ராதிகாவின் சீரியல் என்னை கிழவன் ஆக்கிவிட்டது! தொடர்ந்து அவமானம்! சொத்துக்களும் போச்சு, பப்லு உருக்கம்
சென்னை : தமிழ் சினிமாவில், வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் பப்லு என்ற பிரிதிவிராஜ் சினிமா மற்றும் சீரியலில் தனக்கு கிடைத்த அனுபவம் குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். அதில் நடிகை ராதிகா இயக்கி நடித்த வாணி ராணி சீரியலில் நடித்ததால் என்னை கிழவன் என்று எல்லோரும் சொல்லி விட்டார்கள் என்று வருத்தமாக பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு சிலரை பார்க்கும்போது மட்டும் இவர்களுக்கு வயதே ஆகாதா? என்ற சிந்தனை வருகிறது. அதுபோல ஒருவர் தான் நடிகர் பப்லு என்ற பிரித்திவிராஜ். இவர் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் நடித்திருக்கிறார்.

அடிக்கடி சர்ச்சை
அதிலும் வாணி ராணி, கண்ணான கண்ணே போன்ற சீரியல்கள் இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது. இப்போது தொடர்ந்து சினிமாவிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். கடந்த வருடத்தில் தன்னை விட வயதில் குறைந்த ஒரு பெண்ணை தான் காதலிப்பதாகவும் அவரோடு லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருவதாகவும் அறிவித்திருந்தார். அதற்கு பிறகு சில மாதங்களிலேயே இருவருக்கும் பிரேக்கப் ஏற்பட்டு அந்த பெண் இவரைப் பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து விட்டார்.
பப்லு பேட்டி
அதற்குப் பிறகு தன்னுடைய பர்சனல் விஷயங்களை இனி வெளிப்படையாக சோசியல் மீடியா பக்கங்களிலும் நான் பேச மாட்டேன் என்று பப்லு பேசியிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருக்கிறார். கடந்த வாரம் இந்த திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் பப்லு அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாணி ராணி சீரியல்
அதில் பப்லு பேசும்போது, நான் சினிமாவில் 40 வருடமாக இருக்கிறேன். எல்லாவிதமான போராட்டங்களையும், அவமானங்களையும் பார்த்துவிட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல் இது தேவை இல்லை என்று முடிவெடுத்தேன். அதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகி பணம், சொத்து, வீடு என எல்லாவற்றையும் நான் இழந்துவிட்டேன். பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போதுதான் என்னுடைய நண்பர் ஒருவர் மூலமாக வாணி ராணி சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதுதான் நான் செய்து மிகப் பெரிய தப்பு.
அப்பா கேரக்டர்
ஏனென்றால் நடிகை ராதிகா சினிமாவில் பல வருடங்களாக இருக்கிறார். அவரை தமிழ் சினிமாவில் அவ்வையார் என்றே சொல்லலாம். அவருக்கு ஜோடி என்றால் நானும் வயதானவனாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்து விட்டார்கள். அதனால் அந்த சீரியல் எனக்கு கிழவன் என்கிற ஒரு பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டது. அதற்குப் பிறகு நான் சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியலில் நடித்தேன். அந்த சீரியலிலும் அப்பா கேரக்டரில் தான் நடித்துக் கொண்டிருந்தேன்.
புது பட வாய்ப்பு
இதனால் பப்லு அப்பா கதாபாத்திரத்துக்கு தான் சரியானவர் என்கிற பெயர் வந்துவிட்டது. அதை தொடர்ந்து எனக்கு பத்தொன்பது படங்களில் அப்பாவாக நடிக்க அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் கோபமாகி நான் நடிக்க முடியாது என அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். அதற்கு பிறகு தான் எனக்கு ஏஸ் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க அழைத்தார்கள், கதை கேட்டதும் எனக்கு பிடித்திருந்ததால் ஓகே சொல்லிவிட்டேன் என்று பப்லு பேசி இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications