கதாநாயகி வராததால் தான் ஓவர்நைட்டில் திரிஷா ஹீரோயின் ஆனாங்க.. அப்போ நடந்தது இதுதான்! ராதாரவி ஓபன்
சென்னை: நடிகர் ராதாரவி பேட்டி ஒன்றில் பேசும்போது நடிகை திரிஷா வேற ஒரு கதாநாயகி வராததால் தான் ஹீரோயினாக மாறினார் என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகை திரிஷா 90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இப்போதும் கதாநாயகியாக கலக்கி கொண்டிருக்கிறார். அதிலும் இவருக்கு 41 வயது ஆனாலும் இன்னும் அப்படியே இருக்கிறாறே என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஜோடி திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் அறிமுகமான திரிஷா அதற்குப் பிறகு மௌனம் பேசியதே, மனசெல்லாம், சாமி, லேசா லேசா, அலை, உனக்கு 20 எனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து திருப்பாச்சி என்று பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அழகான ராட்சசி
தற்போது கூட நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து வந்த திரிஷா கொடி திரைப்படத்திற்கு பிறகு வில்லி அவதாரமும் எடுத்திருக்கிறார். ஆனாலும் அழகான ராட்சசி என்று ரசிகர்கள் இவரை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை பொண்ணு
சென்னையை சேர்ந்த திரிஷா ஸ்கூல் படிக்கும்போதே நாடக போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய அப்பா சென்னையில் ஆரம்பத்தில் பெரிய ஸ்டார் ஹோட்டலில் அக்கவுண்ட்ன்ட்டாக வேலை பார்த்திருக்கிறார். அதே நேரத்தில் திரிஷாவின் நடிப்பை பார்த்த அவருடைய அம்மா அவரை படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து இருக்கிறார்.
திரிஷா என்ற அணுராதிகா
திரிஷாவின் இயற்பெயர் அணு ராதிகா என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அதுபோல சினிமாவில் இவர் அறிமுகமாவதற்கு முன்பு 1999 ஆம் ஆண்டு சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் திரிஷா பற்றி நடிகர் ராதாரவி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், நடிகைகளின் வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்று சொல்லவே முடியாது.

திடீர் வாய்ப்பு
சில நடிகைகளுக்கு வாய்ப்பு எதிர்ப்பாராத விதத்தில் தான் கிடைக்கும். அது அவர்களுடைய மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும். அதுபோல்தான் திரிஷாவிற்கு கிடைத்தது. திரிஷா ஒரு படத்தில் சின்ன கேரக்டரில் தான் நடிக்க கலந்து கொண்டார். ஆனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்த நடிகை சூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்திற்கு வரவில்லை.

திரிஷா பற்றி ராதாரவி
அதனால் இயக்குனர் வந்திருந்த நடிகைகளில் திரிஷா நன்றாக இருக்கிறார் என்று தான் அவரை நடிக்க செலக்ட் செய்து இருந்தார். பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்களே ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது என்று, அது போல தான் திரிஷா வாழ்க்கை மாறியது. இன்று திரிஷா தன்னுடைய திறமையால் எத்தனையோ ஹிட் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் எதிர்பாராத விதத்தில் தான் சினிமாவில் கதாநாயகி ஆனார் என்று அந்த பேட்டியில் ராதாரவி பேசி இருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications