ராஜேஷுக்கு இதை செய்திருந்தா உயிர் பிழைச்சிருப்பாரே! சித்தா டாக்டர் 2 மணி நேரம் பேசிட்டே இருந்துட்டாரு! கதறி அழுத தம்பி
சென்னை: சினிமா துறையில் பல திறமைகளோடு சிறந்து விளங்கிய நடிகர் ராஜேஷ் நேற்று காலையில் உடல்நல குறைபாட்டால் காலமானார். அவருடைய கடைசி நேரத்தில் அவர் விருப்பத்தின் பேரில் ஒரு சித்தா டாக்டரை நாங்கள் அழைத்ததால் அவர் உயிர் போயிடுச்சு, அவரை நாங்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருந்தா, இப்போ உயிரோடு இருந்திருப்பாரு என்று ராஜேஷின் தம்பி கதறி அழுதிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
தமிழ் திரை உலகில் தமிழ் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளில் 45 ஆண்டுகளில் 180 திரைப்படங்களுக்கு மேலாக நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் ராஜேஷ். கதாநாயகனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் வில்லனாகவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதுபோல பல சீரியல்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். டப்பிங் கலைஞர், புத்தக எழுத்தாளர், ஜோதிடர் என்று பல திறமைகள் கொண்ட ராஜேஷின் உயிர் நேற்று அவருடைய உடலை விட்டு பிரிந்தது.

ராஜேஷின் உடல் நல பிரச்சனை
கடைசி வரை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த ராஜேஷ் பலதிரை பிரபலங்களுக்கும் ஆரோக்கியம் தொடர்பாக பல டிப்ஸ்கள் கொடுத்திருக்கிறார். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு என்ன நடந்தது என்று அவருடைய தம்பி நேற்று கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ராஜேஷின் தம்பி பேசும்போது, என்னுடைய அண்ணன் நேற்று முன்தினம் காலையிலிருந்து எல்லோரையும் ஒரு மாதிரி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். என்ன அண்ணா என்று கேட்டதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார்.
ராஜேஷ் தம்பி பேட்டி
பிறகு வழக்கம் போல இரவு சீக்கிரமாகவே தூங்க போய்விட்டார். அடுத்த நாள் காலையில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் எங்களை எழுப்பி எனக்கு பல்ஸ் குறைந்த மாதிரி இருக்கு டாக்டரை வீட்டுக்கு வர சொல்லு என்று சொன்னார். நாங்களும் அவர் சொன்ன சித்தா டாக்டரை வீட்டிற்கு வர சொல்லி போன் பண்ணுனோம். அந்த சித்தா டாக்டர் வீட்டிற்கு வந்து அண்ணனிடம் இரண்டு மணி நேரமா பேசிக்கொண்டே இருந்தாரு.
ராஜேஷின் கடைசி நொடி
அண்ணனுக்கு ரொம்பவும் ஒரு மாதிரி ஆனதும் நான் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து அண்ணனை ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தேன். ஆம்புலன்ஸில் போய்க் கொண்டிருக்கும் போது அண்ணனுடைய கண்கள் மேலே சொருக ஆரம்பித்துவிட்டது. அது எங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. சிறிது நேரத்திலேயே அண்ணனுடைய உயிர் உடலை விட்டு பிரிந்து விட்டது. அண்ணனை நாங்கள் சீக்கிரமாக ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருந்தால் அவர் உயிரோடு இப்போது இருந்து இருப்பார் என்று எங்களுக்கு தோன்றுகிறது.
மகன் திருமணம்
அந்த டாக்டர் அண்ணனிடம் சும்மா பேசிக்கொண்டே இருந்துட்டாரு. அந்த டாக்டர் அண்ணனுக்கு ரொம்பவும் தெரிஞ்சவர் என்பதால் எங்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அண்ணன் பலருக்கு அட்வைஸ் செய்வார். கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு போக விடாமல் செய்துவிட்டார். அதனால் தான் அவருடைய உயிர் இப்போது இல்லை. அண்ணனுக்கு அவருடைய மகனின் திருமணத்தை நடத்தி பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது.
நண்பர்களின் கருத்து
கடந்த வாரத்தில் தான் அண்ணன் மகனுக்கு பெண் பார்த்து முடித்திருக்கிறார். அடுத்த மாதத்தில் திருமணம் நடப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படி ஆகிவிட்டது என்று கண் கலங்க ராஜேஷின் தம்பி பேசி இருக்கிறார். மறைந்த நடிகர் ராஜேஷுக்கு கடந்த வருடத்தில் தான் இதயத்திற்கான ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்தது. ராஜேஷ் பற்றி அவருடைய நண்பர்கள் பேசும்போது ராஜேஷ் எப்போதும் வெளியே சாப்பிட மாட்டார், ஒரு ஸ்பூன் தண்ணி என்றால் கூட அதை வீட்டில் இருந்து தான் கொண்டுட்டு வருவாரு. உடல் ஆரோக்கியத்தில் ரொம்பவும் கவனமா இருப்பாரு என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் அவர் செய்த சிறு தவறால் அவருடைய உயிரே போய்விட்டதே என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications