Radharavi: விஜய் அரசியலில் ஜெயித்தால் மாஸாக இருக்கும்.. நடிகர் ராதாரவி பேச்சு.. ஆனால் அப்போ அப்படி சொன்னாரே?
சென்னை: நடிகர் விஜய் அரசியலில் அடி எடுத்து வைத்த பிறகு அவரைப் பற்றி பல விமர்சனங்களும், சர்ச்சைகளும் பரவி வருகிறது. அவருடன் பணியாற்றிய ஒரு சில நடிகர்கள் அவருடைய அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகிறார்கள். ஒரு சிலர் விஜயை பற்றி விமர்சித்து வருவதையும் பார்க்க முடிகிறது. இந்த சூழலில் ராதாரவி விஜய் பற்றி பேசியது பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
2026 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் தன்னுடைய பலத்தை நிரூபிப்பதற்காக விஜய் தொடர்ந்து கட்சி கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவருடைய மாநாட்டில் 41 பேர் இறந்து போன சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதில் விஜய் மீது தவறு என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்னும் ஒரு சிலரும் அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களும் கூட விஜய்க்கு ஆதரவாகவே பேசி வருகிறார்கள்.

இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்க விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்த பிறகு பல விவாதங்களும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நடிகர் ராதாரவி விஜய் பற்றி பேசும் போது, ஒருவேளை விஜய் ஜெயித்து விட்டால் அது மாஸாக இருக்கும். ஏனென்றால் மக்கள் செல்வாக்கு அதிகமாக விஜய்க்கு இருக்கு. நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
கடந்த பல வருடங்களாக விஜய் உடைய படங்கள் மக்கள் மனதில் அதிக செல்வாக்கினை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில் அவரது அரசியல் வருகைக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன் என்று ராதாரவி தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். இதை விஜய் உடைய ரசிகர்கள் பாராட்டி ஷேர் செய்து வருகிறார்கள்.
இதே ராதாரவி சில வருடங்களுக்கு முன்பு, சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் இருக்கும்போது தன்னுடைய பேரன் விஜயை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் அவர் கேரவனில் இருக்கும் விஜயை சந்திக்க போனபோது விஜய் தன்னை உள்ளே விடாமல் மேனேஜரிடம் சொல்லி வெளியே அனுப்பிவிட்டார், பிறகு அனைவரும் முன்பும் வந்து இந்த கூட்டத்தை எல்லாம் எதுக்காக இங்க கூட்டிட்டு வந்தீங்கன்னு பேசிட்டாரு இன்று வருத்தம் தெரிவித்து இருந்தார்.
அதோடு, விஜய்க்கு எத்தனையோ ரசிகர்கள் இருக்கலாம் ஆனால் என்னுடைய குடும்பத்தினரை திட்டியதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு பிறகு நான் விஜய்யுடன் பேசுவது இல்லை என்று பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications