ராதிகா அதையெல்லாம் மறந்துட்டாங்க.. நிரோஷா மட்டும் ஞாபகம் வச்சிருக்காங்க.. ராதா ரவி ஓபன்
சென்னை: நடிகர் ராதாரவி சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தந்தை மற்றும் குடும்பத்தை பற்றி பேசிய பேட்டி இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் நடிகை ராதிகா மற்றும் நிரோஷா குறித்தும் ராதா ரவி பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் சினிமா துறையில் ஒரு சில நடிகர்கள் தங்களுடைய நடிப்பால் பல மக்களை வியப்படைய வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய நிஜ கேரக்டர் வேறுவிதமாக அமைந்திருக்கும். திரையில் காட்டுவதை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு அவர்களுடைய உண்மையான கேரக்டர் வெளியே தெரியும் போது தான் இவரா இப்படி என்று வியப்பு அடைகிறார்கள்.

அந்த மாதிரி தான் மறைந்த நடிகர் எம் ஆர் ராதா குறித்து அவருடைய சொந்த மகன் ராதா ரவி பேட்டி ஒன்றில் கலகலப்பாக சிரித்தபடியே பேசி இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. நடிகர் எம்.ஆர் ராதாவிற்கு அறிமுகமே தேவையில்லை. அந்த காலம் முதல் இந்த காலம் வரைக்கும் அவருடைய வசனங்கள் பலருக்கு பேவரைட் ஆகவும் இருந்து வருகிறது.
இன்றைய தலைமுறையினரான டூ கே கிட்ஸ்கள் கூட அவருடைய வசனங்களை கேட்டு இருப்பார்கள். ரீல்ஸ்களில் கூட அவருடைய நக்கல் கலந்த வசனங்கள் இடம் பிடித்திருக்கிறது. ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் அவர் பேசிய வசனங்கள் இப்போதும் பல மேடை நிகழ்ச்சிகளில் நடிக்கப்பட்டு வருகிறது. அவருடைய நடிப்புக்கு அவர்தான் நிகர் என்று சொல்லும் வகையில் அவருடைய இயல்பான நடிப்பு பலரையும் கவர்ந்தது.
அதிலும் எம் ஆர் ராதாவின் காமெடிகளில் சமூக அவலங்களை எடுத்து சொல்வதாக இருக்கும். அதை தொடர்ந்து தான் விவேக் அதே பாணியை தன்னுடைய ஸ்டைலில் வெளிகாட்டி இருந்தார். நடிப்பில் இவர் நடிகர்வேளாக இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் பல திருமணங்கள் செய்து அது பற்றி கேட்கும் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார். இது குறித்து எம் ஆர் ராதாவின் மகன் ராதாரவி சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் என்னுடைய அப்பாவுக்கு நிறைய மனைவிகள் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் ஒரு நான்கு பேருக்கு மட்டும்தான் அவர் அடையாளம் கொடுத்திருக்கிறார். அவரோடு பழகும் பலருக்கு அவர் சொந்தமாக வீடு வாங்கி கொடுத்து அட்ரஸ் கொடுத்து விடுவார், ஆனால் மனைவி, துணைவி என்று நான்கு பேருக்கு அடையாளம் கொடுத்திருக்கிறார். அதுதான் விக்கிபீடியாவில் கூட இருக்கிறது.
அதுபோல எங்க அப்பாவுடைய மனைவிகள் குழந்தைகள் எல்லாருமே தேனாம்பேட்டையில் தான் அவர் வீடு எடுத்துக் கொடுத்து இருக்கிறார். இதே தேனாம்பேட்டையில் தான் ஆரம்பத்தில் ராதிகாவும் இருந்திருக்கிறார். ஆனால் அதை ராதிகா மறந்து விட்டார் போல, ஆனால் நிரோஷா அதை ஞாபகம் வைத்து இருக்கிறார்.
நிரோஷாவிற்கு சின்ன வயதில் காலெல்லாம் புண் இருக்கும். அப்போது எங்க அம்மா தான் நிரோஷாவை தூக்கிட்டு போய் கடல் தண்ணீரில் நிற்க வைப்பாங்க. அந்த கடல் தண்ணி படும் போது புண் எல்லாம் ஆறும் என்று எங்க அம்மா தான் அப்படி அவங்கள பாத்துக்கிட்டாங்க. அதுபோல எங்க அப்பாவுக்கு பெண் குழந்தைகள் தான் ரொம்ப பிடிக்கும்.
என்னை எல்லாம் அவர் கொஞ்சி தூக்கி விளையாடியது கிடையாது. படத்தில் தான் அவர் தூக்கி கொஞ்சுவதை நான் பார்த்திருக்கிறேன். சினிமாவில் இருக்கிற மாதிரி அவர் நிஜத்தில் கிடையாது. பொதுவா எல்லா அப்பாக்களுக்கும் தன்னுடைய பெண் குழந்தைகள்தான் ரொம்ப பிடிக்கும் அதுபோல என்னுடைய அப்பாக்கும் பெண் குழந்தைகள் பிடிக்கும். என்னுடைய சொந்த தங்கச்சி ரதிகலாவை என்னுடைய அப்பா கொஞ்சி விளையாடுவார். அதை நானே என் கண்ணால் பார்த்திருக்கிறேன் என்று அந்த பேட்டியில் ராதாரவி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications