சாப்பாட்டில் இருந்து துரத்தபட்ட அவலம்.. ஆர். சுந்தர்ராஜன் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களா?
சென்னை: நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் பல சினிமா படங்களை இயக்கி இருந்தாலும் இப்போது சின்னத்திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை கேரக்டரில் கதாநாயகனின் அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் தன்னுடைய சின்ன வயதில் சொந்த குடும்பத்திலேயே தான் பட்ட அவமானம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அது பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
பொதுவாக சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பலர் பல்வேறு நாடுகளுக்கு சென்று இப்போது படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த படிப்பும் படிக்காமலேயே இயக்குனர் மற்றும் நடிகராக ஆர் சுந்தர்ராஜன் பல திரைப்படங்களில் தன்னுடைய முத்திரையை பதித்திருக்கிறார். அதிலும் அவர் இயக்கிய பயணங்கள் முடிவதில்லை, அம்மன் கோவில் கிழக்காலே, ராஜாதி ராஜா, வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் அவருக்கு பிரபலத்தை கொடுத்தது.

ஆனால் தான் சினிமாவில் பட்ட அவமானங்களை விட தன்னுடைய சொந்த வீட்டில் தான் பட்ட அவமானம் பெரியது என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் படிப்பு, தொழில், கல்வி என்பது வேறு நாம இயற்கையா பார்த்து தெரிஞ்சுக்கிற விஷயங்கள் வேற.. எனக்கு அஞ்சு வயசு இருக்கும்போது என்னுடைய அண்ணனுக்கு ஆறு வயதாக இருந்தது. அப்போ ஒரு நாள் மதியம் 2 மணி இருக்கும் போது என்னுடைய அக்கா எங்களை சாப்பிட கூப்பிட்டாங்க.
நாங்க ரெண்டு பேரும் அக்கா வீட்டுக்கு பசியோட ஓடியே போனோம். அங்கே போய் பார்க்கும்போது இலை போட்டு வெச்சிருந்தாங்க. அந்த இலை பக்கத்தில் நாங்கள் உட்கார்ந்து விட்டோம். அப்போது அங்கு வந்தவர்கள் இரண்டு பேரும் எழுந்திருங்க என்று சொன்னாங்க. நீங்க ரெண்டு பேரும் அப்படி அந்தப் பக்கமாக போய் உட்காருங்க என்று சொன்னாங்க.
அவங்க காட்டிய திசையில் நாங்க பார்க்கும்போது அங்கு ரெண்டு பிளேட் இருந்தது... நாய்க்கு சாப்பாடு வைக்கிற மாதிரி இருந்தது. அவங்க எங்களை இலையை விட்டு எழுந்து போக சொன்னதற்கு காரணம் எங்க வீட்டிற்கு பெரிய அம்மா பசங்க எல்லாம் வசதியானவங்க வந்திருக்காங்க.. அவங்களுக்காக இந்த சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணி இருக்காங்க. அதே நேரத்தில்
எங்களுக்கு அனாதை பசங்களுக்கு கொடுக்கிற மாதிரி பிளேட் போட்டு வச்சிருந்தாங்க.
எங்களுக்கு அந்த நேரத்தில் என்ன தோணுச்சுன்னா இங்க உட்காருவதற்கு அந்த பக்கமா போய் உட்காருறோம்னு இருந்துட்டோம். இது சின்ன வயசுல நடந்து முடிஞ்சு. ஆனா கடைசில எங்க அண்ணன் அந்த வீட்டிலேயே பொண்ணு எடுக்க வேண்டிய சூழ்நிலை வருது.. எங்களுடைய அண்ணன் போய் அந்த வீட்டில் கல்யாணம் பண்ணிக்கிறாரு. நான் அந்த அத்தை வீட்டில காபி கடை வச்சிருக்காங்க அப்படி இருந்தும் நான் காபி கூட குடிக்க கூடாதுன்னு முடிவா கூட இருந்தேன்.

ஆனா எங்க அண்ணன் அக்கா வீட்டுக்கு சாப்பிட போய் அசிங்கப்பட்டோம். ஆனாலும் அண்ணே அந்த வீட்டிலேயே பொண்ணு எடுத்துட்டுவாரு. இப்போ அண்ணனுக்காக அந்த வீட்டுக்கு போக வேண்டிய சூழ்நிலை நாங்க ரெண்டு பேரும் தான் ஓடி வந்து அந்த இலையில் உட்கார்ந்தோம். ரெண்டு பேரையும் எழுந்திருக்க சொன்னாங்க எனக்கு உரைச்சது, என்னுடைய அண்ணனுக்கு உரைக்கல.
எனக்கு உள்ளாரா அவமானம் இருந்ததுனால நான் பீல் பண்ணினேன்... எங்க அண்ணன் இங்க உட்கார்ந்து சாப்பிடுவதை அங்க உக்காந்து சாப்பிடுறோம் இவ்வளவு தானே.. இதுல ஒன்னும் பெரிய விஷயம் இல்லன்னு சாதாரணமா எடுத்துக்கிட்டாரு. இப்படி சாதாரணமா எந்த பிரச்சனையும் எடுத்துக்குறவங்களும் உண்டு. அதே மாதிரி ப்ராக்டிகலா பார்த்து இதுக்குள்ளார ஒரு விஷயம் இருக்குன்னு தெரிஞ்சவன் டைரக்டர் ஆகிறான். சும்மா படிச்சதால மட்டும் யாராலும் டைரக்டர் ஆக முடியாது என்று ஆர் சுந்தர்ராஜன் பேசியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications