சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை பிரிய காரணமே இதுதான்.. நடிகர் ராஜ்கிரண் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் அவரை எதற்காக பிரிந்தேன் என்று தற்போது பல குற்றச்சாட்டுகளைகூறி இருக்கிறார். அதில் முனீஸ் ராஜா மட்டுமல்லாமல் அவருடைய அம்மாவும் என்னை அடித்து கொடுமை படுத்தினார்கள் என்றும் அதற்கான காரணத்தையும் பிரியா பகிர்ந்து இருக்கிறார்.

நடிகர் ராஜ்கிரண் இயக்குனராகவும் பல வருடங்களாக சினிமாவில் பிரபலமாக இருக்கிறார். அதே நேரத்தில் சமுதாயத்திலும் நல்ல மரியாதை இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் தான் கடந்த 2022 ஆம் ஆண்டு அவருடைய வளர்ப்பு மகள் பிரியா சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலமாக பிரபலமடைந்த நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

Television sun tv Rajkiran

அப்போது ராஜ்கிரண் பிரியா தன்னுடைய சொந்த மகள் இல்லை என்றும் வளர்ப்பு மகள் தான் என்றும் கூறியிருந்தார். அதோடு அந்த சீரியல் நடிகர் தன்னுடைய வளர்ப்பு மகளை திருமணம் செய்தது சொத்துக்காக தான். இனி அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் சினிமா வட்டாரத்தில் என்னுடைய பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்குப் பிறகு பிரியா மற்றும் முனீஸ் ராஜா ஒரு பல இன்டர்வியூகளில் கலந்து கொண்டு இருந்தார்கள்.

அதுபோல ஜீ தமிழ் நிகழ்ச்சியில் இவர்களுடைய திருமணத்தையும் நடத்தி இருந்தனர். இப்படியான நிலையில் கடந்த வருடத்தில் பிரியா தான் முனீஸ் ராஜாவை பிரிந்து விட்டதாகவும் அவர் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துகிறார் தன்னிடம் தன்னுடைய அப்பா அம்மாவிடம் நகை பணம் வாங்கிட்டு வர சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார். எனக்கு சாப்பாட்டுக்கு கூட காசு தராமல் கொடுமைப்படுத்தினர் என்னுடைய அப்பா தான் சிலர் மூலமாக எனக்கு சில உதவிகளை செய்து இருக்கிறார்கள் என்று பேசி இருந்தார்.

அதற்குப் பிறகு தான் முனீஸ் ராஜாவை விட்டு பிரிந்து வந்து விட்டேன் இனி அவரோடு சேர்ந்து வாழ மாட்டேன். தன்னுடைய தந்தை மற்றும் அம்மாவின் அன்பை புரிந்து கொண்டேன். இனி நான் அவர்களை விட்டு போக மாட்டேன் என்றும் பிரியா பேசியிருந்தார். இந்த நிலையில் பிரியா இப்போது மீண்டும் முனீஸ் ராஜா மீது சில குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கிறார். அதாவது திருமணத்திற்கு பிறகு என்னுடைய அம்மா அப்பா என்னிடம் ஆரம்பத்தில் பேசவில்லை.

ஆனால் கொஞ்ச நாட்கள் போன பிறகு என்னுடைய அம்மா என்னிடம் பேச தொடங்கினார். அப்போது முனீஸ் ராஜாவின் அம்மா, உங்க அம்மா பேச ஆரம்பிச்சிட்டாங்களே நீ நகை பணம் எல்லாம் வாங்கிட்டு வா அவங்க கொஞ்சம் கொஞ்சமா உனக்கு பணம் தந்துட்டு இருக்கிறது நம்ம குடும்பத்துக்கு போதாது. உங்க அம்மாவிடம் 100 பவுன் நகை வாங்கிட்டு வா என்று எனக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தார். என்னுடைய மாமியார் என்னை கெட்ட வார்த்தையால் தீட்டிக்கொண்டே இருப்பார்.

அந்த கெட்ட வார்த்தையை சொல்லித்தான் என்னை கூப்பிடவே செய்வார். நான் நகை கொண்டு வரவில்லை என்ற ஆதங்கம் அவர்களுக்கு அதிகமாக இருந்தது. அதனால் எங்க அம்மா என்னிடம் பேச தொடங்கியதும் உங்க அம்மாவிடம் இருந்து நகையை வாங்கிட்டு வா என்று அவர்கள் என்னை திட்டிக் கொண்டிருந்தார்கள். கையில் கிடைக்கும் பொருட்களை தூக்கி எல்லாம் முனீஸ் ராஜாவும் என்னை அடிப்பார். அதுபோல முனுஷ் ராஜாவின் அம்மாவும் என் மீது பொருள்களை தூக்கி வீசி அடித்திருக்கிறார்.

அதற்கு முனீஸ் ராஜா நகை வாங்கிட்டு வந்தால் எங்க அம்மா உன்னை அடிக்க மாட்டாங்க என்று என்னிடம் சொன்னார். அதற்கு பிறகு தான் நான் இந்த வாழ்க்கை நமக்கு சரி இல்லை என்று அதிலிருந்து விலகி விட முடிவெடுத்தேன் என்று பிரியா பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+