அடக்கொடுமையே.. பங்களா போன்ற வீட்டில் வாழ்ந்த நடிகர் ரகுவரனின் குடும்பம்..இப்போ இப்படி ஒரு நிலைமையிலா
சென்னை: தமிழ் சினிமாவில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகர் ரகுவரன் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்து அதைத்தொடர்ந்து திடீரென்று உடல்நிலை குறைவு காரணமாக மரணம் அடைந்திருந்தார்.
ரகுவரனின் மரணத்திற்கு பிறகு அவருடைய குடும்பம் பெரிய அளவில் சறுக்கல்களை சந்தித்து இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் பங்களா போன்ற வீட்டில் இருந்த நடிகர் ரகுவரனின் குடும்பம் இப்போது பரிதாப நிலைமையில் இருக்கின்றனர். அது குறித்து பல வருடங்கள் கழித்து நடிகர் ரகுவரன் அம்மா மற்றும் சகோதரர் பேட்டியில் பேசியிருக்கின்றனர்.
தமிழ் திரையுலகில் ஒரு ஒப்பற்ற நாயகனாக வலம் வந்தவர் தான் நடிகர் ரகுவரன். இவர் சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ஆரம்பத்தில் பிரபலமடைந்து பிறகு வில்லனாக அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதுவும் விஜய், அஜித், சூர்யா, ரஜினிகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களோடு மாஸ் காட்டி இருக்கிறார்.
நடிகர் ரகுவரனின் திரைப்படங்களில் பல கேரக்டர்கள் இப்போதும் மிரட்டலாக இருக்கும். அதிலும் பாட்ஷா, முதல்வன் போன்ற கேரக்டரில் நடிகர் ரகுவரனின் நடிப்பு அபரிமிதமாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் கடைசியாக அவர் நடித்த யாரடி நீ மோகினி திரைப்படம் அவருடைய இன்னொரு முகத்தை பிரதிபலித்தது.
வில்லன், குணச்சித்திர வேடம் என்று நடித்து வந்த ரகுவரன் கூட்டுப் புழுக்கள், கைநாட்டு, மைக்கேல் ராஜ் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதுவும் மைக்கேல்ராஜ் படம் பெரிய அளவில் வெற்றியை தந்தது. அதோடு அந்த திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிகை இருந்தது ரஜினி தானாம். பிறகு அவரால் நடிக்க முடியாமல் போகவே ரகுவரன் அந்த கேரக்டரை ஏற்று நடித்து வெற்றி படமாகவும் ஆக்கி இருந்தார்.
இப்படி பல திரைப்படங்களில் நடித்து அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் நடிகர் ரகுவரனின் சொந்த வாழ்க்கை பெரிய அளவில் மகிழ்ச்சி ஆக இல்லாமல் தான் இருந்திருக்கிறது. தன்னுடைய அம்மா சகோதரர்கள் மீது அதிகமான பாசத்தில் இருந்த ரகுவரன் நடிகை ரோகினியை காதலித்து திருமணம் செய்திருந்தார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் ரகுவரன் குடியாலையே தன்னுடைய வாழ்க்கையை கெடுத்துக் கொண்டார்.
குடிப்பழக்கத்திற்கு தீவிரமாக அடிமையாக மாறிவிட்டார். ஆனால் இடை இடையே குடியை விட வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்து ரகுவரனால் குடியை விட முடியாமல் தவித்திருக்கிறார். ஆனால் கடைசி காலகட்டத்தில் எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டு விட்டு தான் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. பிறகு அதில் நடித்து முடித்து இருந்தார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அந்த திரைப்படத்தைப் போலவே அவருடைய இறப்பும் திடீரென்று வந்துவிட்டது.
ஆனால் நடிகர் ரகுவரன் உயிரோடு இருக்கும் வரைக்கும் அவருடைய அம்மா, சகோதரர்கள் எல்லாம் கூட்டு குடும்பமாக பெரிய பங்களா போன்ற வீட்டில் தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அந்த வீட்டு ரகுவரனின் அம்மாவின் அப்பா அதாவது ரகுவரனின் தாத்தா வீடாம். மிகவும் பெரியதாக இருக்குமாம். ரகுவரனின் தாத்தா ஸ்கூல் தலைமை ஆசிரியராக இருந்திருக்கிறார். ரகுவரனுக்கு அவர் தான் பெயர் கூட வைத்தாராம்.

ரகுவரன் தான் சம்பாதிக்கும் பணத்தில் அதிகமாக கை, கால், கண் இல்லாதவர்களுக்கு சிகிச்சைக்காக கொடுத்து விடுவாராம். அவர் பலருக்கு உதவி செய்திருந்தாலும் அந்த விஷயம் வெளியே தெரியாமல் தான் பார்த்துக் கொள்வாராம். அவருக்கு பப்ளிசிட்டி கொஞ்சம் கூட பிடிக்காதாம். அதனாலேயே கூட இன்டர்வியூக்கலில் அதிகமாக கலந்து கொள்வதும் கிடையாதாம். இந்த நிலையில் ரகுவரனின் இறப்புக்கு பிறகு அவருடைய குடும்பம் பெரிய அளவில் பின்தங்கி இருக்கிறது.
இப்போது ரகுவரன் உடைய அம்மா சாதாரணமாக சின்ன வீட்டில் தான் வசித்து வருகிறாராம். ஆனாலும் வெளியே போகும்போதெல்லாம் பலரும் ரகுவரனை பற்றி பெருமையாக பேசும் போது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். ரகுவரனால் உதவி பெற்றவர்கள் பலரும் இப்போதும் கண்கலங்கியபடி ரகுவரனை பற்றி அவருடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.
எனக்கு இந்த ஒரு சந்தோஷத்தை என்னுடைய மகன் தந்து விட்டு போயிருக்கிறான். ஆனால் அவருடைய இழப்பை என்னால் எப்போதும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஈடு செய்யவும் முடியாது. அந்த கடவுள் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அவனுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்திருக்கலாம். கடைசி காலத்தில் தான் அவன் எல்லா பழக்க வழக்கங்களையும் விட்டு விட்டு புது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான். அது அந்த கடவுளுக்கு பிடிக்கவில்லை என்று வருத்தத்தோடு ரகுவரனின் அம்மா பேசி இருக்கிறார்.
-
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
எந்த மனைவிக்கும் இப்படிப்பட்ட அவமானம் வரக்கூடாது.. ரவி மோகன் மனைவி ஆர்த்தி உருக்கம்.. விஜயுடன் ஒப்பீடு? -
“ஏ.ஆர். ரஹ்மானுக்கே இந்த நிலைமை என்றால், எனக்கு..? ‘கருப்பு’ படத்தில் நடந்த அதிர்ச்சி அனுபவம்! நடிகை ஆனந்தி ஓபன்! -
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications