Exclusive: நடிகர் ராஜேஷ் மகனுக்கு அடுத்த வாரம் எங்கேஜ்மென்ட்.. கடைசியாக சொன்ன “அந்த” வார்த்தை.. கதறி அழுத வடிவுக்கரசி
சென்னை: நடிகர் ராஜேஷ் இன்று உடல்நிலை குறைபாட்டால் காலமாகி இருக்கிறார். அவருடைய மறைவு குறித்து ரசிகர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ராஜேஷுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த நடிகை வடிவுக்கரசி ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்தியேகமாக ராஜேஷ் பற்றிய நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.
குணச்சித்திர வேடங்களிலும் கதாநாயகனாகவும் 150 திரைப்படத்திற்கு மேலே நடித்து பிரபலம் அடைந்த ராஜேஷின் திடீர் மரணம் சினிமா துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ஆரம்பத்தில் சின்ன கேரக்டரில் சினிமாவில் அறிமுகமானாலும் அதற்குப் பிறகு தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வந்த ராஜேஷ் சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியலிலும் நடித்திருக்கிறார்.

தமிழ் மீது ஆர்வம்
மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் ஆசிரியராக பணியாற்றிய ராஜேஷுக்கு தமிழின் மீது அதிகமான ஆர்வம். அதனாலேயே அவருடைய தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அருமையாக இருக்கும். தெள்ளத் தெளிவான கணீர் என்ற குரலோடு அவர் பேசும் பேச்சுகள் பலருக்கும் பிடித்தது தான். ராஜேஷின் திடீர் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் பலர் வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை வடிவுக்கரசி பேட்டி
அதுபோல நடிகை வடிவுக்கரசியும் ராஜேஷ் பற்றிய பல தகவல்களை ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்தியோகமாக பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் பேசும்போது ராஜேஷ் இன்று மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த வாரத்தில் எனக்கு போன் செய்தார். அப்போ கூட என்னுடைய மகனுக்கு பொண்ணு பார்த்து விட்டேன் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது, உங்களை கண்டிப்பாக திருமணத்திற்கு கூப்பிடுவேன். என்னுடைய மகன் திருமணத்தில் உங்களுக்கு விலை உயர்ந்த பட்டுப்புடவை எடுத்து தருவேன் என்று சொன்னார்.
பிறந்தநாள் வாழ்த்து
நான் அதற்கு புடவை எடுத்து தரவில்லை என்றாலும் பரவாயில்லை சார், நீங்க உங்க அன்பை என்னிடம் பகிர்ந்தது போதும் என்று சொன்னேன். அதுபோல நானும் அவரும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறோம், அந்த சூட்டிங் ஸ்பாட்டுக்கு போகும்போது எல்லாம் என்னிடம் அந்த படத்தைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்வார். அவர் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல ஒரு சிறந்த நண்பர். என்னுடைய பிறந்தநாளுக்கு நான் மறந்தால் கூட அவர்தான் எனக்கு முதல் வாழ்த்துக்கள் சொல்வார்.
கதறி அழுத வடிவுக்கரசி
ராஜேஷ் இடம் பேட்டியில் கூட நான் சண்டை போடுவது போல தான் பேசுவேன். நான் உங்களை அண்ணன் என்று சொல்ல மாட்டேன், ஏனென்றால் நீங்கள் என்னுடைய நண்பன் என்று சொல்லுவேன். உடல் நலத்தில் அவ்வளவு அக்கறை கொண்டவர். அவருடன் பழகுபவர் எல்லோருக்குமே உடல்நல குறிப்புகள் சொல்லிக்கொண்டே இருப்பார். அதுபோல அவருக்கு பல விஷயங்கள் தெரியும். அதையும் எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருப்பார். நான் இப்போது சூட்டிங்ஸ் ஸ்பாட்டில் இருப்பதால் அவருடைய உடலை கூட பார்க்க முடியாத சூழ்நிலை தான் இருக்கிறது.
உடல்நிலை பிரச்சனை
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இப்போது கூட நான் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொல்லும் போது வடிவுக்கரசி கண்கலங்கி அழுது இருக்கிறார். அதோடு அவருடைய பர்சனல் மற்றும் உடல்நிலை பிரச்சனைகளை அவ்வளவு சீக்கிரமாக யாரிடமும் பேச மாட்டார். அவருக்கு கடந்த வருடத்தில் ஓபன் சர்ஜரி செய்திருந்தது.
சோகத்தை காட்டாதவர்
அப்போது அவருடைய உடல்நிலை குறித்து அவருடைய மகளிடம் மட்டும்தான் பகிர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன். அவருடைய மகனுக்கு கூட அவருடைய உடல்நிலை குறித்து தெரியாது. அவர் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். தன்னுடைய சோகத்தை அடுத்தவர்களிடம் சொல்லி அவர்களை கஷ்டப்படுத்த விரும்ப மாட்டார் என்று வடிவுக்கரசி நடிகர் ராஜேஷ் பற்றி கண் கலங்க பேசி இருக்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications