காதல் திருமணம் செய்ததால் குடும்பத்தினரே ஒதுக்கிட்டாங்க.. அதிலும் அவங்க கூட.. பிரேம்ஜி மனைவி வேதனை
சென்னை: நடிகர் பிரேம்ஜியின் மனைவி பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தன்னுடைய திருமணத்தால் குடும்பத்தினர் பலர் தன்னுடன் பேசுவதில்லை என்று வேதனையோடு பகிர்ந்து இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டில் சில சினிமா பிரபலங்களின் திருமணங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் நடிகர் பிரேம்ஜியின் திருமணமும் ஒன்று. பிரேம்ஜி தான் சிங்கிள் என்று எல்லா மேடைகளிலும் சொல்லிக் கொண்டிருந்த நிலையில் 45 வயதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் காதல் திருமணம் செய்து கொண்டார்.

அவரைவிட அதிக அளவு வயது வித்தியாசத்தில் பிரேம்ஜி திருமணம் செய்து கொண்டதுதான் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனாலும் அவர் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பது பலருடைய வாழ்த்தாக இருக்கிறது. பிரேம்ஜியும் அவருடைய மனைவியும் இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகி இருவரும் பேசி பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் இவர்களுடைய வயது வித்தியாசம் தான் இப்ப வரைக்கும் பெரிய அளவில் பேசப்படுகிறது. காதலுக்கு வயதில்லை என்று இவர்கள் இருவரும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் முக்கிய குடும்பத்திலிருந்து பிரேம்ஜி வந்தவர். அதனாலேயே இவர் பலருக்கும் பரீட்ச்சயமானவர். நடிகராவதற்கு முன்பே பாடல் பாடுவதில் பெரிய அளவில் ஆர்வம் இருந்ததால் பாடி இருக்கிறார்.
அதிலும் அவருடைய அண்ணனும் இயக்குனருமான வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆரம்பத்தில் இருந்தே எல்லா படத்திலும் ஒரு வேடத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்குகிறார் என்றால் கண்டிப்பாக அந்த படத்தில் பிரேம்ஜி தலையை காட்டி விடுவார். சென்னை 28 படத்தில் தொடங்கி கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் வரைக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான படங்களில் பிரேம்ஜி என்டர்டைன்மெனட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
என்னதான் நடித்துக் கொண்டு இருந்தாலும் தொடர்ச்சியாக பாடல்கள் பாடுவதும் இசையமைப்பு வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார். அதிலும் பிரேம்ஜி நடிக்கும் திரைப்படங்கள் பலவற்றில் நண்பர்களோடு ஜாலியாக வலம் வரும் கேரக்டராக தான் தன்னை காட்டிக் கொள்வார்.

அதுபோலத்தான் நிஜ வாழ்க்கையிலும் ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் 45 ஆவது வயது கடந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுடைய திருமணம் பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடைபெறவில்லை எளிமையாக சில நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவியோடு அடிக்கடி பிரேம்ஜி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதிலும் வீட்டில் சமைப்பது, துணி துவைப்பது போன்றவற்றையும் வீடியோவாக வெளியிட்டு பலரை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதுபோல பிரேம்ஜி மனைவி இந்து மசாலா கம்பெனி பிசினஸ் தொடங்கி நடத்தி வருகிறார்.
அதற்கும் சில விமர்சனங்கள் இருந்தாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இந்த ஜோடி தங்களுடைய திருமண வாழ்க்கையிலும் பிசினஸையும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் தன்னுடைய திருமணத்தில் அவருடைய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி புகைப்படங்களை கூட எடிட் செய்து தான் இணைத்து இருக்கிறார்களாம்.
ஆனால் இந்துவின் தம்பி புகைப்படத்தை எடிட் செய்ய முடியாத அளவிற்கு அவர் திருமணத்திலேயே கலந்து கொள்ள வில்லையாம். இந்து மற்றும் பிரேம்ஜியின் திருமணம் காதல் திருமணம் என்பதால் பெண் வீட்டில் விருப்பமில்லாமல் தான் திருமணம் நடைபெற்றது என்று கூறப்படுகிறது. அதிலும் இந்துவின் தம்பி பிரேம்ஜியிடம் பேசக்கூட விரும்பவில்லையாம். பிரேம்ஜி சிலமுறை பேச முயற்சி செய்தும் தோல்வியுற்றதால் அவராக புரிந்து கொண்டு வரட்டும் என்று விலகி இருப்பதாகவும் இந்து அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications