பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.. தன்னை அவமானப்படுத்திய மகள்! ஆனால் ராஜ்கிரண் சொன்ன வார்த்தை
சென்னை: நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா கடந்த 2022 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து விட்டதாக வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதோடு தன்னுடைய வளர்ப்பு தந்தை தனக்காக எதுவும் செய்யவில்லை என்னை அவர்கள் வீட்டு வேலைக்காரியாக தான் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் பேசி இருந்தார்.
ஆனால் சில மாதங்களிலேயே முனீஸ் ராஜாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை பிரிந்த ப்ரியாவிற்கு ராஜ்கிரண் பல்வேறு உதவிகளை செய்ததாக பிரியா கண்ணீரோடு ஒரு வீடியோவும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ராஜ்கிரண் மற்றும் அவருடைய மனைவி கலந்து கொண்ட போது ராஜ்கிரண் மேடையில் தன்னுடைய மகள் பிரியா குறித்து கண்கலங்க பேசியிருக்கிறார்.

இந்த வகையில் நடிகர் ராஜ்கிரண் இரண்டாவது மனைவியான கதிஜா என்ற பத்மஜாவின் மகள்தான் பிரியா. கதீஜாவிற்கு ஏற்கனவே இளங்கோவன் என்பவரோடு திருமணம் முடிந்திருக்கிறது. அவர்களுக்குள் ப்ரியா பிறந்த பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட அவரை பிரிந்த கதீஜா நடிகர் ராஜ்கிரனோடு சேர்ந்து வாழ்ந்து இருக்கிறார். அப்போது குழந்தையாக இருந்த ப்ரீயாவும் அம்மாவோடு சேர்ந்து ராஜ்கிரண் வீட்டில் தான் வசித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் facebook மூலமாக பிரியா சீரியல் நடிகர் முனீஸ் ராஜா என்பவரோடு பழக்கம் ஏற்பட முதலில் நட்பாக இருந்து பிறகு காதலாக மாறியிருக்கிறது. இவர்களுடைய காதல் இரண்டு வீட்டிற்கும் தெரிய வந்தபோது ராஜ்கிரண் தரப்பில் பிரியாவிடம் இந்த திருமணம் வேண்டாம் என்று எடுத்துக் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அதைக் கேட்காத பிரியா வீட்டை விட்டு வெளியேறி முனீஸ் ராஜாவை திருமணம் செய்து இருந்தார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் இந்த திருமணம் குறித்து அதிகமாக பேசப்பட்ட போது ராஜ்கிரண் பிரியா என்னுடைய மகள் கிடையாது என்னுடைய வளர்ப்பு மகள் தான் அவருக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த சீரியல் நடிகர் பிரியாவை உண்மையாக காதலிக்கவில்லை. பணத்திற்காக தான் காதலிப்பதாக நடித்து திருமணம் செய்து இருக்கிறார்.
இனி அவர் என்னுடைய பெயரை எந்த இடத்திலும் சொல்லி வாய்ப்புக்காக நிற்கக்கூடாது என்று அறிக்கை விட்டிருந்தார். அதைத்தொடர்ந்து பிரியா திருமணமான சில நாட்களிலேயே தன்னுடைய தந்தை இளங்கோவன் தனக்கு போட்ட நகைகள் ராஜ்கிரண் வீட்டில் இருக்கிறது. தன்னை மகள் இல்லை என்று சொன்ன பிறகு அந்த நகைகள் மட்டும் அவருக்கு எதற்கு? அந்த நகைகள் எனக்கு வேண்டும் என்று வழக்கு தொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து முனீஸ் ராஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி ப்ரீயா அவரை பிரிந்து விட்டதாகவும் தன்னுடைய தந்தைதான் தான் ஆபத்திலிருந்து போது தனக்கு உதவி செய்து தன்னுடைய உயிரை காப்பாற்றினார் என்று கண் கலங்க ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராஜ்கிரண் கலந்து கொண்ட போது அதில் பிரியா குறித்து பேசி இருக்கிறார். அதில் என்னுடைய மகளுக்கு உலகத்தை காட்டாமல் வளர்த்து விட்டேன். அதனால் அவள் ஒரு இடத்தில் மாட்டி ஏமாந்து இப்போது புரிந்து கொண்டு திரும்பி வந்து விட்டாள். அவள்தான் என்னுடைய ராசாத்தி... எங்க அம்மா... நான் அவளை ஒரு நாளும் கண்டித்து பேசியது கிடையாது. அவள் எங்க குலசாமி.
எங்க அம்மாவுக்கு அப்புறமா எனக்கு சந்தோஷத்தை கொடுத்தவள் என்று கண் கலங்க பிரியாவை அந்த மேடையில் ராஜ்கிரண் கட்டி அணைத்து உனக்காக நானும் நம்ம குடும்பமும் எப்போதும் இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதோடு ரசிகர்கள் பலரும் தன்னுடைய குழந்தை தவறு செய்து விட்டால் அப்படியே விட்டு விடாமல் ராஜ்கிரண் மீண்டும் திரும்பி வந்த குழந்தையை ஏற்றுக் கொண்டு அவருக்கு வாழ்க்கையை புரிய வைத்திருக்கிறார் என்று கருத்து கூறி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications