எங்க அப்பா இறந்து கிடந்த போது நடந்த அவலம்.. கைத்தட்டி சிரிச்சாங்க! நடிகர் பிரித்திவிராஜ் உருக்கம்
சென்னை: தமிழ், மலையாளம் என பலமொழிகளிலும் பிஸியான நடிகராகவும் இயக்குனராகவும் இருந்து வரும் பிரித்விராஜ் பேட்டி ஒன்றில் தன்னுடைய அப்பா இறந்தபோது நடந்த சம்பவம் குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார். தன்னுடைய அப்பா இறந்து கிடந்தபோது பிரபலம் ஒருவர் வந்ததால் ரசிகர்கள் செய்த மோசமான செயல் குறித்து தன் வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் பிரித்விராஜ் குடும்பத்தில் அனைவருமே திரை உலகை சார்ந்தவர்கள் தான். பிரித்திவிராஜ் மலையாளத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான நந்தனம் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் நடிகராக அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு 2006ம் ஆண்டு மலையாளத்தில் கிளாஸ் மெட்ஸ் என்ற படத்தில் அவருக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது.

ஹிட்டான திரைப்படங்கள்
அதற்குப் பிறகு இயக்குனர் கே வி ஆனந்த் பிரித்விராஜை தமிழுக்கு அழைத்து வந்தார். அதிலும் தமிழில் "கனா கண்டேன்" என்ற திரைப்படத்தில் இவர் வில்லனாக அறிமுகம் ஆகி இருந்தார். அதைத்தொடர்ந்து சத்தம் போடாதே, மொழி, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, ராவணன், காவிய தலைவன் என்று பல திரைப்படங்களிலும் அழுத்தமான கேரக்டரை தேர்வு செய்து நடித்து வந்தார்.
தமிழில் அறிமுகம்
தமிழில் மட்டுமல்லாமல் அதே நேரத்தில் மலையாளத்திலும் பிசியான நடிகராக நடித்துக் கொண்டிருந்தார். அதுபோல 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் என்ற திரைப்படத்தை இயக்கி யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இயக்குனராகவும் வெற்றி பெற்று இருந்தார். சாக்லேட் பாயாக மட்டுமல்லாமல் தன்னால் காமெடி கேரக்டரிலும் சிறப்பாக செய்ய முடியும் என்று ப்ரோ டாடி என்ற படத்தின் மூலம் நிரூபித்து இருந்தார்.
மிரள வைத்த திரைப்படம்
அதுபோல பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் திரைப்படம் பல விருதுகளை பெற்றது. அது மட்டுமில்லாமல் இவருடைய அம்மாவான நடிகை மல்லிகா சுகுமார் 50 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். கடந்த வருடத்தில் அவருக்கு திருவனந்தபுரத்தில் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு இருந்தது.
அம்மா பற்றி எமோஷனல்
அதில் தன்னுடைய அம்மா குறித்து பிரித்விராஜ் எமோஷனலாக பல விஷயங்களை பேசி இருந்தார். அதுபோல தன்னுடைய அப்பா குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் நானும் மற்ற குழந்தைகள் போல தான் மிகவும் சாதாரணமாக வளர்க்கப்பட்டேன். என்னுடைய குழந்தை பருவம் மிக மிக அழகாக இருந்தது.
பிடிக்காத விஷயம்
நான் இந்த இடத்தில் என்னுடைய பெற்றோருக்கு நன்றி கூற விரும்புகிறேன். என்னுடைய பெற்றோர் தங்களுக்கு கிடைத்த பிரபலத்தின் தாக்கத்தை எங்களை உணர வைக்கவில்லை. அதுபோல ஒரு பிரபலம் இறந்து போனால் அந்த பிரபலத்திற்கு மக்கள் அஞ்சலி செலுத்த அவரது உடலை பொது வெளியில் வைப்பார்கள். அது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது.
இறப்பில் நடந்த அசம்பாவிதம்
காரணம் அந்த பிரபலத்தின் குடும்பம் மிகப்பெரிய சோகத்தில் இருக்கும். அப்போது அங்கு வேறு ஏதாவது ஒரு பிரபலம் வந்தால் அவருடைய ரசிகர்கள் அவரைக் கொண்டாடும் விதமாக கைதட்டி சிரிப்பார்கள், கத்துவார்கள். அது போல சம்பவம் என்னுடைய அப்பாவின் இறப்பிலும் நடந்தது. எங்க அப்பா இறந்த பிறகு அவருடைய சடலத்தை அஞ்சலிக்காக வச்சிருந்தோம்.
ரசிகர்களின் மோசமான செயல்
அப்போது மோகன் லால் அங்கு வந்தார். அதை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அவரை கொண்டாடும் விதமாக கைதட்டி ஆர்ப்பரித்தார்கள். அப்போது எனக்கு வருத்தமாக இருந்தது. என்னுடைய அப்பா இங்கே இறந்து கிடக்கிறார். இந்த இடத்தில் இப்படி நடந்து கொள்கிறார்களே என்று எனக்கு தோன்றியது. உண்மையில் அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
வருத்தமான சம்பவம்
அதுபோல சின்ன வயசிலிருந்து எனக்கு பெருசாக அழ வராது. ஆனால் கேமரா முன்பு ஆக்சன் சொன்னால் என்னால் அழ முடியும். நிஜத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் அழுகை வராது என்னை போன்ற குணம் கொண்டவர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் எப்படிப்பட்ட மன அழுத்தத்தை கொடுத்திருக்கும் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள் என்று எமோஷனலாக பிரித்விராஜ் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications