லும் வகையில் பிரேம்ஜி மற்றும் அவருடைய மனைவி இருவருமே இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். பிரேம்ஜியின் மாமியார் மசாலா கம்பெனி ஒன்று தொடங்கி இருக்கும் நிலையில் அந்த கம்பெனிக்கு பிரேம்ஜியின் மாமியார் மசாலா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
அதோடு அங்குள்ள மசாலா பொருட்கள் சிலவற்றிற்கு பிரேம்ஜி அடிக்கடி ப்ரோமோஷன் செய்து கொண்டிருக்கிறார். இதற்கு பிறகும் அவர் பற்றிய வதந்திக்கு மட்டும் குறைவு இல்லை. இந்த நிலையில் இன்று பிரேம்ஜியின் மனைவி இந்து பகிர்ந்த பதிவு இணையத்தில் அதிகமான வாழ்த்து பெற்று வருகிறது. அதாவது பிரேம்ஜியின் பிறந்தநாளை வீட்டில் எளிமையாக இருந்து கொண்டாடி இருக்கிறார்.

தன்னுடைய கணவருக்காக வித விதமாக கேக் ஆர்டர் செய்து அதை பரப்பி வைத்திருக்கிறார். அப்போது எடுத்த வீடியோவை இந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள். நீங்கள் இருவரும் நலமுடன் நீடூழி வாழ வேண்டும் என்பது பலருடைய வாழ்த்துக்களாக இருக்கிறது. நம்முடைய சார்பாக நாமும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம். வாழ்த்துக்கள் பிரேம்ஜி..!
காதல் திருமணம் செய்ததால் குடும்பத்தினரே ஒதுக்கிட்டாங்க.. அதிலும் அவங்க கூட.. பிரேம்ஜி மனைவி வேதனை
நடிகர் பிரேம்ஜியின் பிறந்தநாளை அவருடைய மனைவி கொண்டாடி இருக்கிறார் அப்போது எடுத்த வீடியோவை பிரம்ஜியின் மனைவி இந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications