கழுத்தில் மாலையோடு ரவி மோகன் மற்றும் கெனிஷா.. சர்ச்சைகளுக்கு மத்தியில் லீக்கான போட்டோ! விஷயம் இதுதானா?
சென்னை: நடிகர் ரவி மோகன் அவருடைய தோழியான கெனிஷாவுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் தான் இப்பொழுது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. ரவி மோகன் குடும்ப பிரச்சனை சோசியல் மீடியாவில் அதிகளவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது இந்த புகைப்படங்கள் அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
ஜெயம் படத்தின் மூலமாக பிரபலமான ரவி மோகன் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்திருந்தார். ரவி மோகனின் தந்தை பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல அவதாரம் எடுத்தவர். அதே போல ரவி மோகனின் அண்ணனும் ரவி மோகனை வைத்து பல திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். ஆனால் சமீப காலமாக ரவி மோகன் நடிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை. அதே நேரத்தில் அவருடைய குடும்பப் பிரச்சனையும் பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்கிறது.

காதல் திருமணம்
ரவி மோகன் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஆனால் கடந்த வருடத்தில் ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருந்தார். ஆனால் அதற்கு ஆர்த்தி மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் சில மாதங்களாகவே மாறி மாறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.
மீண்டும் சர்ச்சை
கடந்த வாரத்தில் இவர்கள் இருவரும் மாறி மாறி வைத்த குற்றச்சாட்டு அறிக்கைகளை நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு பிறகு இருவரும் அவர்களுடைய வேலையை கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில் ரவி மோகனின் தோழியான கெனிஷா உடன் ரவி மோகன் வெளியிட்ட புகைப்படம் இப்போது இணையத்தில் மீண்டும் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
சாமி தரிசனம்
ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஜோடியாக குன்றக்குடி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அப்போது அங்கிருந்த பக்தர்களுடன் இவர்கள் இருவரும் புகைப்படங்கள் எடுத்து இருக்கின்றனர். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னைப் பற்றிய எத்தனையோ விமர்சனங்கள் வந்தாலும் கெனிஷா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அடிக்கடி சுற்றுலா செல்லும் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வந்தார்.

ரவி மோகன்- கெனிஷா புகைப்படம்
அதே நேரத்தில் தன்னை பற்றி சில ஆபாசமான கமெண்ட்டுகளுக்கு கெனிஷா அவ்வப்போது பதிலடி கொடுத்திருந்தார். அதுபோல ரவி மோகனும் புதியதாக சில போட்டோ சூட் நடத்தி கெத்தான சில புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, பேராண்மை, தனி ஒருவர் உட்பட பல ஹிட் படங்களை கொடுத்த ரவி மோகன் மீண்டும் கம்பேக் கொடுத்து பழையபடி கதை அம்சம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் கருத்தாகவும் இருக்கிறது. அதற்காக இப்போது ரவி மோகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய தொடங்கியிருக்கிறார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications