Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விதைத்த விதையும் கொடுத்த அன்பும் வீணாகாது... ராஜ்கிரணுக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ராஜ்கிரண் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் அவரைப் பற்றிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ராஜ்கிரனின் மகள் சீரியல் நடிகரான முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அது அவருடைய சொந்த மகள் இல்லை வளர்ப்பு மகள் என்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

தனக்கு ஒரே ஒரு ஆண் குழந்தை மட்டுமே இருக்கும் நிலையில் தான் இந்து பெண்ணான பிரியா என்ற பெண்ணை வளர்த்து வந்தேன் அவர்தான் சீரியல் நடிகரை திருமணம் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

சமூக வலைதள பதிவு

சமூக வலைதள பதிவு

நடிகர் ராஜ் கிரண் அவருடைய மகள் சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்திக்கு விளக்கம் கொடுத்து சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். அதில்,என் "மகளை", ஒரு சீரியல் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. என் மீது அபிமானம் கொண்டுள்ள அனைவருக்கும், உண்மையை விளக்க வேண்டியது என் கடமை. எனக்கு திப்பு சுல்தான் @நைனார் முஹம்மது என்றஒரே ஒரு மகனைத் தவிர,வேறு பிள்ளைகள் கிடையாது. இந்து மதத்தைச்சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா.அவர் மனம் சந்தோசப்படுவதற்காக,அவரை "வளர்ப்பு மகள்" என்றுநான் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சொந்த மகள் என்றேசொல்லி வந்தேன்.

முகநூல் நட்பு

முகநூல் நட்பு

முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்ட சீரியல் நடிகர்,என்னென்ன முறையிலோ அந்தப்பெண்ணை, தன் வசப்படுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த விசயம் என் காதுக்கு வந்ததும்,அந்த நடிகரைப்பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில், அவர் மகா மட்டரகமான புத்தியும், பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமும் கொண்டவர் என்பது, எனக்குத்தெரிய வந்தது. அவரது நோக்கம் பெண்ணை வைத்துவாழ்வதில்லை. எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி, சினிமாதுறையில் வாய்ப்புகளை பெறுவதும்,என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே, அவரது குறிக்கோள்.இதையெல்லாம் பலவிதமாக விசாரித்து தெரிந்து கொண்ட நான்,என் வளர்ப்பு பெண்ணிடம் சொன்னேன்.அவர் காதில், நான் சொன்னது எதுவும் ஏறவில்லை. அவரைத் தான் கட்டிக்கொள்வேன் என்றும், உங்கள் பெண் என்று நானோ, அவரோ வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டோம் என்றும், அந்தப்பெண் சொல்லியிருந்தார்.

அப்பாவின் வேதனை

அப்பாவின் வேதனை

அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி இந்தக்கல்யாணம் வேண்டாம் என்று என் மனைவி, அந்தப்பெண்ணிடம் அழுது மன்றாடி, எப்படியெப்படியோவெல்லாம் மடிப்பிச்சை கேட்டு, ஒரு வழியாக, " சரி, இவர் வேண்டாம், உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள்" என்று சொல்ல, நாங்களும் மாப்பிள்ளை பார்த்துககொண்டிருந்தோம்.இந்த சூழ்நிலையில் தான்,என் மனைவியின் தோழியான,"லட்சுமி பார்வதியை" பார்த்து விட்டு வருவதாக எங்களிடம் சொல்லிவிட்டு, இந்தப்பெண் ஆந்திரா போய் நான்கு மாதங்களாகி விட்டன, இன்னும் எங்கள் வீட்டுக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் தான்,இப்படி ஒரு செய்தி வலம் வந்துகொண்டிருக்கிறது. தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, என் மனைவி தான் இதற்கெல்லாம் காரணம் என்பது போல், பொய் பொய்யாக பேசிக்கொண்டு திரிகிறது, இந்தப்பெண். இந்த விசயத்தில் நான்கோபப்பட்டபோது கூட, என்னைசமாதானப்படுத்தி, அந்தப்பெண்ணுக்காக பரிந்து பேசிஇன்று வரை அந்தப்பெண்ணுக்கு உறுதுணையாக நிற்பது,என் மனைவி மட்டும் தான்.

 தாயின் தவிப்பு

தாயின் தவிப்பு

பெண்பிள்ளையை வளர்க்கும் ஒவ்வொரு தாயும், தன் பிள்ளையை நல்லபடியாக வாழவைக்க வேண்டுமே என்ற அக்கறையில், எப்படியெல்லாம் கண்காணிப்பாளோ, அப்படி ஒரு தாய் நடந்து கொள்வது, வாழ்க்கை அனுபவமில்லாத சிறு பிள்ளைகளுக்கு தவறாக தோன்றுகிறது... என் வளர்ப்புப்பெண், ஒரு தரமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான், சந்தோசமாக கட்டிக்கொடுத்திருப்பேன். ஆனால், தரங்கெட்ட, பணத்துக்காக எதையும் செய்யத்துணியும் ஒருவனை தேர்ந்தெடுத்து, தன் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டாளே என்பது மட்டுமே என் வருத்தம்...இதன் மூலம் நான் எல்லோரிடமும் சொல்லிக்கொள்வது, என்னவென்றால், என் பெயரைப்பயன்படுத்தி இவர்கள் உங்களைஎந்த வகையிலாவது அணுகினால், அதனால் ஏற்படும் எந்தப்பிரச்சினைக்கும்நான் பொறுப்பல்ல, என்பது தான்.

 நான் பொறுப்பல்ல

நான் பொறுப்பல்ல

இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காகப்பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.அந்த சீரியல் நடிகர்,தன் குள்ளநரித்தனங்களால், என் வளர்ப்புப்பெண்ணிற்கு கணவனாகிக்கொள்ளக்கூடும்.ஆனால், எந்தக்காலத்திலும்எனக்கு மருமகனாக முடியாது. இன்றிலிருந்து, இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.நேர்மையும், சத்தியமுமே என்றும் வெல்லும்.

மனம் அமைதி அடையட்டும்

மனம் அமைதி அடையட்டும்

ராஜ்கிரணின் இந்த உருக்கமான பதிவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அதில் பல கருத்துகளுக்கு ராஜ்கிரண் பதிலளித்துக் கொண்டிருக்கிறார். பல ரசிகர்கள் தன்னுடைய வளர்ப்பு மகளையும் இந்த அளவிற்கு பாசமாக வளர்த்த ராஜ்கிரண் இந்த மாதிரி ஒரு செயலால் மனம் வருந்தாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று வேண்டி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் சொந்த பிள்ளைகள் விஷயத்தில் பொறுமை இழந்த பெற்றோர்களை பார்த்திருக்கிறேன் ஆனால் வளர்ப்பு மகளுக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அப்பெண்ணின் நல்வாழ்வுக்காக பொறுமை காத்த தந்தையை இப்போதுதான் பார்க்கிறேன் என்று பெருமையாகவும் கூறி வருகிறார்கள்.

ரசிகர்களின் ஆறுதல்

ரசிகர்களின் ஆறுதல்

ராஜ்கிரணின் தீவிரமான ரசிகர் ஒருவர், "தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் அந்த தீபாவளி பண்டிகை காட்சியில் என் தகப்பனை கண் முன்னே வரவழைத்தீர்கள். வருட கணக்கில் அவரோடு பேசாமல் இருந்ததை எண்ணி வருந்தி அவரோடு பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்த சில நாட்களில் என் தந்தை ஒரு சாலை விபத்தில் மறைந்தார். அந்த வலி என் மனதில் இன்று வரையிலும் வடுவாகவே உள்ளது. ஜெயா டிவியில் அந்த படம் எப்போது திரையிட்டாலும் பார்ப்பது என் வழக்கம். இன்று வளர்ப்பு மகளை தன் மகளாகவே பாவித்து இந்த அளவிற்கு உங்களது வேதனையை வெளிப்படுத்தியதைக் கண்டு வருத்தமாக உள்ளது. உங்களின் சிந்தனை நேர்மையாக இருக்கும்போது யாரைப் பற்றியும் எப்போதும் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. இறைவன் அருளட்டும் என்று அவருக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+