ரஜினிகாந்தை அந்த விஷயத்துக்காக செந்தாமரை ரொம்பவே திட்டி இருக்கிறார்.. மனம் திறந்த நடிகை கௌசல்யா
சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகை செந்தாமரையின் மனைவி தன்னுடைய கணவர் மற்றும் அவருடைய நண்பர்கள் குறித்து பல தகவல்களை கூறியிருக்கிறார்.
நடிகர் செந்தாமரையும் நடிகர் ரஜினிகாந்த் நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கின்றனர். அவர்களுக்குள் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து தற்போது நடிகர் செந்தாமரையின் மனைவி பேசி இருக்கிறார்.

நெருங்கிய நண்பர்கள்:
இது நடிப்பா? நிஜமா? என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவில் ஒரு சில நடிகர்கள் ரசிகர்களின் மனதில் ஆழமான ஒரு இடத்தை பிடித்து விடுகிறார்கள். அந்த மாதிரி ஒரு நபர் தான் பழம்பெறும் நடிகர் செந்தாமரை இவர் வில்லனாக குணச்சித்திர கேரக்டரிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 450 திரைப்படங்களுக்கு மேலாக இவர் நடித்திருந்தாலும் அதிகமான திரைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்தோடு நடித்திருக்கிறார். ரஜினிகாந்த்க்கு வில்லனாக நடித்து பெயர் வாங்கிய செந்தாமரை நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம் தான்.
நட்பு தொடங்கியது:
நடிகர் ரஜினி வந்து செந்தாமரை மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு, பொல்லாதவன், பணக்காரன் என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படங்களில் இவரை இருவருடைய நடிப்பையும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தத்ரூபமாக நடித்திருப்பார்கள். இந்த நிலையில் இவர்கள் இருவருடைய நட்பு மற்றும் சண்டைகள் பற்றி நடிகர் செந்தாமரையின் மனைவி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் ஒருமுறை கவிக்குயில் என்கிற படத்தில் இருவரும் ஒன்றாக நடித்துக் கொண்டிருக்கும் போது செந்தாமரை சாதாரண மது அருந்தி கொண்டிருந்தாராம். அப்போது அங்கே வந்த ரஜினி இதை குடித்து உடம்பை கெடுத்துக்காத என்று விலை உயர்ந்த மது பாட்டிலை கொடுத்து குடிக்க சொன்னாராம். அதற்கு செந்தாமரை மறுத்து, நீ இன்று மட்டும் தருவ தினமும் இதை என்னால் குடிக்க முடியாது வேண்டாம் என்று மறுத்தாராம். பிறகு ரஜினி செந்தாமரையே சமாதானம் செய்து இருக்கிறார். அன்று முதல் இவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகமாக தொடங்கியது என்று கூறி இருக்கிறார்.

ரஜினியோடு சண்டை
செந்தாமரையின் வீட்டில் வீட்டு பிரச்சனை கொஞ்சம் இருந்திருக்கிறது. அப்போது அந்த நேரத்தில் 25 ரூபாய் கொடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு உதவி செய்தாராம். அதை இப்பவும் எங்களால் மறக்க முடியாது என்று கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிக்காக மற்றும் செந்தாமரைக்கு இடையே சில பிரச்சனைகளும் இருந்திருக்கிறது. ரஜினிகாந்த் செய்தது தப்பு என்று ரொம்பவே சத்தம் போட்டு திட்டி இருக்கிறார். அதை குறித்து முத்துராமன் தன்னிடம் கூறினார். இப்படியெல்லாம் செந்தாமரை ரஜினியை திட்டுகிறாரே அவ்வளவு உரிமையாக பேசுகிறார் என்று கூறினார். அந்த அளவிற்கு இருவருக்கும் இடையே நட்பு இருந்தது என்ற பெருமையாக செந்தாமரையின் மனைவி பேசியிருக்கிறார்.

அற்புதமான நடிப்பு:
அதோடு மட்டுமல்ல தம்பிக்கு எந்த ஊரு என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் மிரட்டும் கேரக்டராக செந்தாமரை இருப்பார். அப்போது ரஜினிகாந்த் அவ்வளவு பவ்யமாக நடித்திருப்பார். அதுவெல்லாம் காமெடியாக இருந்தாலும் அது வேற லெவல் இருவரும் நடித்த முடித்ததும் கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார்கள். அதைத் தொடர்ந்து மூன்று முகம் என்ற திரைப்படத்திலும் இருவரும் ஒன்றாகவே நடித்து இருந்தார்கள். அந்த திரைப்படத்திலும் இருவருடைய நடிப்பும் பாராட்டும் விதத்தில் இருந்தது. அதிலும் ரஜினியை சொல்ல வேண்டாம் அந்த அளவிற்கு நடித்து இருப்பார். இருவரும் போட்டி போட்டு நடித்து கடைசியில் இருவருக்கும் அதிகமான பாராட்டும் கிடைத்தது என்று பல நிகழ்வுகளை நடிகை கௌசல்யா நினைவுபடுத்தி இருக்கிறார்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
Blast Day 1 Collection: அர்ஜுனின் பிளாஸ்ட் படத்திற்கு முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா? -
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications