சென்னை: தன்னுடைய மனைவி இறந்தது ராஜேஷூக்கு ஏற்பட்ட முதல் சறுக்கலாக இருந்தது.. நாங்கள் எப்போது அவரை சந்திக்க சென்றாலும், நீண்ட நேரமாகவே பேசுவார்.. தன்னுடைய தனிமையை தன்னை சந்திக்க வருபவர்களிடம், ஆற்றாமையாக கொட்டுகிறார் என்பது அப்போதுதான் புரிந்தது. "மனைவியின் இறப்புக்கு பிறகுதான் முதுமை என்றால் என்னவென்றே எனக்கு தெரிய ஆரம்பித்தது" என்று எங்களிடமே பலமுறை சொன்னார்" என்று பிரபல எழுத்தாளர் இன்பா கூறியிருக்கிறார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள எழுத்தாளர் இன்பா, "அறிவுசார்ந்த மனிதர்.. எதைப்பற்றியும் அவரிடம் பேசலாம்.. நேரத்தை மதிப்பவர்.. ஒரு குறிப்பிட்ட நேரத்தை சொன்னால், சரியாக அந்த நேரத்திற்குள் வந்துவிடுவார்.. மற்றவர்களும் அதுபோலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்..உடல், உணவு இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படியிருந்தால்தான் ஆயுசுக்கான களத்தை கூட்ட முடியும் என்பதில் மிகத்தெளிவாக இருந்தார்..
மனைவியின் இழப்புமனைவி இறந்தது அவருக்கு ஏற்பட்ட முதல் சறுக்கலாக இருந்தது.. நாங்கள் எப்போது அவரை சந்திக்க சென்றாலும், நீண்ட நேரமாகவே பேசுவார்.. தன்னுடைய தனிமையை தன்னை சந்திக்க வருபவர்களிடம், ஆற்றாமையாக கொட்டுகிறார் என்பது அப்போதுதான் புரிந்தது. "மனைவியின் இறப்புக்கு பிறகுதான் முதுமை என்றால் என்னவென்றே எனக்கு தெரிய ஆரம்பித்தது" என்று எங்களிடமே பலமுறை சொல்லி உள்ளார்..
கணித்த ஜோதிடம்
அதேபோல, சிவாஜி அண்ணன் 74 வயதில் இறந்துவிட்டார்.. எனக்கு 79 வயதுக்கு மேல்தான் மரணம் என்று ஜாதகத்தில் கணித்து வைத்திருக்கிறேன்" என்று எங்களிடம் சொன்னார்.. அது இப்போது பொய்யாகிவிட்டது..
இயற்கையின் கணிப்பு
வேறு மாதிரியாக இருந்தது..கடந்த 2014ம் ஆண்டு, எங்களுடன் பேசும்போது, "என்னுடைய இறப்புக்கு முன்பேயே கல்லறையை ரெடி பண்ணிட்டேன். நான் இறந்ததும் அங்கே கொண்டு போய் என்னை வைத்துவிடுங்கள்.. மரணத்தை மையப்படுத்தி எனக்கு எந்தவிதமான பயமும் இருப்பதில்லை" என்று சொல்லி அப்போதே எங்களை எல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்..
நுரையீரல் தொற்று பாதிப்பு
இப்போது அவருக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் தாக்கம் இருந்திருக்குமோ? என்ற சந்தேகம் வருகிறது.. காரணம், கடந்த மாதம் வெளிநாட்டில் ஒரு மாதம் தங்கியிருந்துள்ளார். அந்த கிளைமேட்டால் கூட அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.. அதற்கு முன்பே ராஜேஷூக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது..
எப்போதுமே கார்டியாக் சர்ஜஜரி சம்பந்தப்பட்டவர்களுக்கு நுரையீரல் சின்ன தொற்று இருந்தாலும், அது தொந்தரவாகிவிடும்.. மூச்சுத்திணறலை உடனே தந்துவிடும்.. மூச்சடைப்பு ஏற்பட்டதால், இதயநோய் வரவும் வாய்ப்புள்ளது.. அதனால் மாரடைப்பு என்று சொன்னார்களா என்று தெரியவில்லை..
உடலில் தென்பட்ட மாற்றம்
"நான்கைந்து நாட்களாகவே எனக்கு உடலில் மாற்றம் தெரிகிறது.. அது என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை" என்று தன்னுடன் வாக்கிங் வருபவர்களிடம் சொன்னாராம். இதெல்லாம்தான் அவரது மரணத்துக்கு காரணமாக இருக்கும்..
எல்லாருக்குமே ஜாதகம் கணித்தார்.. சிவாஜி ஐயாவின் உடம்பு, குலம் கோத்திரம், எம்ஜிஆர் ஐயாவின் உடல்நிலை, குடும்பம், அரசியல், வாரிசு, என அனைத்தையுமே சரியாக கணித்து சொன்னார்.. அப்படியெல்லாம் சொன்னவர், தன்னுடைய வாழ்வின் கடைசி நிலைமையை சரியாக சொல்லவில்லையா? என்றே தோன்றுகிறது..
4 நாள் முன்னாடியே அவர் உடலில் சில சமிக்ஞைகள் தெரிந்தும், அதை அவர் அலர்ட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.
அவரை பொறுத்தவரை, தனக்கு உடல்நிலை அனைத்திலும் சரியாகவே இருப்பதாகவும், மரணத்தை கணித்து வைத்திருக்கும் நாள் வரை நிச்சயம் உயிருடன் இருப்போம் என்றும் நம்பியிருக்கிறார்.. கடந்த மாதம் வெளிநாட்டுக்கு போய்வந்ததுமே அவர் அலர்ட் ஆகியிருக்கலாம்..
கணிப்புகள் பொய்
நம்ம வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று நாமே பலவாறு நினைத்து கொள்கிறோம். ஆனால், இயற்கை கணக்கு வேறுமாதிரியாக இருக்கும் என்பதையும் நினைக்க வேண்டும்.. தமிழ் திரையுலகத்திற்கும், அவரை சார்ந்த எங்களை போன்றோருக்கும் பெரிய இழப்பு..
அவருக்கு ஒரு வருத்தம் இருந்தது.. கடைசி கட்டங்களில் ராஜேஷை திரையுலகம் சரியாக பயன்படுத்தவில்லை.. தர்மதுரை படத்தில் தனக்கு கிடைத்த கேரக்டர் பற்றி பெருமையாக சொல்லி கொண்டேயிருந்தார்.. அதற்கு பிறகு அப்படியான கேரக்டர்கள் வரவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது.. மகனின் திருமணத்திலும் அவரால் கலந்துக்க முடியாமல் போய்விட்டது..
அவரது ஆன்மா சாந்தியடையணும்.. மறுஜென்மத்திலும் தமிழனாக பிறந்து, மக்களை மகிழ்விக்கக்கூடிய கலைஞனாக அவர் உருவாக வேண்டும் என்பதே எங்களை போன்றோரின் ஆசை" என்று தெரிவித்துள்ளார்.
Inba shares reflections on a principled intellectual from Tamil cinema, highlighting his punctuality, predictions, and acceptance of mortality. His journey reveals profound insights into life, loss, and the unpredictability of fate.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.