முனீஸ் ராஜாவை பிரிய காரணம்! 2 கல்யாணம்.. “அந்த” பிரச்சனை.. ராஜ்கிரண் இப்படினு நினைக்கல.. வளர்ப்பு மகள் பகீர்
சென்னை: நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா கடந்த 2002 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகரான முனீஸ் ராஜா என்பவரோடு தான் திருமணம் செய்து விட்டதாக வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இப்போது அவரை பிரிந்து விட்டதாகவும் அதற்கான காரணம் என்ன என்பது பற்றி பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.
அதில் முனீஸ் ராஜாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்து இருக்கிறது என்றும் தான் அவருடைய அதிகாரப்பூர்வமான மனைவி கிடையாது என்றும் அதில் பேசியிருக்கிறார். அதோடு நடிகர் ராஜ்கிரண் பற்றியும் பல விஷயங்களை பிரியா பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் பல நடிகர்கள் நடிகைகள் சினிமாவில் முக்கிய இடத்தில் இருந்தாலும் அவர்களுடைய குடும்ப பிரச்சனைகள் வெளியே வரும்போது தான் இவர் வீட்டில் இப்படி ஒரு பிரச்சனையா என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அந்த மாதிரிதான் சில வருடங்களுக்கு முன்பு ராஜ்கிரணின் குடும்ப பிரச்சனை விஸ்வரூபமாக வெடித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
அதாவது ராஜ்கிரணின் மகள் பிரியா சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் முனிஸ் ராஜா என்பவரை திருமணம் செய்துவிட்டார் என்ற செய்திகள் வைரலாகி வந்த நிலையில் ராஜ்கிரண் பிரியா என்னுடைய மகள் கிடையாது வளர்ப்பு மகள் தான். அந்த சீரியல் நடிகர் ப்ரியாவை திருமணம் செய்ததற்கு காரணம் பணம் தான் பணத்துக்காக தான் அவர் பிரியாவை காதல் என்ற போர்வையில் ஏமாற்றி இருக்கிறார் அதோடு எந்த இடத்திலும் அவர் என்னுடைய பெயரை பயன்படுத்தக்கூடாது என்று நீண்ட விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் சில வருடங்கள் கழித்து இப்போது பிரியா முனீஸ் ராஜாவை பிரிந்து விட்டதாக திடீர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதோடு பிரியா முனீஸ் ராஜாவை திருமணம் செய்திருந்த நிலையில் தன்னை ராஜ்கிரணின் குடும்பத்தினர் கஷ்டப்படுத்துவதாகவும் தன்னுடைய தந்தை தனக்கு போட்ட நகைகளை கூட தராமல் வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இப்படியான நிலையில்தான் இப்போது முனீஸ் ராஜாவை பிரிந்த பிறகு பல விஷயங்களை. பிரியா பகிர்ந்து இருக்கிறார். அதாவது முனீஸ் ராஜாவை தான் பிரிந்ததற்கான காரணம் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை வீணாக போனதுதான். அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் முடிந்திருப்பதாக அவர் என்னிடம் சொல்கிறார். நான் அவருடைய அதிகாரப்பூர்வமான மனைவி கிடையாது என்றும் என்னிடம் சொல்கிறார்.
நீ நினைத்து ஆசைப்பட்ட வாழ்க்கை உனக்கு கிடைச்சிருச்சு ஆனால் நான் ஆசைப்பட்ட வாழ்க்கை எனக்கு கிடைக்கல எனக்கு பணம் காசு வேண்டும் என்று அடிக்கடி என்னிடம் சொல்கிறார். நான் என்னுடைய உறவினர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்து முனீஸ் ராஜாவுக்கு கொடுக்க வேண்டும் என்று அவர் நினைத்துதான் என்னை திருமணம் செய்து இருக்கிறார். ஆனால் நான் அப்படி செய்யவில்லை என்பதால் அவர் அடிக்கடி குடிச்சிட்டு வந்து என்னை அடிக்கிறார்.
குடிச்சிட்டு வந்தால் அவர் அவராகவே இருக்க மாட்டார். ரொம்பவே மாறி விடுவார். அதனால் நான் ஆரம்பத்தில் அவரை திருத்தி விடலாம் என்று முயற்சி எடுத்தேன். பிறகு அந்த முயற்சி எல்லாம் வீணாக போன பிறகு மன அழுத்தத்தில் நான் இருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு மருத்துவ ரீதியாகவும் பணரீதியாகவும் உதவி செய்தது என்னை வளர்த்த ராஜ்கிரண் அப்பா தான். அவர் மட்டும் இல்லை என்றால் என் நிலைமை எப்படியோ ஆகியிருக்கும்.

நான் அவருக்கு செய்த துரோகத்தை கூட அவர் மன்னித்து எனக்காக உதவி செய்திருக்கிறார் என்று அந்த பேட்டியில் பிரியா பேசியிருக்கிறார். அதோடு முனீஸ் ராஜா நீ என்னை பிரிந்து சென்று விட்டாய் என்னை பற்றி எல்லோரும் கேவலமாக பேசுவார்கள் அதனால் உன்னை பற்றியும் உன்னுடைய அம்மாவை பற்றியும் நான் தவறாக பேசுவேன் என்று சொல்கிறார். அதுபோல எனக்கு உதவி செய்த நடிகர் என்டிஆர் மனைவியையும் நான் கேவலப்படுத்துவேன் என்று அவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சில குற்றசாட்டுகளையும் பிரியா வைத்திருக்கிறார்.
அதோடு திருமணமான ஒரு மாதத்திற்குள்ளேயே எங்களுக்குள் பிரச்சனை வர தொடங்கி விட்டது. நான் சில டிவி நிகழ்ச்சிகளில் கூட அவரோடு கலந்து கொண்டேன். ஆனால் நிகழ்ச்சியில் மட்டும்தான் நான் சந்தோஷமாக பேசியிருக்கிறேனே தவிர வீட்டிற்கு வந்ததும் உடனே நாங்கள் சண்டைதான் போடுவோம். அவர் எப்போதும் பணம் வேண்டும் என்று என்னை கொடுமைப்படுத்திக் கொண்டே இருந்தார் என்று அந்த பேட்டியில் பிரியா பேசியிருக்கிறார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications