வீட்டுக்குள்ளேயே மூன்று தெய்வங்களுக்கு கோவில் கட்டிய ராஜ்கிரண்.. வியக்க வைத்த காரணம்
சென்னை: நடிகர் ராஜ்கிரண் தன்னுடைய மாமியாருக்காக வீட்டில் மூன்று கடவுள்களுக்கு கோவில் கட்டி வைத்திருக்கும் நிலையில் அதற்கான காரணம் பற்றி சமீபத்தில் ராஜ்கிரண் மனைவி ஒரு ஹோம் டூர் வீடியோவில் பேசியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் ராஜ்கிரணுக்கு அறிமுகமே தேவை இல்லை. ஆரம்பத்தில் இயக்குனராகவும் பிரபலமடைந்து இருந்த நிலையில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க யோசித்த கேரக்டரில் நடித்து பெரிய அளவில் நடிகராகவும் பிரபலமடைந்தார். அன்று மட்டுமல்ல இப்ப வரைக்கும் முன்னணி நடிகராகவே தொடர்ந்து கொண்டிருக்கிறார். அதிலும் தான் நடிக்கும் திரைப்படங்களில் மதிப்புமிக்க கேரக்டர்களில் நடித்து வரும் ராஜ்கிரணுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

கதாநாயகனாக நடித்து வந்த ராஜ்கிரண் இப்போது தாத்தா கேரக்டரில் நடித்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் கேரக்டர்களிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் அவர் நடித்த என் ராசாவின் மனசிலே என்ற படம் 80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் திரைப்படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அதிலும் அவருடைய பாடல்கள் ஹிட் லிஸ்டில் இருக்கிறது.. கதாநாயகனாக ராஜ்கிரண் நடித்த முதல் திரைப்படமே அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது, வெற்றி விழாவும் கண்டது.
மேலும் அவருக்கு தமிழக அரசு விருதும் கிடைத்தது. முதலாவது நடித்த படம் மாஸ் ஹிட் அடித்ததால் ராஜ்கிரணுக்கு மவுஸ் ஏறியது. பிறகு இயக்குனராக அவதாரம் எடுத்த ராஜ்கிரணுக்கு அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசா தான் போன்ற படங்கள் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்து விட்டது. அதுபோல சொந்த வாழ்க்கையில் ராஜ்கிரணின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.
அதற்கு பிறகு ஜோதி என்பவரை திருமணம் செய்திருந்தார். இவருக்கு ஜீனத் பிரியா என்ற மகள் இருக்கும் நிலையில் நைனார் முகமது என்ற மகனும் ராஜ்கிரனுக்கு இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு ஜீனத் சீரியல் நடிகர் முனீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த செய்திகள் இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்குப் பிறகு ஜீனத் அந்த நடிகரை பிரிந்து வந்ததும் ராஜ்கிரண் அவரை முழுமனதோடு ஏற்றுக்கொண்டார்.
தன்னுடைய மகள் சின்ன தப்பு செய்துவிட்டார். இப்போது அவளுக்கு வாழ்க்கையை பற்றி புரிந்து விட்டது ஆனால் நான் என்னுடைய மகளை விட்டு விட முடியாது என்று பேட்டிகளில் பேசியிருந்தார். இந்த நிலையில் ராஜ்கிரணின் ஹோம் டூர் வீடியோ ஒன்று தனியார் youtube சேனலில் வெளியாகியிருக்கிறது. அது இணையத்தில் பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அதில் ராஜ்கிரணின் மனைவி அவருடைய பிரம்மாண்ட வீட்டை சுற்றி காட்டி இருக்கிறார்.
அந்த வீட்டில் அதிகமான மரங்கள் இருக்கிறது. ராஜ்கிரண் இயற்கை மீது கொண்ட அன்பால் அந்த மரங்களோடு பேசிக்கொள்வார் என்று அவருடைய மனைவி கூறி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அந்த வீட்டிற்குள்ளேயே ஒரு கோவிலும் இருக்கிறது. ராஜ்கிரண் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர். ஆனால் தன்னுடைய மாமியாருக்காக ஒரு கோவிலை கட்டிக் கொடுத்திருக்கிறார்.
அவருடைய மாமியாருக்கு 100 வயதுக்கு மேலாகிறது. ஆனால் கடவுள் பக்தி கொண்டவர் என்பதால் அவருக்கு வீட்டிற்குள்ளேயே அழகிய கோவில் கட்டி கொடுத்திருக்கிறார். அந்த கோவிலில் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற மூன்று மதத்தையும் சேர்ந்த கடவுள்களை வழிபடும் வண்ணம் அமைக்கப்பட்டு இருக்கிறதாம். இது இணையத்தில் பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications