ராஜ்கிரண், வளர்ப்பு மகள் திருமணத்தில் அப்பவே சொன்னது தான் நடந்ததா? ஒரு வருடத்தில் பிரிய காரணம்!
சென்னை: நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா சின்னத்திரை நடிகரான முனீஸ் ராஜா என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்திருந்தார். தங்களுடைய திருமணத்தை வீடியோ மூலமாக ரசிகர்களிடம் தெரிவித்திருந்த நிலையில் அதை தொடர்ந்து ராஜ்கிரண் தரப்பில் இருந்து அவர் என்னுடைய மகளே கிடையாது என்று பதிவு வெளியிட்டிருந்தார்.
அதோடு அந்த சீரியல் நடிகர் என்னை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்திருக்கிறார். அவருக்கு பணம் தான் முக்கியம் பணத்திற்காக தான் இப்படி திருமண நாடகம் போடுகிறார் என்றும் அந்த பதிவில் ராஜ்கிரண் குறிப்பிட்டு இருந்தார். அதை பிரியா மறுத்திருந்தார். நாங்கள் இருவரும் உண்மையாக காதலிக்கிறோம். எங்களை வெறுத்தவர்கள் முன்பு நன்றாக வாழ்ந்து காட்டுவோம் என்று அந்த நேரத்தில் சில பேட்டிகளிலும் பிரியா மற்றும் நடிகர் முனீஸ் ராஜாவும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று பிரியா கண்ணீரோடு கையெடுத்து கும்பிட்டபடி உருக்கமாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. ஆனால் ஆரம்பத்தில் இதே பிரியா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தான் காதலித்த நபரை திருமணம் செய்து விட்டேன், என்னுடைய காதல் வாழ்க்கையில் உறுதியாக இருந்ததால் தான் நான் குடும்பத்தை மீறி திருமணம் செய்திருக்கிறேன் என்று பிரியா ஆரம்பத்தில் பேசி இருந்தார்.
அதோடு ஃப்ரியாவிற்கும் முனீஸ் ராஜாவிற்கும் facebook மூலமாகத்தான் அறிமுகம் ஆகி இருந்தது. ஆரம்பத்தில் நட்பாக பழகி பிறகு காதலிக்க தொடங்கி இருந்தனர். இவர்களுடைய காதல் பிரச்சனை முதலில் இரண்டு வீட்டிற்கும் தெரிய வந்ததும் இரண்டு வீட்டார்களும் மறுப்பு தெரிவிக்க, இதனால் முனீஸ் ராஜா பிரியாவை பிளாக் செய்துவிட்டாராம். ஆனால் தொடர்ந்து பிரியா முனீஸ் ராஜா வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்ததால் முனீஸ் ராஜா பிறகு சம்மதம் தெரிவித்தார் என்று ஏற்கனவே பேட்டிகளில் பிரியா தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இவர்களுடைய திருமண விஷயம் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. அந்த நேரத்தில் அனைவருமே இது ராஜ்கிரணின் மகள் என்று சொல்லி வந்த நிலையில் அதற்கு ராஜ்கிரண் அந்த பிரியா என்னுடைய மகளே கிடையாது என்னுடைய வளர்ப்பு மகள் தான் என்று ஒரு நீண்ட பதிவு வெளியிட்டிருந்தார். அதில் அந்த சின்னத்திரை நடிகர் என்னுடைய வளர்ப்பு மகளை ஏமாற்றி காதலித்து திருமணம் செய்து இருக்கிறார் என்றும், என்னுடைய பெயரை எந்த இடத்திலும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் அதில் விளக்கமாக ஒரு அறிக்கையை கொடுத்திருந்தார்.
இதற்கு சீரியல் நடிகர் முனீஸ் ராஜா என்னை ராஜ்கிரண் சார் என்னை கூப்பிட்டு அடித்திருந்தால் கூட நான் அதை ஏற்றுக் கொண்டு இருப்பேன். ஆனால் நான் பணத்திற்காக தான் அவருடைய வளர்ப்பு மகளை திருமணம் செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அது எனக்கு ரொம்பவும் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. நான் பிரியாவை மனப்பூர்வமாக காதலிக்கிறேன் எங்களுடைய திருமணம் எளிமையாக முடிவடைந்தது. ஆனால் நான் ப்ரியாவிற்காக ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன்.
அந்த வீட்டு வேலை முடிந்ததும் பிரியா நினைத்த மாதிரி அவருக்கு ஒரு பிசினஸ் தொடங்கி கொடுப்பேன் என்றெல்லாம் அந்த நேரத்தில் பேசி இருந்தார். அதுபோல அந்த நேரத்தில் முனீஸ் ராஜா ஜீ தமிழில் நடித்துக் கொண்டிருந்ததால் அவருக்கு சேனல் தரப்பில் இருந்தும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் அந்த எபிசோடுகளை ஒளிபரப்ப கூடாது என்று ராஜ்கிரண் தரப்பில் இருந்து மிரட்டல் விடுத்ததாகவும் கூட கூறப்பட்டது. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
இப்படியான நிலையில் தான் ஒரு வருடம் முடிவதற்குள் இன்று பிரியா கண்ணீரோடு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் 2022 ஆம் ஆண்டு முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டேன் என்பது மீடியா மூலம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அந்த திருமணத்திற்கு பிறகு நாங்கள் பிரிந்து விட்டோம். நாங்கள் இப்போது இருவரும் சில மாதங்களாக பிரிந்து தான் இருக்கிறோம். எங்களுடைய திருமணம் சட்டபூர்வமான திருமணம் கிடையாது.

இந்த திருமணத்தினால் நான் என்னை வளர்த்த அப்பாவை ரொம்பவே கஷ்டப்படுத்தி இருக்கிறேன். அவரை நான் கஷ்டப்படுத்தி இருந்தாலும் எனக்கு ஒரு பிரச்சனை வந்த போது அவர் என்னை கைவிடாமல் காப்பாற்றி இருக்கிறார். அவர் எனக்காக செய்த செயல் நான் எதிர்பார்க்காத கருணை, மன்னிச்சிருங்க டாடி என்று கைகூப்பி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ஏற்கனவே ஃப்ரீயா முனீஸ் ராஜாவை திருமணம் செய்த பிறகு தன்னுடைய சொந்த அப்பா தனக்கு கொடுத்த நகைகளை ராஜ்கிரணும் தன்னுடைய அம்மாவும் வைத்துக்கொண்டு தர மாட்டேன் என்கிறார்கள் என்று கூட போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார்.
அதனால் இப்போது பிரியா மற்றும் முனீஸ் ராஜாவிற்கு இடையே ராஜ்கிரண் சொன்ன மாதிரி பண பிரச்சனை வந்திருக்கிறதா என்றும் பலர் கொளுத்தி போட்டு வருகிறார்கள். இது குறித்து சீரியல் நடிகர் முனீஸ் ராஜா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அவர் இது பற்றி விளக்கம் கொடுத்தால் தான் உண்மை என்ன என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications