காமெடி நடிகர் ரமேஷ் திலக் மகன் இவ்வளவு வளர்ந்து விட்டாரா? மனைவி இந்த "பிரபலம்” தானா..!?
சென்னை: ஆர்.ஜேவாக இருந்த ரமேஷ் திலக் தற்போது முன்னணி நடிகராக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையோடு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.
அந்த புகைப்படங்களை பார்த்து ரமேஷின் மகன் இவ்வளவு வளர்ந்து விட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் ரமேஷ் திலக் சூது கவ்வும், வாயை மூடி பேசவும், டிமான்டி காலனி, ஒரு நாள் கூத்து, காக்கா முட்டை, காலா,டிக்டிக்டிக், குட் நைட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பிஎஸ்சி படித்து முடித்ததும் ஒரு கம்பெனியில் ஆபிஸராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போதுதான் மேலும் படிக்கலாம் என்று நினைத்து இவர் மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் மீடியாவை தேர்ந்தெடுத்து படித்தாராம்.
அப்போ படித்துக் கொண்டிருக்கும் போது இவரோடு இருந்த நண்பர்கள் எல்லாரும் சினிமாவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் போது இவர் இதெல்லாம் நமக்கு செட்டாகாது. நமக்கு கேமரா முன்னாடி நிற்பதற்கு கூச்சமாக இருக்கும் என்று நினைத்துதான் இவர் ஆர்ஜேவாக மாறுவதற்கு ட்ரை பண்ணிக்கொண்டு இருந்தாராம். அந்த நேரத்தில் ரமேஷுக்கு சூரியன் எஃப் எம் இல் ஆர்.ஜேவாக வேலை கிடைத்திருக்கிறது. அப்படியே வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் மூலமாக ஷார்ட் பிலிமில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
"தோட்டா என்ன விலை" என்ற ஷார்ட் பிலிமில் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டி இருக்கிறார்கள். அதை பார்த்து தான் நமக்கு தான் நன்றாக நடிப்பு வருகிறதே. நாம் ஏன் அதை ட்ரை பண்ண கூடாது என்றுதான் இவர் தன்னுடைய நண்பர்களின் உதவியோடு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டு வந்த ரமேஷ் தற்போது முன்னணி நடிகர்களான நடிகர் ரஜினி போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் இவருடைய நடிப்பும் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
காமெடியாகவும் எதார்த்தமாகவும் நடிக்கும் இவருடைய நடிப்பை பலர் பாராட்டிக் பாராட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இவரோடு சூரியன் எஃப்.எம்மில் வேலை பார்த்த ஆர் ஜே நவலெட்சுமி உடன் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறார். இந்த நிலையில் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றிருந்த தினேஷ் தன்னுடைய மனைவி மற்றும் மகனோடு சேர்ந்து புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அதிகமான ரசிகர்கள் "குட் நைட்" திரைப்படத்தில் இவருடைய நடிப்பை பற்றி பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அதோடு ஆரம்ப காலகட்டத்தில் ரமேஷ் அதிகமான திரைப்படங்களில் குடிப்பது போன்று தான் நடித்திருப்பார். அது குறித்தும் இனி அப்படி கதையை தேர்ந்தெடுக்காமல் நல்ல கதையை தேர்ந்தெடுங்கள் என்றும் ரசிகர்கள் அறிவுரைகளையும் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications