தம்பி என்னை மன்னிச்சிடு! உதவி கேட்ட மாணவன் வீடியோவை பகிர்ந்து ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் பலருக்கு உதவி செய்துவரும் நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு மாணவன் தன்னுடைய அப்பா இறந்து போய்விட்டார் என்று தன்னுடைய படிப்பு செலவுக்காக உதவி செய்யும் படி வீடியோ வெளியிட்டு இருக்கும் வெளியில் அந்த வீடியோவை ஷேர் செய்த லாரன்ஸ் அந்த மாணவனிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். அது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இப்போது பலரையும் வியந்து பார்க்க வைத்திருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக பலருக்கும் உதவிகளை செய்து கொண்டே இருக்கிறார். நடன கலைஞராகவும், இயக்குனர், நடிகர் என்று பல முகங்களை கொண்ட ராகவா லாரன்ஸ் பலருக்கும் உதவிகளை செய்து மக்கள் பலர் மனித கடவுள் என்று அவரை அழைத்து வருகிறார்கள்.

பல குழந்தைகளின் படிப்பு செலவுகள், முதியோர்களுக்கு தேவையான அடிப்படை செலவுகள் என்று செய்து வந்த லாரன்ஸ் இப்போது விவசாயிகளுக்கு 10 டிராக்டர் இலவசமாக வழங்கி பெரும் புரட்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
அந்த வீடியோவில் ஒரு மாணவன் தன்னுடைய அப்பா கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதனால் நீங்கள் பலரை படிக்க வைப்பது போன்று என்னையும் படிக்க வைத்தால் என்னுடைய தம்பிகளை நான் படிக்க வைத்து விடுவேன். அது மட்டும் இல்லாமல் நானும் எதிர்காலத்தில் கலெக்டராக ஆசைப்படுகிறேன். என்னுடைய கனவு நிறைவேறியதும் உங்களைப் போலவே எதிர்காலத்தில் பலருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
அதனால் லாரன்ஸ் அங்கிள் இந்த வீடியோவை பார்த்து எனக்காக உதவி செய்யுங்க என்று கூறியிருக்கிறார். அந்த வீடியோவை ஷேர் செய்த லாரன்ஸ் அந்த மாணவனிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். உன்னுடைய அப்பா இறந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதே நேரத்தில் நீ எந்த ஊரில் எங்கு இருக்கிறார் என்ற தகவல் எனக்கு தெரியப்படுத்து என்று அதில் வேண்டுகோள் வைத்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதுபோல ராகவா லாரன்ஸ் 10 கிராம மக்களுக்கு பத்து டிராக்டர் வழங்க இருக்கும் நிலையில் அவர் வெளியே செல்லும்போது செஃப் வினோத் என்பவர் லாரன்ஸ் மற்றும் அவரோடு போகிற அனைவருக்கும் உணவு சமைத்துக் கொடுத்து வருகிறாரார். இந்த நிலையில் அவருக்கும் லாரன்ஸ் நன்றி தெரிவித்திருக்கிறார். அதையும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications