Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் ராஜேஷின் மகனும் நடிகர் தான்! அதுவும் இந்த படத்தில் தான் ஹீரோ.. படம் வெளியாகும் முன்பு நடந்த துயரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகரான ராஜேஷ் நேற்று (மே 29) உடல்நல குறைப்பாட்டால் காலமானார். அவருடைய ஒரே மகனான தீபக் ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் ஆக நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தை ராஜேஷுக்கு மட்டும் தான் போட்டு காண்பிக்கப்பட்டு இருக்கிறதாம். ஆனால் அந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு, ராஜேஷ் இறந்துவிட்டார் என்று அவருடைய மகன் தீபக் கண் கலங்க பேசி இருக்கிறார்.

நடிகர் ராஜேஷ் நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட், எழுத்தாளர், ஆசிரியர், பிசினஸ்மேன் என்று பல திறமைகளை கொண்டிருந்தார். அவருடைய சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தான். காரைக்குடியில் அழகப்பா கல்லூரியில் பியூசி படிப்பை முடித்துவிட்டு அதற்கு பிறகு பச்சையப்பா கல்லூரியில் படித்திருக்கிறார். நடிகர் ஆவதற்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய ராஜேஷின் தமிழ் பேச்சு தெள்ளத் தெளிவாக இருக்கும்.

Rajesh Tamil actor

நடிகர் ராஜேஷ் முதல் திரைப்படம்

கணீர் என்ற குரலோடு ராஜேஷ் பேசும் வார்த்தைகள் கம்பீரமாக இருக்கும். அதுவே அவருடைய தனி அடையாளமாகவும் இருந்தது. முதல் திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் சினிமாவில் அறிமுகம் ஆனாலும் "கன்னி பருவத்திலே" என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக நடிக்க தொடங்கி இருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் ராஜேஷ் நடித்துக் கொண்டிருந்தார். 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நடிகர் ராஜேஷின் திறமை

நான் நடிச்சா ஹீரோவா தான் நடிப்பேன் என்று பிகு செய்யாமல் எனக்கு வில்லனாகவும் நடிக்க முடியும், கதாநாயகனாகவும் நடிக்க முடியும் என்று மாஸ் காட்டி இருப்பார். கடைசியாக நடிகர் விஜய் சேதுபதி நடித்த மேரி கிறிஸ்மஸ் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல இவருடைய நடிப்புக்கு பல திரைப்படங்களை அடையாளமாக சொல்லலாம். அதிலும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் காமராஜ் என்ற நேர்மையான ஆசிரியராக நடித்திருந்தார். அந்த கேரக்டர் பலருடைய பாராட்டைப் பெற்றது.

நடிகர் ராஜேஷ் நடித்த சீரியல்

தொடர்ந்து சினிமா மற்றும் சீரியலில் நடித்துக் கொண்டு இருந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் டைகர் மாணிக்கம் என்று கேரக்டர் இவருக்கு சின்ன திறையிலும் பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதுபோல இப்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். நடிகர் ராஜேஷுக்கு 1983 ஆம் ஆண்டு சில்வியா என்பவருடம் திருமணம் நடைபெற்றது. சில்வியா ராஜேஷின் அக்கா மகள் தான். இருவருக்கும் 12 வயது வித்தியாசத்தில் திருமணம் நடைபெற்றது.

கதாநாயகனான நடிகர் ராஜேஷ் மகன்

இந்த தம்பதிக்கு திவ்யா மற்றும் தீபக் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அதுபோல ராஜேஷின் மனைவி சில்வியா கடந்த 2011 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். ராஜேஷின் மகன் தீபக் 2014 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார். அவருக்கு இப்போது 35 வயதாகிறது. இந்த நிலையில் ராஜேஷின் மறைவு குறித்து தீபக் கண்கலங்க பேசியிருந்தார்.

ராஜேஷ் மகன் தீபக் பேட்டி

அதில் தீபக் பேசும் போது, என்னுடைய அப்பா ஒரு சினிமா மற்றும் குடும்பம் இரண்டையும் சரிசமமாக மேனேஜ் பண்ணி கொண்டு வந்தார். அவருக்கு எப்போதுமே என்னை நினைத்து அதிக கவலை இருந்தது. நான் எப்படியாவது நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நான் "லக்கா மாட்டிக்கிச்சு" என்ற ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தேன். அந்த திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.

ராஜேஷ் மகன் நடித்த திரைப்படம்

நான் நடித்த படத்தை என்னுடைய அப்பாவிற்கு மட்டும் போட்டு காட்டி இருந்தேன். அதற்கு காரணம் என்னுடைய அப்பா அவருடைய மகன் என்று என்னை முழுமையாக பெருமையாக பேச மாட்டார். நான் சின்ன தப்பு செய்து இருந்தாலும் அதை சுட்டிக் காட்டுவார். அதற்காகத்தான் நான் என்னுடைய அப்பா இந்த படத்தை பார்த்து ஒப்பினியன் சொல்ல வேண்டும் என்று சொன்னேன். படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னார் டப்பிங்கில் இன்னும் சிறப்பாக பேச வேண்டும் என்று சில இடங்களில் எனக்கு குறிப்பிட்டு அடையாளப்படுத்தினார்.

Rajesh Tamil actor

கதறி அழுத ராஜேஷ் மகள்

அப்பா சொன்ன குறைகளை அடுத்த படத்தில் திருத்திக்கொள்கிறேன் என்று சொல்லி இருந்தேன். அந்த படம் வெளியாவதற்கு முன்பு அப்பாவுக்கு இப்படி ஆகிவிட்டது, எனக்கு வருத்தமாக இருக்கிறது. அடுத்த வாரத்தில் எனக்கு எங்கேஜ்மென்ட் நடக்க இருந்தது. அதற்காக அப்பா ரொம்ப ஆசைப்பட்டார், என்னுடைய என்கேஜ்மென்ட் டிரஸ் கூட அப்பா தான் பார்த்துக்கிட்டு இருந்தாரு. உன்னை நல்ல நிலைமைக்கு கொண்டு வராமல் நான் போக மாட்டேன் உன் கல்யாணத்தை நான் சந்தோஷமா பார்ப்பேன் என்று சொல்லி இருந்தார் என பேசும்போதே நடிகர் ராஜேஷ் மகன் தீபக் கண் கலங்கி அழுது இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+